Breaking News :

Friday, April 04
.

ஆஞ்சநேயரை எவ்வாறு வழிபாடு?


வாயுதேவனின் அம்சமாக
அஞ்சனாதேவிக்கு மார்கழி மாதம் மூல நட்ச த்திரத்தில் பிறந்தவர் ஆஞ்சநேயர் ஆவார். ஆஞ்சநேயரை எல்லா நாட்களிலும் வழிபட லாம்.  புதன், வியாழன், சனி இம்மூன்று கிழமைகளில் வழிபடுவதால் மிகுந்த நன்மை கள் கிடைக்கும். ஆஞ்சநேயரை பல விதமான முறைகளில் வழிபாடு செய்வதால் நினைத்த து நினைத்த நேரத்தில் நடைபெறும் என்பது நம் முன்னோர்களின்  நம்பிக்கையாகும்.

வடை மாலை வழிபாடு:
நமது உடல் தசையால் ஆனது. தசை வளர்ச்சி க்கு உளுந்து முக்கிய காரணமாகிறது. ஒல்லியாக இருப்பவர்கள் இட்லி, தோசை, உளுந்து வடை  சாப்பிட்டால் தசைப்பிடிப்பு ஏற்படும். ஆனால், சதையாலான இந்த உடம்பு எதற்காவது பயன்படுமா?,  எனவே, பயனற்ற இந்த உடலை உனக்கே  அர்ப்பணிக்கிறேன் ஆஞ்சநேயா என்ற தத்துவார்த்தத்தின் அடிப்ப டையிலேயே உளுந்துவடை மாலை அணிவிக் கிறோம். அனுமானுடைய தாய்  அஞ்சனா தேவி தன் மகன் திடமாகவும், ஆரோக்கியமாக வும் இருக்க உளுந்து வடை செய்து கொடுத்த தாக ஐதீகம்.  

செந்தூரக்காப்பு  வழிபாடு:
ராம ராவண யுத்தம் முடிந்த பிறகு சீதையை பார்த்து செய்தியை கூற அனுமன் சென்ற போது சீதை நெற்றி வகிட்டில் செந்தூரம் அணிந்து  இருந்ததை  பார்த்து இது குறித்து சீதையை வினவ ராமன் ராவணனுடன் யுத்த ம் செய்ய செல்லும் போது அவருக்கு வெற்றி கிடைக்க  வேண்டி செந்தூரம் அணிந்ததாக கூறினார்.

நெற்றியில் சிறியதளவு இட்டதற்கே இத்தனை பெரிய வெற்றி ராமனுக்கு என்ற போது உடல் முழுவதும், பூசினால் ராமன் எவ்வளவு வெற்றி  வாகை கூட முடியும் என எண்ணி உடல் முழுதும் ஆஞ்சநேயர் செந்தூரம் அணிந்து கொண்டதாகவும், இதுவே அனுமனுக்கு செந்தூரம்  சாத்தும் வழக்கம் வர காரணம் என்பதாகவும் வரலாறு கூறுகிறது.

அனுமனின் வால் வழிபாடு:
சூரியனிடம் பாடம் கற்று, அனுமன் சூரியனை வலம் வந்த போது மற்ற கிரகங்கள் அனைத் தும் சூரியனுடன் அனுமனையும் சேர்த்து வலம் வந்தன. இதனால் அனுமனின் வாலிற் குப் பின்புதான் நவக்கிரகங்கள் இருக்க வேண்டியதாகி விட்டது.

இதன் மூலம் அனுமனை வழிபடுபவர்கள் அனைவருக்கும் நவக்கிரகங்களின் பாதிப்பு கள் எதுவும் இருக்காது என்பது ஐதீகம். அனுமன் வாலைத் தொட்டு வழிபடுபவர்களு க்கு அவர்கள் நினைத்தவை அனைத்தும் நிறைவேறும்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.