Breaking News :

Thursday, November 21
.

தீபம் ஏற்றும் முறைகள் தெரியுமா?


வீட்டின் முன்கதவைத் திறந்து, பின்புறக்கதவை சாத்தியபிறகே விளக்கேற்ற வேண்டும்.

அதிகாலை நாலரை மணி முதல் ஆறு மணிக்குள் தீபம் ஏற்றுவதாலும்,

மாலை ஆறரை மணிக்குள் தீபம் ஏற்றுவதாலும் நிறைவான வளமும், பலனும் நிச்சயம்.

விளக்கை குளிர்விக்கும் போது, கைகளை உயர்த்தி அணைக்கக்கூடாது.

பூவால் குளிர்விக்கலாம். தூண்டும் குச்சியால் லேசாக அழுத்தலாம்.

இதற்கென பித்தளை குச்சிகள் கடைகளில் கிடைக்கின்றன.

விளக்கேற்றும் நேரம்

சூரியோதயத்திற்கு முன்னதான பிரம்ம முகூர்த்த வேளையில்

(காலை4.30- 6 மணி) விளக்கேற்றினால் பெரும் புண்ணியம்உண்டாகும்.

முன்வினைப் பாவம் விலகும்.

மாலை 4.30-6க்கு இடையே உள்ள பிரதோஷ வேளை சிவபெருமானுக்கும், நரசிம்ம மூர்த்திக்கும்

மிகவும் உகந்தவை.இவ்வேளையில் தீபமேற்றினால் திருமணத்தடை,

கல்வித்தடை நீங்கும் என்பது ஐதீகம். ஒரு வீட்டில் எந்த நேரத்தில்விளக்கேற்றினாலும்,

கருக்கல் நேரமான மாலை 6.30 மணிக்கு அவசியம் விளக்கேற்ற வேண்டும்.

இது அனைவருக்கும்பொதுவான நேரம்.

விளக்கேற்றும் பலன்

ஒரு முகம் ஏற்றினால் – நினைத்த செயல்கள் நடக்கும்

இரு முகம் ஏற்றினால் – குடும்பம் சிறக்கும்

மூன்று முகம் ஏற்றினால் – புத்திரதோஷம் நீங்கும்

நான்கு முகம் ஏற்றினால் – செல்வம் பெருகும்

ஐந்து முகம் ஏற்றினால் – சகலநன்மையும் உண்டாகும்

விளக்கேற்றும் திசை

கிழக்கு – துன்பம் நீங்குதல், குடும்ப அபிவிருத்தி

மேற்கு – கடன், தோஷம் நீங்கும்

வடக்கு – திருமணத்தடை அகலும்

தெற்கு நோக்கி விளக்கேற்றக்கூடாது.

முதல் விளக்கு திருவிழா

திருவிளக்கு வழிபாடு இன்று நேற்று தோன்றியதல்ல. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு

முன்பே தமிழ்மக்கள் இறைவனைஜோதியாக வணங்கிப் போற்றியுள்ளனர்.

சங்ககால இலக்கியங்கள் இவ்வழிபாட்டை “கார்த்திகை விளக்கீடு’ என்றுகுறிப்பிடுகின்றன.

பெண்கள் விளக்கு வழிபாடு செய்த நிகழ்வு அகநானூறு, நற்றிணை போன்ற

எட்டுத்தொகை நூல்களில்இடம்பெற்றுள்ளன.

சங்க இலக்கிய ஆய்வாளர்கள் சிலர், கார்த்திகை மாதத்தையே முதல் மாதமாகக்

கொண்டு தமிழ்ப் புத்தாண்டுகொண்டாடப்பட்டதாக கருதுகின்றனர். கார்த்திகை

மாத கார்த்திகை நட்சத்திரத்தன்று வீடு முழுக்க விளக்கேற்றுவதைப் பற்றிசம்பந்தர்

பாடியிருக்கிறார். மயிலாப்பூரில் தனக்கு நிச்சயம் செய்த பூம்பாவை என்ற பெண்

திடீரென மரணமடையவே, அவர்

“விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்” என்று பாடுவதில் இருந்து

இந்த விழாவின் மேன்மையை அறியலாம்.

திருவிளக்கின் சிறப்பு

திருவிளக்கில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய சக்திகள் உள்ளனர்.

தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படா வண்ணம் தடுக்கிறது.இதன் அடிப்பாகத்தில்

பிரம்மா, தண்டு பாகத்தில் மஹாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையும்

இடத்தில் சிவபெருமானும் வாசம்செய்கின்றனர்.

எண்ணெயின் பலன்கள்

தீபமேற்ற பயன்படுத்தும் எண்ணெயின் பலனைப் பொறுத்தும் பலன் கிடைக்கும்.

நெய் – செல்வவிருத்தி, நினைத்தது கைகூடும்

நல்லெண்ணெய் – ஆரோக்கியம் அதிகரிக்கும்

தேங்காய் எண்ணெய் – வசீகரம் கூடும்

இலுப்பை எண்ணெய் – சகல காரிய வெற்றி

விளக்கெண்ணெய் – புகழ் தரும்

ஐந்து கூட்டு எண்ணெய் – அம்மன் அருள்

கடலெண்ணெயில் விளக்கேற்றக் கூடாது.

திருவிளக்கில் எத்தனை பொட்டு வைக்க வேண்டும் ?

திருவிளக்கின் உச்சி, முகங்கள் ஐந்து, தீபஸ்தம்பம், தீப பாதம் ஆகிய எட்டு

இடங்களில் சந்தனப்பொட்டும், அதன் மேல்குங்குமமும் வைக்க வேண்டும்.

பொட்டு வைக்கும் போது ஆதிலட்சுமி, சந்தான லட்சுமி, வித்யாலட்சுமி,

தனலட்சுமி, தான்யலட்சுமி, கஜலட்சுமி, வீர லட்சுமி, விஜயலட்சுமி

ஆகியோரை தியானிக்க வேண்டும். இதனால், வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும்.

எட்டு பொட்டுகள் வைப்பதற்கு தத்துவரீதியான காரணமும் உண்டு. நிலம், நீர்,

காற்று, நெருப்பு, ஆகாயம் என்னும் ஐந்துபூதங்கள், சூரியன், சந்திரன் ஆகிய

கண்கண்ட தெய்வங்கள், ஆத்மா என்னும் உயிர் தத்துவம் ஆகியவற்றை இந்த

பொட்டுகள்குறிக்கின்றன.

எந்த தெய்வத்துக்கு என்ன எண்ணெய் ?

விநாயகர் – தேங்காய் எண்ணெய்

மகாலட்சுமி – பசுநெய்

குலதெய்வம் – வேம்பு, இலுப்பை, பசுநெய் கலந்த எண்ணெய்

பைரவர் – நல்லெண்ணெய்

அம்மன் – விளக்கெண்ணெய், வேம்பு, தேங்காய், இலுப்பை, பசுநெய் சேர்ந்த

5 கூட்டு எண்ணெய் – பெருமாள், சிவன், முருகன், பிற தெய்வங்கள் – நல்லெண்ணெய்

விளக்கு துலக்கும் நாட்களுக்குரிய பலன்

ஞாயிறு – கண் நோய் குணம், பார்வை பிரகாசம்.

திங்கள் – மனசஞ்சலம், குழப்பம் நீங்குதல், மன அமைதி, தீர்க்கமாக முடிவெடுக்கும் பண்பு வளர்தல்.

வியாழன் – குருபார்வையால் கோடி நன்மை, மன நிம்மதி.

சனி – வீட்டிலும், பயணத்திலும் பாதுகாப்பு, இழந்த பொருட்கள் கிடைத்தல்.

Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.