உண்மையான பக்தனின் அழுகையை பார்த் துக் கொண்டிருக்கமாட்டார் ஆஞ்ச நேயர். ஓடிவந்து அபயக்கரம் நீட்டுவார். அருள் வழங்கி கைதூக்கி விடுவார் என்கிறார்கள் பக்தர்கள்.
உண்மையான பக்தன் எப்படி இருக்க வேண் டும் என்பதற்கு உதாரணமாய் சொ ல்ல வேண்டும் என்றால், முதலிடத்தில் இருப்பவர் ஆஞ்சநேயர்தான்.
ஆமாம். தன்னை வீர அனுமன் என்றோ, ஜெய் அனுமன் என்றோ சஞ்ஜீவி என்றோ பெருமை யுடன் நாம் சொல்லிக் கொள்ள லாம். ஆனால் இதையெல்லாம் அவர் ஒரு போதும் விரும்பி யதே இல்லை. ராமபக்த அனுமன் என்று சொல்லும் போதே குதூகலமாகி விடுவார் அனுமார். அந்த அளவுக்கு ஸ்ரீராமபிரான் மீது, ஆழ்ந்த பக்தியுடன் திகழ்ந்தவர் அனுமன்.
அனுமாரின் பலம் அனுமாருக்கேத் தெரியா து என்பார்கள். ஒருவகையில் உண்மை தான். தன் பலமும் பராக்கிரமும், ராமபிரானை அனவரதமும் பூஜித்துப் போற்றுவதும் வணங்கித் தொழுவதுமே என்று உறுதியாக இருந்தார் ஆஞ்சநேயப் பெருமான்.
அனுமனிடம் உள்ள இன்னொரு சிறப்பை பாருங்கள். எல்லா தெய்வங்களும் அபய ஹஸ்தம் என்பதான முத்திரைகளில்தான் தங்கள் திருக்கரங்களை வைத்திருப்பார் கள். அப்படியே திருக்கரங்களை வைத்த படி நமக்கு அருள்பாலிப்பார்கள்.
ஆனால் அனுமனோ, தன் இரண்டு கைக ளை யும் கூப்பிய நிலையில், நம்மைப் போல, அதா வது ஒரு பக்தனைப் போல காட்சி தருவார். இதுவே அனுமனின் மகத் தான சிறப்பு என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.
ஆகவே பக்தர்களின் தலைவனாகத் திக ழும் அனுமனை, அஞ்சனை மைந்தனை, ஆஞ்சநேய பெருமானை வணங்குங்கள். குறிப்பாக சனிக்கிழமை நன்னாளில் மறக்காமல் வணங்குங்கள்.
அவனுடைய சந்நிதியில் நின்று கொண் டு, ‘ஜெய் அனுமன்’ ‘ஆஞ்சநேயருக்கு ஜே’ என்று சொல்கிறோமோ இல்லையோ... ‘ஜெய் ராம்... சீதாராம்... ராம்ராம் சீதாராம்’ என்று ராமநாம த்தை இப்படியாகவேனும் சொல்லுங்கள்.
அனுமன் சாலீசா பாராயணம் படியுங்கள். முடி யாதவர்கள், அனுமன் சாலீசாவைக் காதாரக் கேளுங்கள். ஸ்ரீராம ஜெயம் எழுதுங்கள்.
இதில் மகிழ்ந்து குளிர்ந்து போவான் அனுமன்
உங்கள் குறைகளையெல்லாம் சொல்லி, வருத்தங்களையெல்லாம் சொல்லி அனு மனி டம் அழுது புலம்பினால்... அவ்வளவு தான்... உங்கள் அழுகையை அவனால் தாங்கிக்க் கொள்ளவே முடியாது.
ஒடோடி வருவான். உங்கள் துயரங்களைப் போக்குவான். உங்கள் வாட்டத்தையெல் லாம் போக்கியருள்வான் வாயுமைந்தன்.
ஜெய் ராம்... சீதாராம்... ராம்ராம் சீதாராம்...