ஒரு மனிதனின் ஜாதகத்தில் 6 ஆம் இடம் என்பது நோய், கடன், எதிராளி, வழக்கு போன்றவற்றை பற்றி கூறும் ஒரு வீடாகும். இந்த 6 ஆம் இடத்தில் பாதகமான கிரகங்கள் ஏதேனும் இருந்தால் மேற்கூறிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என கூறுவர்.
ஆனால் பலருக்கும் ஜாதகத்தில் இந்த இடம் நல்ல நிலையில் இருந்தாலும் மேற்கூறியவற்றில் எல்லா பிரச்சனைகளும் இருக்கும். அப்படிப்பட்டவர்கள் துதிக்க வேண்டிய “ஸ்ரீ மந்திர ராஜபத ஸ்தோத்திரம்” இது.
மந்த்ர ராஜபத ஸ்தோத்ரம்
ஸ்ரீ ஈஸ்வர உவாச:
வ்ருத்தோத் புல்ல விசா’லாக்ஷம் விபக்ஷ க்ஷய தீக்ஷிதம்
நிநாத த்ரஸ்த விச்’வாண்டம் விஷ்ணும் உக்ரம் நமாம்யஹம்
ஸர்வை ரவத்யதாம் ப்ராப்தம் ஸபலௌகம் திதே: ஸுதம்
நகாக்ரை: சகலீசக்ரே யஸ்தம் வீரம் நமாம்யஹம்
பதா வஷ்டப்த பாதாளம் மூர்த்தா விஷ்ட த்ரிவிஷ்டபம்
புஜ ப்ரவிஷ்டாஷ்ட திச’ம் மஹா விஷ்ணும் நமாம்யஹம்
ஜ்யோதீம் ஷ்யர்கேந்து நக்ஷத்ர ஜ்வலநாதீந் யநுக்ரமாத்
ஜ்வலந்தி தேஜஸா யஸ்ய தம் ஜ்வலந்தம் நமாம்யஹம்
ஸர்வேந்த்ரியை ரபி விநா ஸர்வம் ஸர்வத்ர ஸர்வதா
யோ ஜா’நாதி நமாம்யாத்யம் தம்ஹம் ஸர்வதோமுகம்
நரவத் ஸிம்ஹவச்சைவ யஸ்ய ரூபம் மஹாத்மந:
மஹா ஸடம் மஹா தம்ஷ்ட்ரம் தம் ந்ருஸிம்ஹம் நமாம்யஹம்
யந்நாம ஸ்மரணாத் பீதா: பூத வேதாள ராக்ஷஸா:
ரோகாத்யாஸ்ச ப்ரணச்’யந்தி பீஷணம் தம் நமாம்யஹம்
ஸர்வோபியம் ஸமார்ச்’ரித்ய ஸகலம் பத்ர மச்னுதே
ச்ரியா ச பத்ரயா ஜுஷ்ட: யஸ் தம் பத்ரம் நமாம்யஹம்
ஸாக்ஷாத் ஸ்வகாலே ஸம்ப்ராப்தம் ம்ருத்யும் ச’த்ரு கணாந்விதம்
பக்தாநாம் நாச’யேத் யஸ்து ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்
நமஸ்காராத்மகம் யஸ்மை விதாய ஆத்ம நிவேதனம்
த்யக்தது: கோகிலாந் காமாந் அச்’நந்தம் தம் நமாம்யஹம்
தாஸபூதா: ஸ்வத: ஸர்வே ஹ்யாத்மாந: பரமாத்மந:
அதோஹமபி தே தாஸ: இதி மத்வா நமாம்யஹம்
ச’ங்கரேண ஆதராத் ப்ரோக்தம் பதாநாம் தத்வ நிர்ணயம்
த்ரிஸந்த்யம் ய:படேத் தஸ்ய ஸ்ரீர்வித் யாயுஸ்ச வர்த்ததே
உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோமுகம்
ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம் ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்
ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை போற்றி ஈஸ்வரர் பாடியதாக கருதப்படுகிறது இந்த ராஜ பத ஸ்தோத்திரம்.
இந்த ஸ்தோத்திரத்தை தினமும் காலையில் எழுந்து, குளித்து முடித்து விட்டு, பூஜையறையில் விளக்கேற்றி கிழக்கு திசையை நோக்கி பார்த்தவாறு 3 முறை படிக்க வேண்டும்.
இரவு உறங்கும் முன்பும் முகத்தை கழுவிக் கொண்டு, மூன்று முறை படிக்க கடன் பிரச்சனைகள் தீரும்.
நீண்ட நாள் நோய்கள் தீரும். வழக்குகளில் உங்களுக்கு வெற்றி உண்டாகும்.
கடன், நோய், வழக்கு போன்றவை எந்த ஒரு மனிதனுக்கும் ஏற்படக்கூடாத ஒன்று.
இந்த மூன்றும் யாரொருவருக்கும் உடலளவிலும், மனதளவிலும் மிகுந்த துன்பத்தை தருவதாகும்.
புராணத்தில் தனது பக்தனின் வாக்கை மெய்ப்பிக்க தூணை பிளந்து கொண்டு வந்து அந்த பக்தனை காத்தவர் “ஸ்ரீ லட்சுமி நரசிம்மர்”.
தீமைகளை வேரறுப்பதற்கென்றே தோன்றியவரான நரசிம்ம மூர்த்தியை புகழ்ந்து ஈஸ்வரன் இயற்றிய இந்த “ராஜ பத ஸ்தோத்திரத்தை” பக்தியுடன் துதிப்பதால் நமது அத்தனை வகை பிரச்சனைகளும் தீரும்.