Breaking News :

Thursday, November 21
.

பிரம்மஹத்தி தோஷம் நீங்க வழிபட வேண்டிய கோயில் எது?


பிரம்மஹத்தி தோஷம் நீங்க வழிபட வேண்டிய கோயில் திருவிடைமருதூர் ஸ்ரீ மஹாலிங்கஸ்வாமி கோயில்.

கயிலாயத்தில் அன்னை பார்வதி விளையாட்டாக சிவனின் கண்ணை பொத்தியதால், சிவனின் இரு கண்களாக விளங்கும் சூரிய, சந்திரரின் ஒளி இல்லாமல் போனது. இதனால் உலக இயக்கம் நின்றது. முனிவர்களும் தேவர்களும் கலங்கி நின்றனர்.

அப்போது சிவபெருமான் தனது தேவியிடம், “”விளையாட்டாக தவறு செய்தாலும் மற்றவர்களுக்கு அது பாதிப்பை ஏற்படுத்துமானால், அது பாவமே ஆகும். இந்த பாவத்திற்கு பிராயச்சித்தமாக, நீ என்னைப் பிரிந்து பூலோகம் செல். அங்கு பல தலங்களில் தவம் செய்து இறுதியாக அங்குள்ள யோகவனத்தில் தங்கியிரு. நான் அங்கு வந்து உன்னுடன் சேர்வேன்,” என்றார்.

அதன்படி பார்வதி தவத்தை முடித்து விட்டு, யோகவனத்தில் புற்று மண்ணால் சிவலிங்கம் அமைத்து, ஒற்றைக்காலில் நின்று தவம் செய்தாள். இறைவனும் அவளுடன் இணைந்தார். அந்த யோகவனமே இன்றைய பழுவூராகும். தவம் செய்த அம்பிகை என்பதால் அம்பாள் “அருந்தவநாயகி’ எனப்படுகிறாள்.

பரசுராமர் தன் தாய் ரேணுகா தேவியை கொன்ற பாவம் நீங்க வழிபட்ட தலமாக இது கருதப்படுகிறது. அவர் உருவாக்கிய குளம் “பரசுராம தீர்த்தம்’ எனப்படுகிறது.
உலக வாழ்க்கையில் ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் ஒவ்வொருவிதமாக அமைகின்றது. ஒரு சிலருக்கு வெற்றித் திருமகள் தேடிவந்து மாலை அணிவிக்கிறாள்.

ஒரு சிலருக்கு என்ன உழைத்தாலும், அதற்கு உரிய பலன்கள் கிடைக்காமல் போகின்றன. இதற்கு பலவகையான தோஷங்கள் காரணமாக இருந்தாலும், குறிப்பாக பிரம்மஹத்தி தோஷம்தான் முக்கிய காரணம் என்கிறார்கள். பிரம்மஹத்தி தோஷம் எதனால் ஏற்படுகிறது இதற்கு உரிய பரிகாரங்கள் என்ன என்பது பற்றி ஜோதிட நிபுணர் ஶ்ரீரங்கம் கிருஷ்ணனிடம் கேட்டோம்.

''பிரம்மஹத்தி தோஷம் என்பது,  கொடுமையான பாவங்களைச் செய்வதால் ஏற்படுவதாக சாஸ்திரங்கள் சொல்கின்றன. தாய்க்கு உணவளிக்காமல் விரட்டி அடிப்பது, பசுவைக் கொல்வது, குருவை உதாசீனப்படுத்துவது, உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்வது, தெய்வச் சொத்தைத் திருடுவது போன்றவற்றால் இந்த தோஷம் ஏற்படும். குறிப்பாக நன்றி மறப்பதால்தான்  இந்த தோஷம் ஏற்படுகிறது.

இந்த தோஷம் இருந்தால், ஜாதகர் தனது பிறவியில் என்ன உழைத்தாலும் அதற்கு உரிய பலன் கிடைக்காமல், வறுமையும் தோல்விகளையுமே சந்தித்து  வாழ்வார். வேலை கிடைக்காது, வேலை கிடைத்தாலும் உரிய கூலி கிடைக்காது. கூலி கிடைத்தாலும் முறையான அங்கீகாரம் கிடைக்காது. இந்த நிலை ஓர் ஆண்டு இரண்டு ஆண்டுகள் அல்ல. பல ஆண்டுகள் நீடிக்கும். தொழிலில் உரிய அங்கீகாரம் கிடைக்காது.

சமூகத்தில் திறமை இருந்தும் நல்ல நிலையை அடைய முடியாமல் தடுமாறிய வண்ணம் இருப்பார்கள். ஏன் சிலவேளைகளில் அவர்களது குடும்பத்திலே கூட அவர்களுக்கு மரியாதை இருக்காது.  இதற்கு அவர்கள் பெரிய அளவில் செலவில்லாத முறையான எளிய  பரிகாரங்களைச் செய்தாலே போதும். நல்ல பலன்கள் கிடைத்து மேன்மை அடைவார்கள்.

பிரமஹத்தி தோஷம் ஒருவருக்கு இருக்கிறதா? இல்லையா? என்பதை எப்படி அறிந்து கொள்வதெனப் பார்ப்போம்.

லக்னத்துக்கு 4 -ம் இடத்தில் அசுப கிரகங்கள் இருந்து, 6, 8, 12 -ம் இடங்களில் சுபர்கள் இருந்தாலும்,  5, 9 - ம் வீடுகளுக்கு  அதிபதிகளாக அசுப கிரகங்கள் இருந்தாலும், அவர்களுடன் சேர்ந்து இருந்தாலும், அசுபர் வீட்டில் இருந்தாலும் இந்த தோஷம் அவர்களுக்கு உள்ளதென அறியலாம்.

*  ராகுவின் இருக்கும் ராசியில் இருந்து 5 அல்லது 9 - ம் வீட்டில் சனி, குரு சேர்க்கை ஏற்பட்டிருந்தாலும்  (அதாவது சனியும் குருவும் ஒரே பாதத்தில் 10 டிகிரியில் இருக்கவேண்டும்) தோஷமாகும்.

பரிகாரங்கள்:

பிரம்மஹத்தி தோஷம் நீங்க அரியலூர் அருகில் உள்ள கீழப்பழுவூர்   ஆலந்துறையார்(வடமூலநாதர்) கோயில் வழிபடுங்கள்

* சிவன், பிரம்மா, விஷ்ணு மூவரும் உள்ள தலங்களுக்கு சென்று வழிபாடு நடத்த வேண்டும். இது தவிர  ஒரு பத்து ஏழைகளுக்கு உணவளிப்பது  அல்லது வயது முதிர்ந்த ஏழைத் தம்பதியருக்கு வீட்டில் உணவளித்து அவர்களுக்கு புதிய துணிமணிகள் வாங்கிக்கொடுத்து அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கிக்கொள்ள வேண்டும்.

* உத்தமர்கோவில், கொடுமுடி, கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர், ஸ்ரீவாஞ்சியம் கோயில்களுக்கு புதன், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் சென்று தோஷ நிவர்த்தி பூஜை செய்துகொள்வது நல்லது.

* ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குச் சென்று அங்குள்ள ஸ்ரீ சக்கரத்தாழ்வார் சந்நிதியில் எள்ளுச் சாதம் நைவேத்தியம் செய்து எல்லோருக்கும் கொடுத்தால் நல்ல பலன் அளிக்கும்.

* திருபுல்லாணி சென்று, இறந்த மூத்தோருக்கு (தகப்பனார் இல்லாதவர்கள்) பித்ருக் கடன் செய்து அதற்கு அருகே உள்ள தேவிப்பட்டினத்தில் உள்ள நவ பாஷாணத்திலான நவகிரகங்களின் வழிபாட்டை மேற்கொள்ளவேண்டும்'' இவ்வாறு அவர் கூறினார்.
 
கீழப்பழுவூர் அரியலூர் அருகில் உள்ள சிவன் கோயில் கீழப்பழுவூர் ஆலந்துறையார் கோயில் திருஞான சம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற சிவ தலமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துளள 55வது தலம் ஆகும்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.