Breaking News :

Thursday, May 08
.

குசலவபுரீஸ்வரர் கோவில், கோயம்பேடு


ஆயிரம் பிரதோஷம் பார்த்த பலன் கிடைக்க செல்ல வேண்டிய கோவில்.

சென்னை கோயம்பேட்டில் குசலவபுரீஸ்வரர் கோவில் இருக்கிறது. இது ராமாயணத்தோடு தொடர்புடைய ஆலயம். ராமபிரானின் மகன்களான லவன் மற்றும் குசன் இருவரும், யார் என்று தெரியாத காரணத்தால், ராமரோடும், அவரது சேனைகளோடும் போரிட்டனர்.

அந்த தோஷம் நீங்குவதற்காக, வால்மீகி முனிவரின் உத்தரவுப்படி 12 ஆண்டு காலம், இத்தலத்தில் தங்கியிருந்து பிரதோஷ பூஜை செய்து வந்தனர். அப்போது வால்மீகி முனிவருடன் சேர்ந்து லவனும், குசனும் ஆதரவற்ற பசுக்களை பாதுகாத்து வந்தனர்.

இதன் காரணமாகவே இத்தல இறைவன் ‘குசலவபுரீஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார். இந்த ஆலயத்தில் ஒரு பிரதோஷ வழிபாட்டை மேற்கொண்டால், ஆயிரம் பிரதோஷம் பார்த்த பலன் கிடைக்குமாம்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.