மாருதியே! என்றும் நீயே கதியே! - பக்தி
வானில் நீயே முழுமதியே! - எம்
வாழ்வில் தருவாய் நிம்மதியே! - தினம் வழங்குக திருவருள் வெகுமதியே!
பொதுவாக மனிதர்களின் மனம் ஓரிடத்தில் நிற்பதி ல்லை. ஒன்றைப் பற்று வதில்லை. அதனால்தான் கிளைக்கு கிளை தாவும் வானரத்தை உவமை யாக்கி 'மனம் ஒரு குரங்கு’ என்கிறோம். 'குரங்கு கையில் பூமாலை’ என்றும் குறிப்பிடுகிறோம்.
மனிதர்களாகிய நம்முடை யவர்களின் மனம் குரங்காக இருக்கிறது. ஆனால், குரங்காகிய அனுமாருடைய மனம் ஒரு குறிப்பிட்ட புள்ளியில் நிற்கிறது. அதனால்தான் அவருக்குக் கோயில்! அதிலும் ஒரு அதிசயம் பாருங்கள்.ராமருக்குக் கூட தனி ஆலயம் கிடையாது. இலக்குவன், சீதை,ஆஞ்சநேயர் சூழ தரிசனம் தருகிறார் பெருமாள். அனுமாரோ தனித்து ஆலயம்பெற்றார். ராமர் கோயிலிலும் இருக்க இடம் உற்றார்!
காரணம் என்ன? தன்னல மறுப்பாளராகிய அவரு டைய தகைமை தானாக வந்து சேர்கிறது. விநயம் கொண்ட அவருக்கு புகழ் விமரிசையாக வந்து பொருந்துகிறது.
மக்கள் மனங்களை எல்லாம் ஆளுகிறார் மாருதி. கம்ப ராமாயணத் தின் நான்காவது காண் டத்தின் 2-வது படலத்தில் தான் அறிமுகமே ஆகிறார் ஆஞ்சநேயர். ஆனால், அனைவரின் மனங்களை யும் அவர்தானே ஆளுகி றார்?சாதாரணமாக நாம் ஒரே இடத்தில் சேர்ந்து பார்க்காத பல குணங்கள், சக்திகள் மாருதியிடம் ஒன்றியுள்ளன. நல்ல புத்திசாலி, தேக பலம் இல்லாமல் இருப்பான். பெரிய பலசாலி, அறிவுக் கூர்மை இல்லாமல் இருப்பான். இரண்டும் இருந்தால், வீரமில்லாமல் இருப்பான். எடுத்துச் சொல்கிற விழிப்பு உணர்வு இல்லாமல் இருப்பான். அடக்கம் இல்லாமல்தான் தோன்றியாகதிரிவான்.
ஆஞ்சநேயரிடமோ எதிரெதிர் குணங்கள், சக்திகள்கூட இணைந்திருந்தன. வலிமை இருக்கிறவன் கெட்ட வழியில் போவதுண்டு. ஆனால், ஆஞ்சநேயர் தூய எண் ணங்களின் துறைமுகமா கத் துலங்குகிறார். இன்றைய பாரத இளை ஞர்கள் எல்லாம் அனுமா ரிடம் பாடம் படிக்க வேண்டும். அறிவு, திறமை, வீரம், சேவை, சொல்லாற்றல், பணிவு என அனைத்தையும் தன்னை வழிபடுபவர்க ளுக்கு வாரி வழங்குகி றார் மாருதி.
வாசம் வீசும் துளசி மாலையும், வடைமாலையையும், வெற்றி லை மாலையும் நாம் சூட்டி மகிழ்ந்தால், நமக்கு 'வெற்றி மாலையை’ச் சூட்டு வதற்கு அவர் தயாராக இருக்கிறார்.
நவக்கிரக வினை நாடாமல், சுபக்கிரகம் தனில் நம்மை சோபிக்க வைக்க, இக பர சுகத்தை இனிதே கொடுக்க அனுக்கிரகம் செய்கிறார் ஆஞ்சநேயர். மகாபாரதப் போரில் பாண்டவர்கள் பரந்தாமன் அருளால் வெற்றி பெற்றார்கள். வெற்றி பெறும் விஜய னுக்காக கண்ணபிரான் தேர் நடத்தினார். அந்தத் தேர்க் கொடியில் திகழ்ந்தவர் ஆஞ்சநேயர். தன் மாபெரும் மந்திர சக்தியால், ராம ஜபத் தால் போரில் தேர் எரிந்து விடாமல் காத்தவர் அவரே!
அதேபோல், ஹனும மந்திரத் தை ஜபித்தும் வழிபடுவது காரியத்தடைகளையெல்லாம் நீக்கும் என்பது ஐதீகம்.
ஹனும மந்திரம் :
ஓம் ஐம் ஹ்ரீம் ஹனுமதே ராமதூதாய லங்காவித்வம் ஸனாய; அஞ்சனா கர்ப்ப ஸம்பூதாய ஸாகினி டாகினி வித்வப் ஸனாய கிலகிய பூபூ காரினே விபீஷணாய ஹனுமத் தேவாய ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஹ்ராம்ஹ்ரீம் ஹ்ரும்பட் ஸ்வாஹா
இந்த மந்திரத்தை செவ்வாய்க் கிழமை, புதன் கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் அவசியம் சொல்லுங்கள். அனுமனைத் தரிசித்து வேண்டுங்கள். காரியத்தை வீரியமாக்கித் தந்தருளுவார். எடுத்த காரி யத்தையெல்லாம் நிறைவேற் றித் தந்திடுவார் ராம பக்த அனுமன்!
அனுமனுக்கு வெண்ணெய் சார்த்தி வேண்டிக்கொண்டால், குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். பிரிந்த தம்பதி ஒன்றிணைவார்கள் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
பன்முகச் சிறப்பு பெற்ற மாருதி, பஞ்ச முகம் பெற்றும் விளங்குகிறார். வாராஹர், நரசிம்மர், ஹயக்ரீவர், கருடர், ஆஞ்சநேயர் எனச் சிறக்கும் அவரின் அடிமலரை நாமும் தொழுவோம்.!