Breaking News :

Thursday, November 21
.

கட்டீல் துர்கா பரமேஸ்வரி, கட்டீல், மங்களூரு


கர்நாடகா மாநிலத்திலே இருக்கும் இந்த கோயில் நந்தினி ஆற்றின் நடுவில் உள்ளது. கட்டீல் என்றால் இடுப்பு  நடு பகுதி மைய்யம் என்பது அர்த்தம்.

கோவில் ஆற்றின் நடுவில் அதன் இடுப்புப் போன்ற பிரதேசத்தில் அமைந்துள்ளதால் இந்தப்பெயர் பெற்றது.

கடி என்பது மையம் ஈல் என்பது பூமி
பெரிய பாறையாய் மாறி அசுரனை வென்றதால் இன்றும்  கோவிலின் நடுவே பாறையைப் காணமுடியும்.

ஜாபாலி முனிவர் மக்களை பஞ்சத்தில் இருந்து காக்க காமதேனுவின் மகள் நந்தினியை ஆறாக மாற்றி சுபிக்ஷத்தை தந்த இடத்திலே துர்கா பரமேஸ்வரியின் திருக்கோவில்.

பூமியின் மையத்திலே துர்கா பரமேஸ்வனரி இருப்பதால் கடீல் துர்கா பரமேஸ்வரி என அழைக்கப் படுகின்றாள்.

பிரமனின் வரம் பெற்ற அருணாசுரன் எனும் அரக்கனைக்  கொன்று மக்களைக் காத்தவள்.

தேவியின் சக்தி அலாதியானது. அவள் மக்களின் வாழ்க்கையை புத்துயிர் பெறுவாள் மற்றும் அவளுடைய தெய்வீக ஆற்றலை ஊற்றுகிறாள், இந்தக் கோவிலுக்கு வந்து வழிபட்டால் அனைத்து வேண்டுதல்களும் நிறைவேற்றப் பெறுவர் என்பது ஐதீகம்
இன்று கேசவ் ஜியின் கரங்களிலே ஓவியமாய் வந்து நம்மை அருள்பாலிப்பவள் கண்ணெதிரே திவ்யமாக காட்சியளிக்கின்றாள்.

தங்க கவசத்திலே
பச்சைப் புடவையிலே

மல்லிமலர் சரங்களின் நடுவே தங்கமாய் ஜொலிக்கின்றாள்
கண்கள் காருண்ய மழை பொழிகின்றது

வெள்ளி மண்டபத்தின் நடுவே விஷ்ணு துர்க்கா பரமேஸ்வரியாய்
சங்கு சக்கர தாரியாக அற்புத தரிசனம்.

சர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம்

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.