ஒரு பெண் கற்ப்பமுற்று குழந்தை வயிற்றிலேயே இறந்து விடுகிறது பிறந்து ஒன்று இரண்டு மூன்று வருடங்கள் மற்றும் பூப்பு அடையமல் இறந்த பெண்களை கன்னி தெய்வமாக வழிபாடு செய்யப்படுகிறது.
முக்கியமாக காவிரி ஆற்றுப் படுகை மற்றும் நதிநீர் நிலைகள் அருகில் மற்றும் சமுத்திர கரைகளில் பூஜை ஆடி 18 அன்று செய்யப்படுகிறது.
இந்த பூஜை ஆனது இறந்த பெண்ணின் உருவத்தை மணலால் செய்து வாழை இலையில் குழந்தைகளுக்கு பிடித்தமான பாவாடை சட்டை கவுன் வளையல்கள் பொட்டு ரப்பர் பேண்ட் மற்றும் அவல்பொரி தேங்காய் பழம் படம் வைத்து பூஜை செய்வார்கள்.
மணல் உருவத்துக்கு தங்க சங்கிலி அணிவித்து அழகுபார்த்து.
மணல் உருவத்தை நீரில் கரைத்துவிடுவார்கள். உடைகளை இயலாத பெண்பிள்ளைகளுக்கு கொடுத்து விடுவார்கள்.
இன்றும் இந்த வழிபாட்டு முறைகளை செய்பவர்கள் உண்டு.
இப்படி செய்வதால் கன்னி தெய்வங்களின் ஆசிகள் குடும்பத்துக்கு கிடைத்து சந்தோஷமான வாழ்வு அமையும் என்பது ஐதீகம்.
அடுத்து பிறக்கூடிய சகோதர சகோதரிகளுக்கு எந்த இன்னல்களும் வராமல் பாதுகாக்கும்.
சிறு வயதிலே இறந்த பெண் குழந்தைகளுக்கு ஆடி 18 அன்று பூஜை செய்து குலதெய்வத்தின் ஆசிகளையும் பெறுங்கள்.