விரதத்தின் போது வண்ண உடை ஏன் உடுத்தக் கூடாது தெரியுமா. வாருங்கள் படித்து தெரிந்து கொள்வோம்.
மானிடர்களை சனி பகவானின் ஏழரை வருடம் தண்டிக்கிறீர்கள். அவர்களுக்கு நல்லருள் அருளக் கூடாதா என சனீஸ்வர ரிடம் ஐயப்பன் கேட்க, அதற்கு அது என் தர்மம், பிரம்மன் படைத்தலும், மகா விஷ்ணு காத்தல், ஈசன் அழித்தன் என வேலையை செய்கின்றனர்.
படைத்தல், காத்தல், அழித்தல் தர்மம் என் றால், அது தடைப்பட்டால் எப்படி சிருஷ்டி இயங்காதோ, அதே போல், நான் கர்ம வினைகளுக்கு ஏற்ப மானிடரைத் தண்டிக் காவிட்டால் என் தர்மம் என்ன ஆகும் என சனீஸ்வர் கேட்டார்.
தோடு மானிடர்களை அவரவர் கர்ம வினைக்கேற்ப தண்டனை அழிக்காவிட் டால் எப்படி சிருஷ்டி இயங்கும் என சனீஸ்வரர் கேட்டார்.
எழரை சனி
சிருஷ்டி என்பது மனிதர்களின் சந்தோசத்திற்கும், ஆனந்த அமைதிக்கும் தான் சிருஷ்டி செயல்படுகிறது.
மானிடர்களின் கர்ம வினை பலன்களை தரத்தானே நீ உள்ளாய். சரி என கூறி, ஐயப்பன் பல்வேறு தண்டனைகள் அடங்கிய விதிகள் அதாவது விரதத்தை கடைப்பிடிப்பது குறித்து வாக்கு கொடுத்தார்.
சனீஸ்வரர் தன் ஏழரை ஆண்டுகால பிடியில் ஒருவனுக்கு எப்பேர்ப்பட்ட தண்டனை வழங்குகிறார் என்பதையும், அதற்கேற்றார் போல் விரதத்தை அமைத்து, தீய பார்வையிலிருந்து தன் பக்தர்களை காக்க ஐயப்பன் விரத முறையை அமைத்தார்.
ஒரு மண்டல காலம் விரதம் இருக்கும் ஒருவருக்கு சனீஸ்வரரின் கொடும் பார்வையிலிருந்து காத்தருள கேட்டுக் கொண்டார்.
ஒரு மண்டலத்தில் ஏழரை ஆண்டு கால தண்டனை
ஒரு மண்டலம் விரதம் இருக்கும் ஒருவரு க்கு, ஏழரை ஆண்டு கால தண்டனையை எப்படி கொடுப்பது என சனி பகவான் கேட்டார்
சனீஸ்வரரின் ஏழரை ஆண்டு தண்டனை எப்படி ஒரு மண்டலத்தில் பொருந்தும் என்பதை ஐயப்பன் விளக்கினார்
சனீஸ்வரர்:
விதவிதமான உணவு உண்டு, பழ ரசங்களை அருந்தி மகிழும் பலரை, சோற்றுக்கே வழியின்றி அலைய வைப் பேன். அதனால் அவர்கள் பட்டினியிலிரு mnந்து தப்பிக்கவே முடியாது என்றார்.
ஐயப்பன்:
தன் பக்தர்கள் எளிமையான உணவை ஒரு பொழுது உண்பார்கள்.
சனீஸ்வரர்
மலர் தூவிய மஞ்சத்தில் உறங்கிய மன்னவனைக் கூட கல்லிலும், மண்ணிலும் உறங்க வைப்பேன் என்றார்.
ஐயப்பன்
என் பக்தர்கள் கட்டிலில் உறங்காமல், வெறும் தரையில் படுத்து உறங்குவார்கள் என்றார்.
சனீஸ்வரர்
முக்கிய விஷயம் என்ன வென்றால், என் பார்வை பட்டால் இணைந்திருக்கும் தம்பதியர் கூட பிரிந்து விடுவார்கள்
ஐயப்பன்
கடுமையான பிரம்மச்சரியத் தைக் கடைப்பிடித்து, சுவாமியே சரணம் ஐயப்பா என்ற சரண கோஷத்தை உச்சரி த்து, காடு, மேடுகளை கடந்து என் தரிசன த்திற்கு வருவார்கள். அப்படி வரும் பக்தர் களை நீ ஒரு கணம் கூட பிடிக்கக் கூடாது, அவர்களுக்கு சுக சௌக்கியங்களைத் தான் அளிக்க வேண்டும் இது என் அன்பு வேண்டுகோளும், கட்டளையும் ஆகும் என்றார்.
கருப்பு உடை
கட்டிக் கொள்ள உடை இல்லா மல், தலைக்கு எண்ணெய் இல்லாமல், காலுக்கு காலணி இல்லாமல், தன்னை தானே கண்டுகொள்ள முடியாத படி உருவ ம் சிதைந்து, செயலிழந்து, சக்தியின்றி வாடிப் போக வைத்துவிடுவேன்.
ஐயப்பன்
உனக்கு பிடித்த வண்ணம் கருப்பு தானே. விரத காலத்தில் கருப்பு உடை அணிந்து, காலணி கூட அணியா மல், முடி கூட திருத்திக் கொள்ளாமல், மணி மாலை அணிந்து, சுக சௌக்கியங் களில் ஒதுங்கி நிற்பார்கள். அனைவரா லும் சுவாமி என அழைக்கப்படுவார்கள். நீங்கள் சொன்ன கஷ்டங்களை எல்லாம் பக்தி சிரத்தையோடு ஏற்று அதை விரத மாக கடைப்பிடிப்பார்கள்.
விரதம் முக்கியம்
மனம் மிகு பன்னீரில் குளித்த வர்களைக் கூட, நான் வெறும் தண்ணீரு க்கே அல்லாட வைப்பேன்.
ஐயப்பன்
உதயத்திலும், மாலையிலும் பச்சை தண்ணீரில் என் பக்தர்கள் குளிப்ப தை பக்தி சிரத்தையுடன் ஏற்பார்கள்*
*தர்ம சாஸ்தாவின் இந்த கட்டளையை சிரமேற்கொண்டு சனிபகவான் இன்றும் ஐயப்ப பக்தர்கள் கொடும் பார்வை செலுத் தாமல் நன்மையை செய்து வருகின்றார்
இப்படி சனிபகவானை ஐயப்பன் சம்மதிக் க வைத்து, தன் பக்தர்களுக்கு இத்தனை கட்டுப்பாடுகளை விரதமாக வைத்துள் ளார். இதன் காரணமாக தான் கருப்பு உடை உடுத்தி ஐயப்ப பக்தர்கள் கடும் விரதம் இருந்து மலைக்கு செல்கின்றனர்
நாமும் இந்த சரியான காரணத்தை உணர் ந்து ஐயப்ப விரதத்தை சரியாக பின்பற்றி சனிப்பார்வையிலிருந்து தப்பித்து நன்மையை பெற்று மகிழுங்கள்
அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகன் ஸ்ரீ ஹரிஹர சுதன் அய்யன் ஐயப்பன் மனமுருகி பிரார்த்தனை செய்யுங்கள், சகல சௌபாக்கியம் வாழ்வில் வளமும், நலமும் பெறுவோம்.