தஞ்சாவூர் மாவட்டத்தில் கீழ்வேளூர் தலத்தில் கேடிலியப்பர் அக்ஷயலிங்கேஸ்வரர் ஆலயத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ அஞ்சு வட்டத்து அம்மன் !
சூரபத்மனை கொன்ற வீரஹத்தி தோஷம் நீங்க நவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட யாகபூஜையை இடையூறு செய்த துர்தேவதைகள் அசுரர்களிடமிருந்து காக்க அன்னை பார்வதி தேவியை வேண்டுகிறார்.
பார்வதி நான்கு திக்குகளிலும் ஆகாயமும் சேர்த்து வட்டமாக பாதுகாத்து பூஜை முழுமையடைய உதவியதால் அஞ்சு வட்டத்து அம்மன் என அழைக்கப்படுகிறாள்.
மஹாவிஷ்ணுவும் ஹிரண்ய கசிபுவை கொன்ற வீரஹத்தி தோஷம் நீங்க இங்கு வழிபாடு செய்தார்.
அக்னி பகவானின் குஷ்ட ரோக நோயை போக்கிய தலம்.
இங்குள்ள சரவணப் பொய்கையில் நீராடினால் கங்கையில் நீராடிய பலன்.
அகத்திய முனிவர் வழிபட்ட தலம்.
கேடிலியப்பர் சுயம்பு லிங்கம்.
கழுதையாக சபிக்கப்பட்ட ஒரு அசுரனும் ஒரு அரசனும் ஆடி பௌர்ணமி அன்று வழிபட்டு பழைய நிலை அடைந்த தலம்.
முருகன் நான்கு கரங்களுடன் காட்சி தரும் தலம்.
எப்படிப் போவது?
திருவாரூரிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் பேருந்து வழியில் கீழ்வேளூர் தலம் உள்ளது. திருவாரூர் மற்றும் நாகப்பட்டினத்திலிருந்து கீழ்வேளூர் செல்ல நகரப் பேருந்துகளும் உள்ளன. நாகப்படினத்தில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் சிக்கல் தலத்தை அடுத்து இத்தலம் உள்ளது.
ஆலய முகவரி
அருள்மிகு கேடிலியப்பர் திருக்கோவில்,
கீவளூர் அஞ்சல்,
நாகப்பட்டினம் வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம் – 611 104.
இக்கோயில் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.