வசிய சக்தி தரும் சந்திரன் 108 போற்றி மற்றும் வழிபடும் முறை : அழகு, முகப்பொழிவு கிடைக்கும்
மதியும், அழகு, பொழிவு பெற விரும்புபவர்கள் தொடர்ந்து சந்திர மந்திரம், போற்றியை சொல்லி வழிபடவும்...
பெளர்ணமி, அமாவாசை, சந்திர தரிசன தினங்கள் என சந்திர பகவானுக்குரிய நாட்களில் நாம் சந்திரனை வழிபட்டு வர மன குழப்பம் நீங்கி, நிம்மதி உண்டாகும். முகத்தில் புது பொழிவு ஏற்படும்.
மனோகாரகனான சந்திரனை வழிபடும் போது நம் மனம் தெளிவு பெற்று நாம் செய்யும் செயலில் நேர்த்தி உண்டாகும்.
மன அமைதி, அழகு பெற சொல்ல வேண்டிய சந்திர பகவானுக்குறிய மந்திரம்
பெளர்ணமி தினங்களிலும், திங்கட் கிழமை தோறும் (4ம் பிறை தவிர) இரவில் 8 மணி முதல் 9 மணி வரை கீழே குறிப்பிட்டுள்ள ஸ்ரீ சந்திர பகவானுக்கு உரிய மந்திரங்களை கிழக்கு திசை பார்த்து அமர்ந்து குறைந்தது 27 முறை, அதிகபட்சம் 108 முறை ஜெபிக்கவும்.
இதனால் நாம் அழகு பெறுவதோடு, நம் கோபங்கள் குறைந்து மன தெளிவும், சாந்தமும் உண்டாகும்.
சந்திர பகவானை வணங்குவதால் சிவ பெருமான், பார்வதி தேவி, மகா லட்சுமி, விநாயகப்பெருமானின் அருளைப் பெற்றிட முடியும்.
குறிப்பாக, மிருதுவான தோல் விரும்பக் கூடிய பெண்கள் இந்த மந்திரங்களை சொல்லி வரவும்
இந்த மந்திரத்தை சொல்ல நினைப்பவர்கள் பெளர்ணமி அல்லது வளர்பிறை நாட்களில் தொடங்கலாம்.
சந்திரன் மூல மந்திரம்:
ஒம் ஹ்ரீம் வம் சந்திர தேவாய நமஹ
காரியத்தடை நீக்கும் சந்திரன் வழிபாடு
சிவனின் சடைமேல் சிறப்புடன் விளங்கும்
மதியே உன்னை மகிழ்வுடன் துதித்தேன்!
நிறத்தில் வெண்மையும், நெல்லாம் தான்யமும்
சிறப்புடன் வழங்கச் செல்வம் கொடுப்பாய்!
முத்தாம் ரத்தினம் முழுமலர்
அல்லி வைத்தோம் உனக்கு வரம்தருவாயே!
புத்தி பலம்பெற பொன்பொருள்
குவிய சக்தி வழங்கும் சந்திரா வருக!
சந்திரனுக்குரிய இந்த பாடலை நாம் தினமும்பாடி வர நம் வாழ்வில் இருக்கும் காரிய தடைகள், மனக் கவலைகள் நீங்கி அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெறலாம்.
மனது காரன், மாதா காரகன் எனப்படும் சந்திரனை வணங்கும் போது நாம் சிந்தனை திறன் வளப்படுவதோடு, புது திட்டங்களை செயல்படுத்தும் போது நன்கு ஆராயும் திறன் கிடைக்கிறது.
மூல மந்திரம்
"ஓம் ஸ்ரம் ஸ் ரீம் ஸ்ரௌம் ஷக சந்திராய நமஹ",
இந்த மூல மந்திரத்தை 48 நாட்களில் 10,008 முறை சொல்ல வேண்டும்.
சந்திரனுக்கு உரிய ஸ்தோத்திரம்
ததி சங்க துஷாராபம்
ஷீரோதார்ணவஸம்பவம்!
நமாமி சசினம் ஸோமம்
சம்போர் மகுடபூஷணம்!
சந்திர காயத்ரி மந்திரம்
பத்மத்வஜாய வித்மஹே ஹேமரூபாய தீமஹி|
தந்நோ ஸோம: ப்ரசோதயாத்||
சந்திரனுக்கு உரிய 108 போற்றி
ஓம் அம்புலியே போற்றி
ஓம் அமுத கலையனே போற்றி
ஓம் அல்லி ஏந்தியவனே போற்றி
ஓம் அனந்தபுரத்தருள்பவனே போற்றி
ஓம் அபய கரத்தனே போற்றி
ஓம் அமைதி உருவனே போற்றி
ஓம் அன்பனே போற்றி
ஓம் அஸ்த நாதனே போற்றி
ஓம் அமுதுடன் பிறந்தவனே போற்றி
ஓம் அயர்ச்சி ஒழிப்பவனே போற்றி
ஓம் ஆரமுதே போற்றி
ஓம் ஆத்திரேய குலனே போற்றி
ஓம் இனிப்புப் பிரியனே போற்றி
ஓம் இரண்டாம் கிரகனே போற்றி
ஓம் இனியவனே போற்றி
ஓம் இணையிலானே போற்றி
ஓம் இரவிருள் அகற்றுபவனே போற்றி
ஓம் இந்தளூரில் அருள்பவனே போற்றி
ஓம் இரு கரனே போற்றி
ஓம் இரவு நாயகனே போற்றி
ஓம் ஈய உலோகனே போற்றி
ஓம் ஈரெண் கலையனே போற்றி
ஓம் ஈர்ப்பவனே போற்றி
ஓம் ஈசன் அணியே போற்றி
ஓம் உவகிப்பவனே போற்றி
ஓம் உலகாள்பவனே போற்றி
ஓம் எழில்முகனே போற்றி
ஓம் எங்கும் நிறைந்தவனே போற்றி
ஓம் ஒணத்ததிபதியே போற்றி
ஓம் ஒளடதீசனே போற்றி
ஓம் கடகராசி அதிபதியே போற்றி
ஓம் கதாயுதனே போற்றி
ஓம் கலா நிதியே போற்றி
ஓம் காதற் தேவனே போற்றி
ஓம் குறு வடிவனே போற்றி
ஓம் குமுதப் பிரியனே போற்றி
ஓம் கொள்ளை கொள்வோனே போற்றி
ஓம் க்லீம் பீஜ மந்திரனே போற்றி
ஓம் கௌரி குண்டத்தருள்பவனே போற்றி
ஓம் கௌரி ப்ரத்யதி தேவதையனே போற்றி
ஓம் சந்திரனே போற்றி
ஓம் சஞ்சீவியே போற்றி
ஓம் சதுரப் பீடனே போற்றி
ஓம் சதுரக் கோலனே போற்றி
ஓம் சமீப கிரகனே போற்றி
ஓம் சமுத்திர நாயகனே போற்றி
ஓம் சாமப் பிரியனே போற்றி
ஓம் சாந்தராயணவிரதப் பிரியனே போற்றி
ஓம் சிவபக்தனே போற்றி
ஓம் சிவனருள் வாய்த்தவனே போற்றி
ஓம் சிங்கக் கொடியனே போற்றி
ஓம் சித்ராங்கதனுக்கருளியவனே போற்றி
ஓம் தண்ணிலவே போற்றி
ஓம் தலைச்சங்காட்டில் அருள்பவனே போற்றி
ஓம் தமிழ்ப்பிரியனே போற்றி
ஓம் தண்டாயுதனே போற்றி
ஓம் தட்சன் மருகனே போற்றி
ஓம் தட்சனால் தேய்பவனே போற்றி
ஓம் தாரைப் பிரியனே போற்றி
ஓம் திருமகள் சோதரனே போற்றி
ஓம் திங்களூர்த் தேவனே போற்றி
ஓம் திருப்பாச்சூரில் அருள்பவனே போற்றி
ஓம் திங்களே போற்றி
ஓம் திருஉருவனே போற்றி
ஓம் திருப்பதியில் பூசித்தவனே போற்றி
ஓம் திருமாணிக்கூடத்தருள்பவனே போற்றி
ஓம் தென்கீழ் திசையனே போற்றி
ஓம் தேய்ந்து வளர்பவனே போற்றி
ஓம் தூவெண்மையனே போற்றி
ஓம் தொழும் பிறையே போற்றி
ஓம் நரி வாகனனே போற்றி
ஓம் நக்ஷத்ர நாயகனே போற்றி
ஓம் நெல் தானியனே போற்றி
ஓம் நீர் அதிதேவதையனே போற்றி
ஓம் பயறு விரும்பியே போற்றி
ஓம் பழையாறையில் அருள்பவனே போற்றி
ஓம் பத்துபரித் தேரனே போற்றி
ஓம் பரிவாரத் தேவனே போற்றி
ஓம் பல்பெயரனே போற்றி
ஓம் பத்தாண்டாள்பவனே போற்றி
ஓம் பாண்டவர் தலைவனே போற்றி
ஓம் பார்வதி ப்ரத்யதிதேவதையனே போற்றி
ஓம் புதன் தந்தையே போற்றி
ஓம் போற்றாரிலானே போற்றி
ஓம் பெண் கிரகமே போற்றி
ஓம் பெருமையனே போற்றி
ஓம் மதியே போற்றி
ஓம் மனமே போற்றி
ஓம் மன்மதன் குடையே போற்றி
ஓம் மகிழ்விப்பவனே போற்றி
ஓம் மாத்ரு காரகனே போற்றி
ஓம் மாலிதயத் தோன்றலே போற்றி
ஓம் முத்துப் பிரியனே போற்றி
ஓம் முருக்கு சமித்தனே போற்றி
ஓம் முத்து விமானனே போற்றி
ஓம் முச்சக்கரத் தேரனே போற்றி
ஓம் மூலிகை நாதனே போற்றி
ஓம் மேற்கு நோக்கனே போற்றி
ஓம் ரோகிணித் தலைவனே போற்றி
ஓம் ரோகமழிப்பவனே போற்றி
ஓம் வைசியனே போற்றி
ஓம் வில்லேந்தியவனே போற்றி
ஓம் விண்ணோர் திலகமே போற்றி
ஓம் விடங்கன் இடக்கண்ணே போற்றி
ஓம் விடவேகந் தணித்தவனே போற்றி
ஓம் வெண்குடையனே போற்றி
ஓம் வெள்அலரிப் பிரியனே போற்றி
ஓம் வெண் திங்களே போற்றி