பிரம்மனுக்கு ஆரம்பத்தில் ஐந்து தலைகள் இருந்தன. உலக உயிர்களையெல்லாம் நாம் தானே படைக்கிறோம் என்ற ஆணவம் தலை க்கேறி சிவபெருமானையே கேலி செய்தான். இதனையறிந்த சிவன் பிரம்மனின் ஆணவத் தை அடக்கி உலக மக்களுக்காக தன் அங்கமான சர்வசக்தி படைத்த பைரவரை உண்டாக்கினார்.
பிறகு சிவபெருமானின் அம்சமாகத் தோன்றி ய பைரவ மூர்த்தி பிரம்மனின் ஒருதலையை க் கிள்ளி எடுத்தார். இப்படி பிரம்மனின் ஆண வத்தை அழித்த இந்த செய்தி அகந்தை கொ ண்டவர்கள், தவறு செய்பவர்கள் யாராக இரு ப்பினும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்பதையும், தீய எண்ணத்துடன் பிறர் செய் யும் இடையூறுகளிலிருந்தும் நல்லவர்கள் காப்பாற்றப்படுவார்கள் என்பதையும் உணர்த் தும் மிகப்பெரும் தத்துவமாகும்.
பிரம்மனின் தலையை துண்டித்ததால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க அருளுமாறு சிவனை பைரவர் வேண்டினார். சிவன் பைரவரை பூலோகத்தில் தோஷம் நீங்க பிட்க்ஷைஎடுத்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்றும் கூறினார்.
அவ்வாறு பூலோகம் சென்று பிட்க்ஷைபெற்று வருகையில் குடந்தை அருகிலுள்ள திருவலஞ்சுழியில் பைரவருக்கு பிரம்மஹத்தி தோஷ ம நீங்கிற்று. பின்பு அங்குள்ள ஸ்வேத விநாயகரை வழிபட்டவுடன் விநாயகர் தோன்றி, "உம் கையிலுள்ள சூலாயுதத்தை கிழக்கு நோக்கி வீசு. அது எங்கு சென்று சேர்ந்திருக்கிறதோ அந்த இடத்தில் கோவில் கொண்டிருப்பாயா க'' என அருளினார்.
பைரவர் அவ்வாறே கிழக்கு நோக்கி சூலாயுத த்தை வீச, அது தற்போதுள்ள சேத்திரபாலபுர ம் இடத்தில் விழுந்தது அந்த இடத்தில் இருந்த ஸ்வேத விநாயகரை வழிபட்டு அவ்விடத்தி லேயே கோவில் கொண்டார்.
சூலம் விழுந்த இடம் தீர்த்தமாயிற்று. கால பைரவருக்கு சேத்திர பாலகர் என்று பெயர். அவர் பெயரே அந்த ஊருக்கு அமைந்து சேத்திர பாலபுரம் என்று வழங்கலாயிற்று.
இந்த சேத்திர பாலபுரம் மயிலாடுதுறை தாலு கா, குற்றாலம் அருகிலுள்ளது. இவ்வாறு கோவில்களில் மட்டுமின்றி உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் ஆபத்து ஏதாவது நேரும்போது சிவனின் அம்சமாக இருந்து ஆபத்துக்களிலிருந்து விடுபட வைத்துக் காப்பாற்றுபவர் பைரவ மூர்த்தியாவார்.
இதைத் தவிர எல்லைக் காவல் தெய்வமாகவு ம் இருந்து அருள் பாலிக்கிறார். கால பைரவர் பைரவ உருவங்களில் பல உண்டு என்றாலும் பிரதானமானவராகக் கருதப்படுபவர் கால பைரவர்.
காசி கோவிலில் பைரவர்தான் பிரதானமாக வணங்கப்படுகிறார். எண்ணற்ற மக்கள் கால பைரவரின் புனித ரட்சையை (காசிக்கயிறு) அணிந்து கொண்டு எவ்வித அச்சமும் இல்லா தவர்களாக வாழ்ந்து வருகிறார்கள்.
சனீஸ்வர பகவானுக்கு குருவாக விளங்குபவ ர் பைரவர். சூரியன் மகனான யமதர்மனால் அலட்சியப்படுத்தப்பட்டு கவுரவக் குறைவை அடைந்தார். சனி அவருடையதாய் சாயாதேவி யின் அறிவுரைப்படி பைரவரை வழிபட்டு அவருடைய அருளால் நவக்கிரகங்களில் ஒருவராக கிரகப் பதவி கிடைக்கப் பெற்றார். ஆகையால் பைரவர் சனீஸ்வரருக்கு குருவாக விளங்கியும் அருள் பாலிக்கிறார்.
சிவ பெருமானின் ஐந்து குமாரர்களாக கணப தி, முருகன், பைரவர், வீரபத்திரர், சாஸ்தா என்று சொல்லப்படுகிறது. ஐவரில் மகா பைரவர் பொதுவாக எல்லா ஆலங்களிலும் ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்கு திசை யிலே நிர்வாணக் கோலத்தினராய் நீல மேனி யராய் நாய் வாகனத்துடன் காட்சி தருபவர் தான் பைரவர் பெருமாள்.
காலையில் ஆலயம் திறந்தவுடனும், இரவு அர்த்தஜாமத்தில் பூஜை முடிவுறும் போதும் பைரவருக்கு என்று விசேஷ பூஜைகள் செய்ய ப்பட வேண்டும் என்று பார்த்த நித்ய பூஜா விதி கூறுகிறது. அதேபோல ஆலயத்தின் மற்ற திருச்சன்னதிகளை பூட்டிச் சாவியை பைரவர் பாதத்தில் வைத்து விட்டு அதன்பின் வெளிக் கதவை பூட்டிச் சாவியை எடுத்துச் செல்லும் வழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது.
சிவபிரானின் தத்புருஷ முகத்திலிருந்து தோன்றியவர் காசியம்பதியில் சிவகணங்க ளுக்கு தலைவராக விளங்குபவர். ஆணவம் கொண்ட பிரம்மனின் சிரம் கொய்தவர். மன்மதனின் கர்வம் அடங்கச் செய்தவர். முனிவரின் சாபத்திலிருந்து தேவேந்திரன் மகன் ஜெயந்தனைக் காத்தவர்.
சனியை சனீஸ்வரராக்கி நவக்கோள்களில் வலிமைவாய்ந்த கோளாக உயர்த்தி பெருமை ச் சேர்த்தவர் என்ற பெருமைமிகு சிறப்புகளை க் கொண்டவர்.
இவரை காலபைரவர், மார்த்தாண்ட பைரவர், க்ஷேத்ரபாலகர், சத்ரு சம் ஹார பைரவர், வடுக பைரவர், சொர்ணகர்சன பைரவர் என்று பல பெயர்களில் அழைத்து வழிபடுகிறோம்.