"சோறு கண்ட இடம் சொர்க்கம்" என்று ஒரு பழமொழி உண்டு. இது சோம்பேறுகளுக்காக சொல்லப்பட்ட பழமொழி என பலரும் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் இறைவனுக்கு செய்யப்படும் அன்னாபிஷேகத்தை கண்டால் சொர்க்கம் நிச்சயம் என்பது தான் இதன் உண்மையான பொருள்.
சிவ பெருமானுக்கு அபிஷேகம் செய்யக் கூடிய ஒவ்வொரு பருக்கையும் ஒரு vசிவத்திற்கு சமம். அபிஷேகம் செய்யப்பட்டுள்ள ஒவ்வொரு அரிசியிலும், ஒவ்வொரு பருக்கையிலும் ஒரு சிவத்தை காண முடியும். கோடி சிவலிங்க தரிசனம் பல ஜென்ம பாவங்களை போக்கும் என பெரியவர்கள் சொல்லி வைத்துள்ளார்கள்.
சிவ பெருமான் அபிஷேகப் பிரியர் என்பது அனைவருக்கும் தெரியும். ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பொருளை கொண்டு sசிவனுக்கு அபிஷேகம் செய்வது என்பது சிறப்பானது. அப்படி ஐப்பசி மாதத்தில் மிக உயர்ந்த அன்னத்தை கொண்டு அபிஷேகம் செய்வது பல ஜென்ம பாவங்களை vபோக்கக் கூடியது. நாம் செய்த பாவம் மட்டுமின்றி நமது முன்னோர்கள் செய்த பாவங்கள் தொலைவதுடன், நமது பரம்பரைக்கே அன்ன தரித்திரியம் வராது.
அன்னம் என்பது பிரம்மத்திற்கு சமமானது. இந்த பிரம்மத்தை கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்வது இந்த ஐப்பசி mமாதத்தில் தான். உலகத்தில் உள்ள உயிர்கள் நிலை பெற்று இருக்கக் செய்வது அன்னம் அல்லது உணவு. இந்த அன்னத்தின் சிறப்பு பற்றியும், அன்னத்தால் செய்யப்படும் அபிஷேக பலன் பற்றியும் நமது முன்னோர்கள் மிக எளிமையாக பழமொழியில் சொல்லி இருப்பார்கள்.
”சோறு கண்ட இடம் சொர்க்கம்" என்று ஒரு பழமொழி உண்டு. இது சோம்பேறுகளுக்காக சொல்லப்பட்ட பழமொழி என பலரும் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். சட்டியில் இருந்தால் அகப்பையில் என்பது போது பல பழமொழிகள் தவறான அர்த்தத்தில் புரிந்து கொள்ளப்படுவது போல, இதுவும் sதவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. உண்மையில் இறைவனுக்கு செய்யப்படும் அன்னாபிஷேகத்தை கண்டால் சொர்க்கம் நிச்சயம் என்பது தான் இதன் உண்மையான பொருள்.
சிவ பெருமானுக்கு அபிஷேகம் செய்யக் கூடிய ஒவ்வொரு பருக்கையும் ஒரு சிவத்திற்கு சமம். அபிஷேகம் செய்யப்பட்டுள்ள ஒவ்வொரு அரிசியிலும், ஒவ்வொரு பருக்கையிலும் ஒரு சிவத்தை காண முடியும். கோடி சிவலிங்க தரிசனம் பல ஜென்ம பாவங்களை போக்கும் என பெரியவர்கள் சொல்லி வைத்துள்ளார்கள். ஆனால் ஒருவர் தன்னுடைய வாழ்நாளில் ஒவ்வொரு சிவ லிங்கமாக தரிசித்து, கோடி சிவலிங்கங்களை தரிசிப்பது என்பது முடியாத காரியம்.
அதனால் ஒரு சில கோவில்களில் கோடி சிவலிங்கங்கள் வைத்திருப்பார்கள். சில கோவில்களில் சிவ லிங்கத்திற்குள்ளேயே சிறிது, சிறிதாக லிங்கங்களாக அமைத்து சகஸ்ரலிங்கமாக mவைத்திருப்பார்கள். ஆனால் கோடி லிங்கத்தை தரிசிக்க கோடி முறை சிவாலயத்திற்கு செல்வதும், கோடி லிங்கம் இருக்கும் கோவிலுக்கு சென்று, கோடி லிங்கத்தையும் தனித்தனியாக தரிசனம் செய்வதும் கடினம். கோடி லிங்கம் இருக்கும் கோவிலுக்கு சென்று இந்த லிங்கங்களை தரிசனம் செய்யும் பாக்கியம் எல்லோருக்கும் கிடைத்து விடுவதில்லை.
அதனால் ஐப்பசி மாதம் பெளர்ணமியன்று அன்னாபிஷேகம் செய்து அதில் உள்ள ஒவ்வொரு சாதத்திலும், அரிசியிலும் ஒரு சிவத்தின் ரூபத்தை காணலாம். ஒரு சிவத்தை வழிபட்ட பலன் அந்த நாளில் கிடைக்கும் என சிவ பெருமானே நமக்கு வரமளித்துள்ளார். அந்த வரத்தின் படி அன்னாபிஷேகத்தை கண்டால் அதில் உள்ள கோடான கோடி சோறும் கோடான கோடி சிவ லிங்கங்களை சென்று தரிசனம் செய்த பலனை நமக்கு தரும்.
சந்திரன் தனது பாவம் தீர எங்கெல்லாலாமோ அலைந்து திரிந்தும் வழி கிடைக்கவில்லை. கடைசியாக சிவனிடம் சென்று, அவரை வழிபட்டு, முறையிட்ட போது சிவ பெருமான், தேய்ந்த நிலையில் இருந்த பிறையை தனது முடியில் சூடிக் கொண்டி, என்றென்றும் இதே உயர்வுடன் காட்சி தருவார் என சந்திர மெளலீஸ்வரராக நமக்கு காட்சி கொடுத்து, சந்திரனுக்கு சாபம் விமோசனம் தந்து, இழந்த பொலிவை மீண்டும் தந்த நாள் இந்த ஐப்பசி பெளர்ணமி. இந்த நாளில் சிவனை வழிபட்டால் நம்முடைய பாவங்களும், துயரங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.
மனிதனுக்கு போதும் என்ற நிறைவை தரும் உணவு மட்டும் தான். அதனால் தான் அந்த அன்னத்தை கொண்டு இறைவனுக்கு அபிஷேகம் செய்தால் நிறைவான வாழ்க்கையை, செல்வங்களை இறைவன் நமக்கு தருவார் என்று நம்பப்படுகிறது.