ஆனி மாத சர்வ ஏகாதசி கார்த்திகை நக்ஷத்திரம் கூடிய செவ்வாய் தினத்தில் அழகாபுத்தூர் சங்கு சக்கரம் ஏந்திய முருக பெருமானை போற்றி பாடி வணங்கிடுவோம் வாரீர்
சுர முக கன சபை நாதா தாதா என உருகிட அருள் புரிவாயே
வானோர் மலர் மழை பொழி அவதாரா சூரா என முநிவர்கள் புகழ் மாயாரூபா
ஊரோடு அவுணரொடு அலை கடல் கோ கோ என மலை வெடி பட வேலால் மடிவு செய்து அருளிய முருகோனே
இருவினை நீக்கு முருகனை மருவேனே
கேடயம், வில், அம்பு, சாட்டை, கத்தி, சூலாயுதம், வஜ்ரம் போன்ற ஆயுதங்களோடு
திருமாலின் ஆயுதங்களான சங்கு, சக்கரம் கைகளில் ஏந்தி நிற்பவனே
மயில் மீது அமர்ந்த கோலத்தில் அருகில் வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருபவனே
செவ்வாய் கார்த்திகை விரத நாளில் திருமாலின் பிரதான ஆயுதங்களான சங்கு சக்கரம் கைகளில் ஏந்திய
முருகனை திருமாலுக்கு உகந்த சர்வ ஏகாதசி நாளில் போற்றி பாடி வணங்கிடுவோம்
சுர முக கன சபை நாதா தாதா என உருகிட அருள் புரிவாயே அழகாபுத்தூர் அமர்ந்த
கல்யாணசுந்தர சண்முகசுப்பிரமணியா போற்றி போற்றி!