நம்புங்கள் நரசிம்மனை நல்லதே நடக்கும்.
நாளை என்பது நரசிம்மர் இடமில்லை.
நரசிம்மரை விட உயர்ந்த தெய்வம் வேறு இல்லை
லஷ்மி நரஸிம்ஹ சரணம் ப்ரபத்யே
பகைக்கு நீயே சிம்மசொப்பனம்
பக்திக்கு நீயோ திவ்யதரிசனம்
பாற்கடல் திருமகள் பிறந்தவீடு
பரம்பொருள் மடியே புகுந்தவீடு
ஜயலஷ்மி என்றும் மடியினிலே
ஜகம் ரட்சிப்பாய் பார்வையிலே
ஜனார்த்தனனே உன் அவதாரம்
ஜகம் ஆளும் சதுர்வேதம் ஆகும்
நரசிம்மா நீயே தூண் பிளந்தாய்
நகங்களில் நீ சுதர்சனர் ஆனாய்
நரசிம்மா உந்தன் சிம்மகர்ஜனை
நின் நா முழங்கும் சங்கொலியே
நரசிம்மா உந்தன் நகை முகமே
நானிலம் முழுதும் அருள் முகமே
நினது திரு மடியில் மஹாலஷ்மி
நீயன்றோ எம் லஷ்மிநரசிம்மன்
"உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோமகம்|
ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம் ம்ருத்யும் ருத்யும் நமாம்யஹம்||"