புத்தகம்: மாண்புமிகு ஆசிரியர்கள்
ஆசிரியர் : முகில்
ஆசிரியர் என்பவர் தெய்வத்திற்கு முன்பானவர் என்பதற்கு உண்மையான பொருளை தந்திருக்கிறார்கள்.
இங்கு குறிப்பிட்டிருக்கும் ஆசிரியர்கள் இந்தியாவின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஒவ்வொரு ஆசிரியர்களை பற்றி குறிப்பிட்டிருக்கிறார் .
ஆரம்பத்தில் படிக்கும் பொழுது நம் மாவட்டத்தில் யாருமே இல்லையா என்ற கேள்வி உடனே எழுந்தது. கடைசி கட்டுரையாக தோழி உமாமகேஸ்வரியின் கட்டுரை பார்த்து அத்தனை மகிழ்ச்சி .
அனேகமாக இதில் வரும் ஆசிரியர்கள் பெரும் செல்வம் படைத்தவர்கள் அல்ல. தாங்களே மிகவும் கடினமான சூழலில் படித்து வேலைக்கு வந்தவர்கள் ஆனால் அதனை உணர்ந்து தங்கள் பணியை கடனே என்று செய்யாமல் ஒவ்வொருவருக்கும் கல்வி எத்தனை முக்கியமானது என்பதை அத்தனை அர்ப்பணிப்புடன் செயலாற்றி இருக்கிறார்கள்.
கற்றலை எப்படி எல்லாம் செயல்படுத்தினால் மாணவர்கள் விருப்பத்துடன் கற்பார்கள் என்பதை ஒவ்வொரு ஆசிரியரும் தங்களின் முழு மனதுடன் செயல்படுத்திருப்பது மகிழ்வை தருகிறது. இதை நாம் ஒரு வார்த்தையில் சொல்லி முடித்து விடுகிறோம் .அதற்கான முயற்சியும் உழைப்பையும் யோசித்துப் பார்க்கும் பொழுது பிரமிப்பாக இருக்கிறது.
ஒரு நபர் கல்வியை கற்று மேம்பட்டு விட்டால் அவர் வாழ்வில் எல்லாமே கிடைத்துவிடும் என்பதை ஒவ்வொருவருமே தங்களிடம் படிக்க வந்த குழந்தைகளுக்கு அவர்கள் மனதில் எளிதாக பதிய வைத்திருக்கிறார்கள் .
இந்நேரத்தில் எனக்கு பழைய நினைவு 1978 ஆம் வருடம் எங்கள் கிராமத்தில் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே பள்ளி இருந்தது அதில் 5 வகுப்புக்களுக்கும் சேர்த்து மொத்தம் 25 மாணவர்கள் தான்.
அப்பொழுது ராம்நாட்டில் இருந்து அல்லி சொர்ணாபாய் -ராமச்சந்திரன் தம்பதிகள் இங்கு ஆசிரியர்களாக வந்தார்கள் அப்பொழுது நான் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன் முதன்முதலாக ஆங்கில அறிமுகம் .
அந்த வார்த்தைகளை அந்த ஆசிரியை அத்தனை தத்ரூபமாக விளையாட்டு மூலமாகவும் படங்கள் மூலமாகவும் ஒவ்வொரு நாளைக்கு ஒரு பூவின் பெயரையோ காய்களின் பெயரையோ வைத்து அதை ஆங்கிலத்தில் அழைத்து பேசுவார்.அப்படித்தான் ஆங்கிலத்தை எங்களுக்குச் சொல்லிக் கொடுத்தார் அவர்கள் வந்த பிறகு அப் பள்ளிக்கூடத்தில் நிறைய மாற்றங்கள் 25 மாணவர்கள் இருந்த பள்ளிக்கூடம் இரண்டு வருடங்களில் கிட்டத்தட்ட நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்தார்கள் படிப்போடு தோட்டக்கலை, ஓவியம் ,விளையாட்டு, ஒப்புவித்தல் போட்டி பிற பள்ளிகளுக்கு இடையே நடக்கும் போட்டிகளில் கலந்து கொள்ள வைப்பது போன்ற நிறைய முன்னேற்றங்களை கொண்டு வந்தார்கள் .
பள்ளி காம்பவுண்டுக்குள்ளயே கீரைகள் காய்கள் என மாணவர்களை வைத்து பயிர் செய்து அதை அவர்களுக்கே பங்கிட்டு கொடுப்பார்கள் எட்டு வயதில் நடந்த இந்த நிகழ்வு இன்று வரை பசுமையாக நினைவில் இருக்கிறது இன்று பள்ளி உயர்நிலைப் பள்ளியாக மாறி இருக்கிறது.
கேரளா மலைவாழ் மக்களின் மொழியை கற்று அதற்குப் பின் அவர்களின் நெருங்குவது என்பது சாதாரண விஷயம் அல்ல என்பதை இவர்கள் நிரூபித்திருக்கிறார்கள் தன் தன் மனைவியை இழந்து குழந்தைகளைப் பிரிந்து முதுகுடி மக்களுக்காக தன் கல்விப்பணியாற்றிய முரளிதரன் ,
அசாம் பழங்குடி குழந்தைகளுக்கான பாரிஜாதா அகாடமி உருவாக்கிய உத்தம் சந்த் , முதல் முதலாக கணக்கு பாடத்திற்கு லேப் உருவாக்கிய கர்நாடக மாநிலத்தில் யாகூப் கொய்யூர்
"கணிதம் என்பது வெறும் பார்முலாக்கள் அல்ல கற்பித்தல் என்பது கரும்பலகை யால் மட்டும் நிகழ்வது அல்ல "எத்தனை அற்புதமான வரிகள்
தனிமங்களை நினைவில் வைக்க புதுமையான உத்தியை செயல் படுத்திய முகம்மதே அலி, உதவாத ஓட்டை உடைசல் பொருட்களில் இயற்பியல் மாதிரிகளை உருவாக்கி மாணவர்களுக்கு கற்பித்த அசுதோஷ், கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளுக்காக மாற்றி யோசித்த புவனா வாசுதேவன், பாலியல்( கல்வி) விழிப்புணர்வை மாணவ, மாணவிகளிடம் பாடம் எடுத்து அக்குழந்தைகளின் மனதை திறக்க வைத்த ராஜுசாய்ன்,
பணி ஓய்வு பெற்ற பின்பும் கல்வி இடைநிற்றலைத் தவிர்க்க மாணவர்களுக்கு உதவித் தொகை பெற்று தர உழைக்கும் நாராயண் நாயக், திகில் தரும் காட்டாற்றை கடந்து தான் செல்ல வேண்டிய ஒரு கிராமத்தில் தன் முயற்சியை கைவிடாமல் அக்கிராமத்து மக்களிடம் அவர்களிடம் உறவாடி. அவர்களில் ஒருத்தியாக மாறியபின்பு கல்வி போதித்த ' தைரியசரஸ்வதி 'யான ஷைலஜா, கிபூ சேரிங் லெப்சா திருமணமே செய்யாமல் கல்விபயணத்திற்க்காகவே தன்னை ஒப்படைத்துக கொண்டவர்.
தன்னுடைய பணிக்காலம் முடிந்தும் எண்பது வயதைக் கடந்தும் சமூக பேராசியையாக வலம் வருபவர், நன் குடும்பத்தின் ஏழ்மையை ஒதுக்கி வைத்து தங்களுடைய மிக குறைவான கோதுமை வயலை மாணவிகளுக்கான விளையாட்டரங்கமாக மாற்றிய சஞ்சய் பாதக், மாணவர்களை உற்சாகப்படுத்தி அவர்களை வாசிக்க வைத்து யூடியுபில் பதிவேற்றி மற்றவர்களையும் படிக்க தூண்டி லாக்டவுன் காலத்திலும் பணியை செவ்வனே செய்த அமர்ஜித் சிங், One Teacher,one call முறையில் சிறப்பு குழந்தைகளுக்கான கற்றல் முறையை உருவாக்கிய தீப் மாலா பாண்டே கிராமத்து வீடு சுவர்கள் முழுக்கும் கரும்பலை கரும்பலகை ஆக்கி கொரோனா காலத்தில் குழந்தைகளின் கல்வியை தடைப்படாமல் இருக்க செயலாற்றிய சபன்குமார்,
எதற்குமே அடங்காத பத்தாம் வகுப்பு மாணவர்களை தனியாக பிரித்து ஒரே ஆசிரியர் அனைத்து பாடங்களையும் அவர்களுக்கு ஒரே ஆசிரியர் ஆக கற்பிக்க வேண்டும் என்பது பெரிய சவாலான வேலை அதை தன் அணுகுமுறையாலும் உழைப்பாலும் மாணவர்களை அரவணைத்து நல்வழிப்படுத்த படுத்திய உமா மகேஸ்வரி ,
இத்தனை ஆசிரியர்களும் பல இடர்களை தாண்டியும் தங்களின் அயராத உழைப்பால் பல மாணவர்களுக்கு ஒளியேற்றியுள்ளனர் என்பது பெருமிதமான செயல்.
இச்சிறப்பின நூலை அனுப்பி #சீதாலட்சுமிக்கு மிக்க நன்றி