Breaking News :

Thursday, November 21
.

அரசமரத்தை எந்த கிழமையில் சுற்றினால் பிரச்சனை தீரும்?


அரசமரம் ஆன்மீகத்தில் மிகமுக்கிய பங்கு வகிப்பது நம்மில் பலருக்கும் தெரியும். அதிலும் நீங்கள் ஒவ்வொரு நாளும் அரச மரத்தை சுற்றி வருவதால் அந்த நாளுக்கு ஏற்ப பலவிதமான நன்மைகள் கிடைக்கும்.

அரசமரத்தை...

திங்கள்கிழமையன்று இன்று வலம்வந்தால் வீட்டில் மங்கலக்காரியங்கள் எந்த தடையும் இல்லாமல் நடக்கும்.

செவ்வாய்கிழமையில் வளம் வருவது செவ்வாய் தோஷங்களை நீக்கும். 

புதன்கிழமையில் வலம்வந்தால் வியாபாரம் பன்மடங்கு பெருகும்.

வியாழக்கிழமையில் வலம் வர
கல்வியில் சிறந்து விளங்கலாம். 

வெள்ளிக்கிழமை வலம்வர
சகல சௌபாக்கியங்களும் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும். 

சனிக்கிழமை வலம்வர 
எல்லா கஷ்டங்களையும் விலக்கி மகாலட்சுமியின் அருளை பெற்றுத்தரும்.

ஞாயிற்று கிழமை வலம் வர
தீராமல் இருக்கும் எல்லா நோயையும்  போகும். 

சந்திரனின் ஆதிக்கம் மிகுந்த அமாவாசையும், சந்திர பகவானுக்கு உரிய திங்கள்கிழமையும் சேர்ந்து வரும் நாளில் அதிகாலையில் அரச மரத்தை வழிபட்டு இந்த ஸ்லோகத்தை 108 முறை சொல்லி வலம் வருதல் நலம்.

மூலதோ பிரம்மரூபாய
மத்யதோ விஷ்ணு ரூபினே
அக்ரத: சிவ ரூபாய
விருக்ஷ ராஜயதே நம

இந்த ஸ்லோகத்தை 108 முறை மனதிற்குள் சொல்லிக்கொண்டு வலம் வர வேண்டும். கூடவே உங்கள் சக்திக்கு ஏற்ப பழமோ பூஜை சார்ந்த பொருட்களோ மரத்தின் முன்னே சமர்ப்பிக்க வேண்டும்.

108 முறை பிரகார வலம் முடிந்ததும் அந்த பொருட்களை தானம் அளிக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம். இந்த வழிபாடு அமாசோமவார விரதம் என அழைக்கப்படுகிறது. இந்த நாளில் நீங்கள் செய்யும் அன்னதானம் பலமடங்கு புண்ணியங்களை கொண்டு சேர்க்கும்.

துணிகளை தானமாக கொடுக்கலாம். அமாவாசையை மறந்துவிடாமல் உங்கள் அருகில் உள்ள அரசமரத்தை வலம்வந்து எல்லா நன்மையையும் பெறுங்கள்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.