ஸ்ரீ மகாவிஷ்ணுவின் பக்தனான பிரகலாதனை காக்க, திருமால் ஸ்ரீ நரசிம்மராக அவதரித்தார். மற்ற அவதாரங்களைப் போல் அல்லாமல், இதில் தாயின் கருவிலிருந்து வராததாலும், கருட வாகனத்தில் வராமலும், அவசரமாக வந்ததால், இந்த அவதாரத்தை அவசர கோலம் என்பார்கள்.
பக்த பிரகலாதன் அழைத்ததும், ஓடோடி வந்தவர். ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி யோக வடிவில் ஸ்ரீ சக்கரத்தாழ்வாருக்கு பின்புறத்தில் காட்சி தருகிறார்.நமக்கு ஒரு கஷ்டம் என ஸ்ரீ சக்கரத்தாழ்வாரிடம் வழிபட்டு முறையிட்டதும், வேகமாக சுழன்று நம் துன்பங்களை உடனடியாக தீர்ப்பதாக ஐதீகம்.
பிரகலாதனுக்காக வேகமாக வந்து காத்தருளியவர்.
ஸ்ரீ நரசிம்மர், அவர் ஸ்ரீ சக்கரத்தாழ்வாருக்கு பின் இருப்பதால், நாம் ஸ்ரீ சக்கரத்தாழ்வாரை வழிபட்டதும், பக்தர்களின் துன்பங்களைத் தீர்க்க ஸ்ரீ நரசிம்மரே அருள் வழங்குவார் என்பது ஐதீகம்.
அதனால் தான் ஸ்ரீ சக்கரத்தாழ்வாரையும்,
ஸ்ரீ நரசிம்மரையும் ஒரு சேர வழிபடுவது மிகச் சிறப்பு.
இதன் காரணமாக தான் பெருமாள் ஆலயங்களில்
ஸ்ரீ சக்கரத்தாழ்வார் சன்னதியில் பின்புறம் யோக வடிவில்ஸ்ரீ நரசிம்மர் அமர்ந்திருக்கிறார்.
ஸ்ரீ சக்கரத்தாழ்வார் தனி சன்னதி :
அதே போல மதுரை ஒத்தக்கடை அருகில் உள்ள திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயிலில் ஸ்ரீ சக்கரத்தாழ்வாருக்கு தனி சன்னதி உள்ளது.
.எல்லா பெரிய பெருமாள் கோவில்களிலும் ஸ்ரீ சக்கரத்தாழ்வாருக்கு தனிச்சன்னிதி அமைந்திருந்தாலும் ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சக்கரத்தாழ்வார் மிகுந்த சக்தி வாய்ந்தவராக வழிபட்டு வருகின்றனர்
.
இந்த ஸ்ரீ சக்கரத்தாழ்வாரின் மகிமையை, அங்கு வந்து வழிபட்டுச் செல்லும் ஏராளமான பக்தர்களின் கூட்டமே சாட்சி.
ஸ்ரீசக்ரத்தாழ்வார் ஸ்லோகம் :
ஓம் சுதர்ஸனாய வித்மஹே.
மஹா ஜ்வாலாய தீமஹி
தந்நோ சக்ர ப்ரஸோதயாத்:
என்று முடிந்தபோதெல்லாம் சொல்லுங்கள். தினமும் 11 முறை அல்லது 24 முறை அல்லது 54 அல்லது 108 முறை என முடிந்த அளவுக்கு சொல்லி சக்கரத்தாழ்வாரை வழிபடுங்கள். எதிர்ப்புகளையும் தடைகளையும் தகர்த்து அருளுவார்.