சிவ பெருமான் கோவிலுக்கு லிங்கோத்பவ காலத்தில் (நேரத்தில் ) சென்று சிவதரிசனம் பெறுவதால் என்ன பலன் கிடைக்கும்? என்ற விபரங்களை சிவ அன்பர்களுக்கு தெரிவிப்பதே இப்பதிவின் நோக்கம்.
திரியோதசியும் சதுர்தசியும் சந்திக்கும் காலம் தான் லிங்கோத்பவ காலம்
அதாவுது அமாவாசை அல்லது பவுர்ணமி தொடங்கி 13 நாள் முடிந்து 14 வது நாள் தொடங்கும் காலம் .
இந்த இருதிதிகளும் சந்திக்கும் காலம் லிங்கோத்பவ காலமாகும்.
இது ஒவ்வோரு மாதமும் ஒரு வளர்பிறையிலும் அல்லது தேய்பிறையிலும் வரும் .
லிங்கோத்பவ காலம் எப்பொழுது தோன்றும் என்று எந்த பஞ்சாங்கதிலும் குறிப்பிடுவது இல்லை.
நாம்தான் இதனை கவனித்து லிங்கோத்பவ காலவேளையில் சிவலிங்க தரிசனம் செய்தால் சிவபராபரதரிசனத்தை அந்த வேளையில் அடையலாம்.
தமிழில் சதுர்த்தசி என்பதை சிவராத்திரி(இரவு ) என்பார்கள்.
பொதுவாக இந்த லிங்கோத்பவகாலம் மாசி மாதம் மஹா சிவ ராத்திரி அன்று இரவுமுழுவதும் இருப்பதால் மஹா சிவ ராத்திரி அன்று மட்டும் உயிர்கள் அனைத்தும் இரவு முழுவது கண்விழித்து பெருமானை வழிபட்டால் சிவனிடத்தில் செல்லலாம் என்று புராண நூல்கள் சொல்கிறது.
கும்பகோணத்தில் உள்ள கும்பேஸ்வரர் கோவில் புராணத்தில் கும்பத்தில் ஏற்பட்ட உயிர் ஆட்சியை பற்றியும் பிரளயத்தை பற்றியும் அறிந்து கொள்ளமுடியும்.
மேலும் திருஅண்ணாமலையில் “அம்பாள் சிவனுடன் சேர்ந்த காலம் லிங்கோத்பவ காலம் “ என்று திருஅண்ணாமலை புராணம் கூறுகிறது.
ஈசனிடத்தில் அனைத்து தவசிகளும் ஒன்றிய காலம் லிங்கோத்பவ காலமாகும்.
அனைத்து தேவதைகளும் இந்த லிங்கோத்பவகாலத்தில் ஈசனை வழிபாடு செய்து தன் பலனை பெருக்கி கொள்கின்றனர்.
இதை ஓமாந்தூர் எல்லையில் அன்னகாமாட்சி உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் காணலாம்.
உணவையும் உறக்கத்தையும் விலக்கினால் புலன்கள் தானாகவே அடங்கும்.
அப்போது இறையுணர்வு பெற முடியும்.நினைத்த காரியம் சித்தி ஆகும்.வைகுண்ட ஏகாதேசியும் இந்த நோக்கம் தான்.
நாளை (7-10-18 )ஞாயிற்று கிழமை பிற்பகல் 1-11 வரை திரயோதசி திதி முடிகிறது.
பிற்பகல் 1-12 முதல் சதுர்தசி திதி ஆரம்பமாகிறது.
எனவே நாளை தேய்பிறை திரியோதசியும் சதுர்தசியும் சந்திக்கும் காலமான(பிற்பகல் 1-11 முதல் 1-12 க்குள்) லிங்கோத்பவவேளையில் லிங்க தரிசனம் செய்து சிவ கதியை அடையலாம்.
ஆனால் நாளை திரியோதசியும் சதுர்தசியும் சந்திக்கும் காலமான (பிற்பகல் 1-11 முதல் 1-12 க்குள் ) லிங்கோத்பவவேளையில் லிங்க தரிசனம் செய்ய முடியாது என்பதால் நம்முடைய மனதால் ,
எண்ணத்தால் , வாக்கினால் கீழ்கண்ட அஷ்ட சிம்மாசன மஹா மந்திரங்களை சொல்லி ஈசனை வழிபடலாம்.
1.ஸ்ரீ பவாய நம
2. ஸ்ரீ சர்வாய நம
3.ஸ்ரீ ருத்ராய நம
4.ஸ்ரீ பசுபதே நம
5.ஸ்ரீ உக்ராய நம
6.ஸ்ரீ மகாதேவாய நம
7.ஸ்ரீ பீமாய நம
8.ஸ்ரீ ஈசானாய நம
இவைகளை சொல்ல முடியாவிட்டால்
"சிவாய நம" எனவும்
இதுவும் சொல்ல முடியாவிட்டால்
"சிவாய வசி" எனவும்
இதுவும் சொல்ல முடியாவிட்டால்
"ஓம்சிவ சிவ ஓம்"
என்று சொல்ல சொல்ல சிவ கதியினை அடையலாம்.
இதே போன்று நாளை(7-10-18)ஞாயிற்று கிழமை ராகு காலத்தில்( மாலை 4-30 முதல் 6-00 மணிக்குள்) சிவ பெருமானை தரிசனம் செய்தால் எதிரிகளால் ஏற்படும் துன்பங்கள் விலகி தைரியம் ஏற்படும் .
குறிப்பு ..ஓம் என்ற மந்திரத்தை சேர்க்காமல் மேற்கண்ட அஷ்ட மஹாமந்திரங்களை உச்சரிக்கும் பொழுது அவைகள் நாமங்களாக உருமாறி போகும்.நாமங்களாக உச்சரிப்பதும் சிறப்புதான்.