அருள்மிகு ஸ்ரீ அல்லியங்கோதை, சௌந்தரநாயகி அம்பாள் உடனுறை ஸ்ரீ பிரமபுரீஸ்வரர், ஆலந்துறைநாதர், பசுபதிநாதர் திருக்கோவில்.
தல விருட்ஷம்:
ஆல் (ஆலமரம்)
தீர்த்தம்:
திருக்குளம், தீர்த்தம்
ஆகமம்:
சிவாகமம்
பாடல்வகை:
தேவாரம்
பாடியவர்கள்:
சம்பந்தர்
புள்ளமங்கை ஆலந்துறைநாதர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய விசத்தை இறைவன் அமுது செய்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 16ஆவது சிவத்தலமாகும்.
குடமுருட்டி ஆற்றின் கரையில் திருக்கோயில் உள்ளது. ஆலமரத்தைத் தலமரமாகக் கொண்டு விளங்கிய நீர்த்துறை தலம் ஆதலின் 'ஆலந்துறை' என்று பெயர் பெற்றிருத்தல் வேண்டுமென்பர்.
அமுதத்தைக் கடைந்தபோது தோன்றிய விஷத்தை இறைவன் அமுது செய்த இடம் இஃது என்பது தலபுராணச் செய்தி.
பிரம்மா பூஜித்து சாபவிமோசனம் பெற்றமையால் சுவாமி இங்கு பிரமபுரீஸ்வரர் என்ற திருநாமம் கொண்டு விளங்குகின்றார்.
ஊர் : வெள்ளாளர்.
தஞ்சாவூர்.