Breaking News :

Friday, February 28
.

செவ்வாய் கிழமைகளில் ஏன் முடி வெட்ட கூடாது?


செவ்வாய் கிழமைகளில் முடி வெட்டவோ அல்லது ஷேவிங் செய்தாலோ வீட்டில் உள்ள பாட்டி அல்லது அம்மா திட்டுவார்கள்.

இந்நாளில் செய்வது நல்லதல்ல என்றும் சொல்வார்கள்.
ஆனால் நம்மில் பலர் அதை நம்பாமல், அது வெறும் மூட நம்பிக்கை என்று என்று கூறி, அவர்களை மதிக்காமல் முடி வெட்டவோ அல்லது ஷேவிங் செய்து கொண்டோ வருகிறோம்.
இந்தியாவின் பல பகுதிகளில் செவ்வாய் கிழமை புனித நாளாகக் கருதப்படுகிறது.
ஏனெனில் செவ்வாய் கிழமையானது துர்கை அம்மன் மற்றும் லட்சுமிக்கு உரிய நாளாக கருதப்படுகிறது.

இந்நாளில் செலவு செய்யவோ,கடன் கொடுக்கவோ கூடாது .
செவ்வாய் கிழமை செல்வத்தை வாரி வழங்கும் லட்சுமிக்கு உரிய நாள்
இந்நாளில் லட்சுமி நம்மை தேடி வருவாள் என்பதோடு, இந்நாளில் நம்மிடம் உள்ள லட்சுமியை மற்றவருக்கு தானம் செய்தால், லட்சுமி சென்றுவிடுவாள் என்ற நம்பிக்கையை மக்கள் கொண்டுள்ளனர்.

இதனால் பலரும் இந்நாளில் பண வரவை எதிர்பார்ப்பதோடு, பணத்தை செலவிடமாட்டார்கள். வீட்டை சுத்தம் செய்யமாட்டார்கள்.

எப்படி முடி வெட்டவோ, ஷேவிங் செய்யவோ மற்றும் நகத்தை வெட்டவோ மாட்டார்களோ, அதேப் போல் இந்நாளில் வீட்டை தண்ணீர் ஊற்றி கழுவிடவோ அல்லது வீட்டில் உள்ள பொருட்களை தூக்கி எறியவோ மாட்டார்கள்.

இப்படி செய்வதால், வீட்டில் குடி கொண்டுள்ள லட்சுமி நம் வீட்டை விட்டு சென்று விடுவாள் என்ற நம்பிக்கை தான் முக்கிய காரணம்.
 செவ்வாய் கிழமைகளில் முடி வெட்டுவது, ஷேவிங் செய்வது,
நகம் வெட்டுவது போன்ற செயல்கள் துரதிர்ஷ்டத்தை வழங்குவதாக நம்பிக்கை உள்ளது.
இதற்கு   ஜோதிடகாரணத்தின் படி... இச்செயல்களை ஒருவர் மேற்கொண்டால், அவரது வாழ்நாளில் இருந்து 8 மாதங்கள் குறைவதாக ஜோதிடம் சொல்கிறது.
செவ்வாய் கிழமையில் செவ்வாய் குடிக்கொண்டிருக்கிறார்.

மனித உடலில், செவ்வாய் இரத்தத்தில் குடியிருக்கிறார்.
இரத்தத்தில் இருந்து தான் முடி வளர்கிறது.
எனவே செவ்வாய் கிழமைகளில் முடியை வெட்டினால், இரத்தம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு உள்ளாகக்கூடும்.

செவ்வாய் கிரகத்தின் எதிர்மறை விளைவுகளாக மற்றொரு ஜோதிட குறிப்பு கூறுவதாவது, முடியின் நிறம் கருப்பு. நம் உடலின் முடியை சனி நிர்வகிக்கிறது.
செவ்வாய் கிழமைகளில் செவ்வாய் ஆளுகிறது.

உண்மையிலேயே சனி தான் செவ்வாயின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கிறது.
ஒருவேளை செவ்வாய் கிழமைகளில் முடியை வெட்டினால், சனி கிரகத்தின் சக்தி குறைந்து, பின் செவ்வாயின் எதிர்மறை விளைவுகளுக்கு உள்ளாககூடும்.

எனவே தான் செவ்வாய் கிழமைகளில் முடியை வெட்ட வேண்டாம் என்று சொல்கிறார்கள்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.