Breaking News :

Friday, April 04
.

வருமான தடை விலக வெள்ளிக்கிழமை பரிகாரம்!


எவ்வளவுதான் ஓடி ஓடி பணத்தை சம்பாதித்தாலும் நம்முடைய அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் அளவிற்கு கூட பணம் வீட்டிற்குள் வராது. வேலையில் பிரச்சனை, செய்யும் தொழிலில் பிரச்சனை, என்று பிரச்சினையிலேயே வாழ்ந்து கொண்டிருப்போம். சரி பிரச்சனை இருந்தாலும் பரவாயில்லை. கைக்கு வந்து சேர வேண்டிய பணமாவது ஒழுங்காக வந்து சேர்ந்ததா என்று பார்த்தால் அதுவும் கிடையாது. ஏதாவது ஒரு ரூபத்தில் பணத்தட்டுப்பாடு இருந்து கொண்டே தான் இருக்கிறது. இந்த பிரச்சினையில் இருந்து விடுபட வேண்டும் என்றால் ஒரு எளிமையான சூட்சமமான பரிகாரம் உள்ளது. அதைத்தான் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

வாரம் தோறும் வரக்கூடிய வெள்ளிக்கிழமையில் இந்த பரிகாரத்தை செய்யலாம். வெள்ளிக்கிழமையில் இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் மகாலட்சுமி வசியம் ஏற்பட்டு, வருமானத்தில் இருக்கும் தடை, வேலையில் இருக்கும் தடை, தொழிலில் இருக்கும் தடை நீங்கி, பண வரவு இருட்டிப்பு மடங்காக அதிகரிக்கும் என்பதும் நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது. சரி அந்த பரிகாரம் என்ன எறும்புகளுக்கு உணவு வைக்க வேண்டும் அவ்வளவுதானே. இதில் என்ன புதுமை. எப்படி எறும்புகளுக்கு உணவு வைத்தால் என்ன. நமக்கு புண்ணியம் தான் வந்து சேர போகிறது.

அதில் என்ன சூட்சமம். எறும்புகளுக்கு உணவு வைக்கும் சூட்சமம் நாட்டு சர்க்கரையில் செய்த இனிப்பு பொருட்களை எறும்புகளுக்கு வைத்தால் பண வசியம் ஏற்படும். பாலால் செய்யப்பட்ட இனிப்பு பொருட்களை எறும்புகளுக்கு வைத்தால் பணவசியம் ஏற்படும். நாட்டு சர்க்கரையால் செய்த சர்க்கரை பொங்கல் அல்லது வேறு ஏதாவது இனிப்பு பலகாரங்களை வைக்கலாம். கடைகளில் மில்க் ஸ்வீட் விற்கும், பால்கோவா விற்கும், இதுபோல பொருட்களை வாங்கி கூட எறும்புகளுக்கு நீங்கள் உணவாக வைக்கலாம்.

இதிலும் இன்னும் குறிப்பிட்டு சொல்லப் போனால் கற்பூரவள்ளி இலை, அரச இலை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த அரச இலையை கற்பூரவள்ளி இலையை ஒரு மரத்தடிக்கு கீழே வைத்து விட்டு, அதன் மேலே கொஞ்சம் இந்த இனிப்பு பொருட்களை எறும்புகளுக்காக சாப்பிட வைக்கும்போது அபரிவிதமான பலன் உடனடியாக கிடைக்கும் என்பது நம்பிக்கை. கோவில் மரத்தடிக்குச் சென்று எறும்புகளுக்கு இதுபோல உணவை அளிக்கலாம். உங்கள் வீட்டு பக்கத்திலேயே தோட்டம் இருக்கிறது, வீட்டிற்கு வெளியே இருக்கும் மரத்தடி நிழலில் எறும்புகள் கட்டாயம் இருக்கும். அந்த இடத்திலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். எந்த கிழமையில் செய்தாலும் தவறு கிடையாது. வெள்ளிக்கிழமை இந்த பரிகாரத்தை செய்யும் போது கூடுதலான பலனை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்களுக்கும் பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனை இருக்கிறது, இக்கட்டான பணப்பிரச்சனையில் சிக்கி இருக்கிறீர்கள் எனும் பட்சத்தில் 3 வெள்ளிக்கிழமை, 5 வெள்ளிக்கிழமை இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். பிரச்சனையிலிருந்து சுலபமாக நிச்சயம் வெளிவருவீர்கள். மகாலட்சுமியின் ஆசி நிச்சயம் உங்களுக்கும் கிடைக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.