Breaking News :

Friday, April 04
.

மஹா சிவராத்திரி ரகசியங்கள்?


மஹா சிவராத்திரி எதனால் கொண்டாடப் படுகிறது?

இரவு முழுவதும் ஏன் கண் விழிக்க வேண்டும்?

இரவு முழுவதும் ஏன் தீபங்கள் ஏற்ற வேண்டும்?
எல்லா கேள்விகளுக்கும்…

ஆன்மீக வழியில் ஒருபதிலும்,
அறிவியல் ரீதியான ஒரு பதிலும் ,
புராண ரீதியாக ஒரு பதிலும் ,
மருத்துவ ரீதியாக ஒரு பதிலும் ,
வாழ்வியல் ரீதியாக ஒரு பதிலும் ,
ஆக எந்த விதத்தில் வேண்டுமோ அந்த வகையில் பதில் கிடைக்கும் .

இந்து மதம் என்பது மதம் இல்லை, அது வாழ் வியல் நெறிமுறை, எப்படி ஒரு மனி தன் வாழ வேண்டும் என்று செல்லும் நெறி முறை பின்ன டைய முனிவர்கள், சித்தர்கள். ஞானி கள் மூலம் மக்களுக்கு இறைவனால் சொல் லப் பட்ட விதிமுறைகள். என்பதே நிதர்சனமா ன உண்மை. சரி இனி ஒவ்வொரு ரீதியான பதில்க ளையும் பார்க்கலாம்.

சிவராத்திரி என்பது விழா அல்ல, மனதைக் கட்டுப்படுத்தும் மகாவிரதம். அதனால் இதை க் கொண்டாடுகிறோம் என்று சொல்வதை விட, அனுஷ்டிக்கிறோம் என்று சொல்வதே சரி.

சிவராத்திரி என்றால் பட்டினி கிடப்பது, கண் விழிப்பது, கோவிலுக்கு போவதுடன் நின்று விடாமல், இதன் தத்துவம் உணர்ந் து இந்த விரதத்தை அனுஷ்டித்தால், வாழ்க்கை என்றா ல் என்ன என்பதை புரிந்து கொள்ளலாம்.

நம்மனம் சந்திரனின் இயக்கத்தை பொறுத்து செயல்படுகிறது. சந்திரன் வளரும் நாட்கள் 15; தேயும் நாட்கள் 15. இதில் தேய் பிறையின், 14 வது நாள், அதாவது, அமா வாசைக்கு முந்தைய நாள், சந்திரன் ஏறத் தாழ மறைந்து விடும்.

நம் மனமும் இப்படித்தான். ஒருநாள், ஒன்றை அடைந்தே தீரவேண்டும் என்ற ஆசை பொங் கும். அடுத் த நாளே, ‘அது எதற்கு, அதனால் என்ன பயன்’ என எண்ணி அந்த எண்ணம் தேய்ந்து போகும். மறுநாளே, ’விட்டேனா பார்’ என்று, அதே ஆசையின் மீது லயிக்க ஆரம்பி த்து விடும்; இப்படி நிலையில்லாமல் இருப்பது மனம்.

சிவராத்திரியை ஏன் தேய்பிறையின், 14 ஆம் நாள் அனுஷ்டிக்கின்றனர் தெரியுமா?

மனித மனம், ஒரு நிலைப் பட தியானம் அவசி யம். அலைபாயும் மனதை, சிவத்தின் மீது வைத்து, எங்கும் போகாமல் கட்டிப் போட வேண்டும். அப்படி கட்டிப் போட்டா லும், அமா வாசைக்கு முந்தைய நாள், சந்திரனின் சிறு கீற்றுப் போல, மனதின் ஏதோ ஒரு மூலையில் முந்தைய ஆசை எண்ணங்களின் சிறு வடிவம் புதைந்து தான் இருக்கும்.

அதை ஒழித்தால் தான் நாம் பிறவியிலிருந்து விடுபட்டு சிவனை அடையமுடியும். அதற்காக சிவனை வழிப டும் நாளே சிவ ராத்திரி. இந்த தத்துவத்தை உணர்த்தத் தான், சிவனை லிங்க வடிவில் படைத்தனர் நம் முன்னோர். லிங்கத்தின் பாணம் ஏறத்தாழ முட்டையின் வடிவில் இருக்கும். ஒரு முட்டை படம் வரையு ங்கள். அதற்கு முதலும் இல்லை, முடிவும் இல் லை. சுற்றிசுற்றிபோய்க் கொண்டே இருக்கும் அதே போன்றுதான் சிவனும், முதலும், முடிவும் இல்லாதவர்.

மனிதர்களுக்கு அப்படி இல்லை. நமக்கு பிறப் பு என்னும் முதலும், மரணம் என்னும் முடிவும் இருக்கிறது.இது நாம் செய்யும் பாவ, புண்ணி யத்திற்கேற்ப பல பிறவிக ளை தருகி ன்றன. சிலர் ஏழு பிறவி என்று மனிதர்களுக்கு கணக்குச் சொல்வர். ‘எழுபிறவி’ என்பதே சரி!

நம் பாவக்கணக்கு கரையும் வரை, மீண்டும் மீண்டும் பூமியில் எழுந்து கொண்டே இருப் போம். பிறவிசூழலில் இருந்து விடு பட ஏதாவ து வழியிருக்கிறதா என்றால், இருக்கிறது. அதற்கு ஒரு மந்திர வார்த் தை யை சொல்லி யிருக்கின்றனர் முன்னோர அதுதான், ‘அன்பே சிவம்’ பிற உயிர்களையும் தம்மை போல கருதி அன்பு செலுத்த வேண்டும்.

ப்ரதோஷத்தின் அடுத்தநாள் சிவராத்திரி யை கொண்டாடுவதன் சூட்சுமம் என்ன?

புராணம் சொல்லியிருப்பதை முதலில் பார்ப் போம். என்றும் அழிவே இல்லாமல் அமிர்தம் கடையப்படுகிறது. கடைபவர்கள் தேவர்களும் அசுரர்களும். மந்தார மலை மத்து, கடையும் போது முதலில் ஆலம், காலம் என்கிற இரண் டு விதமான விஷம் வருகிறது.
உலகமக்களை இரட்சிக்கும் பொருட்டு சிவன் அதை பருகுகிறார். உமையாகிய சக்தி அதை க்கண்டத்தில் நிறுத்தி வைக் கிறார். எனவே சிவன் திரு நீலகண்டர் என்று போற்றப்படுகி றார். ஆனால் இதற் குப் பின்னால் தெளிவா ன யோக விஷய ங்கள் மறைந்துள்ளன.
முதலில் நந்தியின் கொம்புகளின் நடுவில் நின்று தாண்டவமாடுவது பற்றி பார்ப்போம்.

திருமந்திரத்தில் ,
" ஐந்துகரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே”

இந்தபாடலை படிக்கும் போது ஒரு சந்தேகம் வரக்கூடும். வினாயகர் சிவனின் மகன் தானே? நந்தி மகன் என்று போடப் பட்டிருக்கி றதே என்று. சிவபெருமானே நந்தி தேவனாக குருவாக வந்தார் என்றும் சொல்வார்கள். அப்படி என்றால் வாகன மாகக் காட்டுவது எதனால் ?
இதில்உள்ள சூட்சுமத்த நந்தனாரின் பாடலில் ஒரு வரியில் கேட்கலாம். அதாவது அவரைக் கோவிலுக்குள் அனுமதிக்க மாட்டார்கள். ஏனென்றால் அவர் ஜாதியில் குறைந்தவர். ஆனால் பக்தியில் அவருக்கு ஈடு சொல்ல அன்று யாருமே இல்லை. சரி வாசலில் நின்று எட்டிப் பார்க்கலாம் என்றால், இந்த நந்தி மறைக்கிறது.

அதை அவர் ”நான் செய்த பாவங்களல்ல வா இப் படி நந்தியாக வந்து குறுக்கே நிற் கிறது ” என்பார். ஆக சிவபெருமானை நாம் அடை யத் தடையாக உள்ள வினைகள் எங்கே இருக்கும் நம் உயிர் சக்தியில் பதிந்திருக்கும். அந்த உயிர் சக்தியே நம க்குள் இருக்கும் நெருப்பா கிய குண்டலி னி ஆகும்.

அதாவது நம் தீ என்பதே நந்தி என்றழைக் கப் படுகிறது. அசையாமல் இருக்கும் பேராற்றல் சிவம் அவரே இயக்கும் வல்ல மையுள்ள சக்தி யாகி நம் உடலில் உயிரா க விளங்குகிறார். இதையே குண்டலினி சக்தியாகிய நந்தியின் மேலேறி அமர்ந்தி ருப்பது போல் காட்டப்படு கிறது. வினாய கர் பார்வதியின் பிள்ளை தான் என்று சொல்வார்கள்.

சிவத்தின் சக்திஅம்சமே குண்டலினியாகி நம் மூலாதாரத்தில் உறைகிறது. எனவே தான் மூலாதாரத்தின் தேவதையாக கண பதியைக் குறிப்பிடுவார்கள். வினாயக ரின் உருவமே யோகத்தை உணர்த்துவது என்பதை வினாய கர் அகவல் மூலம் ஔவை நமக்கு தெளிவு படுத்தி இருக்கிறார்கள்.

குண்டலினியானவளை உச்சிக்கு ஏற்றி சிவத் தோடு கலக்கும் போது அமிர்தம் உண்ணலா ம். குண்டலினி உச்சியில் இரு க்கும் போது உச்சி யில் சிவதாண்டவம் காணலாம். எல்லா மே யோக விஷயங்க ளின் குறிகாட்டிகளாக வே திகழ்கின்றன.

பாற்கடல் நம் உடல்,
நம் முதுகு தண்டே மந்தாரமலை,
வாசி எனப்படும் சுவாசமே வாசுகி,
இடகலை, பிங்கலை என்பது தேவர்கள், அசுரர்கள்.

வாசி யோகத்தின் மூலம் தவம் செய்யும் போது குண்டலினியானவள் மேலேரும் போது முதலில் நமது பாவ வினைகள் தான் மேலேறும்.
அது அனாக தம் வரும் போதே அதாவது ஆத்ம லிங்க தரிசனம் காணும் போதே இறை யாற்ற லோடு கலக்கும், அவ்வாறு கலந்தால் எல் லா தவப் பலனும் வீணாகி விடும் என்று குண்டலினி தேவியான வள் அதை விசுத்திக் கு மேலேறாமல் தடுத்து விடுவாள். விசுத்திக் கு மேலே பாவம் நீங்கிய சுத்த சக்தியே சிவத் தோடு ஒன்று சேர்ந்து சாதகனுக்கு அமிர்தம் கிடைக்கச் செய்யும்.

பிரதோஷம் என்றால் பகல் முடிந்து சூரியன் அஷ்தமிக்கும் காலம் என்பார்கள். அதற்கு இன்னொரு பொருளும் உண்டு. அதாவது ஒடுங்கும் நேரம். எல்லா புலன் களும் ஓடுங்கி மகாசக்தி மேலேறும் நேரம். ஶ்ரீவித்யை மார்க் கத்தில் தோள்கண் டம், நீள் கண்டம் என்று சொல்வார்கள்.

அண்டத்தையும் , பிண்டத்தையும் இணைக்கு ம் கண்டமாகிய தொண்டைப்பகுதியைக் குறி த்து சொல்வா ர்கள் பக்தர்களை இரட்சிக்கும் படி அவர்களது பாவமாகிய விஷத்தை சிவன் ஏற்றுக் கொள்வார். ஆனால், மகா சக்தியான வள் அது மேலே றினால் எல்லாம் கெடும் என்று அதை கண்டத்தில் நிறுத்திவிடுவாள்.

ஆக பிரதோஷ வேளையில் (ஒடுங்கும் நேரத் தில்) நமது பாவங்களை சிவன் ஏற்றுக் கொள் வார் என்றுதான் பிரதோஷமும். இதற்கு முன்னால் ஒடுங்கியவர்களின் (நம் முன்னோ ர்களின்) பாவத்தை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி தெரிவிக்கும் வித மாகவும். பூமியில் உள்ளவர்கள் காலத்தை அறிந்து கொள்ளும் பொருட்டு சந்திரனைத் தேய்து வளரச் செய்து அருளியதற்காக வும், அவ்வாறு தேயும் போது அமாவாசை யை ஒட்டிய காலங்களில் ஏற்படு ம் பலவீ னத்தை சரி செய்வதற்காகவும், சிவராத் திரி பூஜை எற்படுத்தப்பட்டது.
நீங்கள் மேல் நாடுகளில் உள்ளவர்களைக் கேளுங்கள் பதிமூன்றாம் நாள், அல்லது எண்ணைக் கண்டு பயப்படுவார்கள். இதில் ஆச்சரியம் என்னவென்றால், நம் முன்னோர் க ளுக்கும் அந்த நம்பிக்கை இருந்தது. பதி மூன்றாவது நாளான (திதி) அன்று பிரதோஷ வேளையில் பூமிக்கு வானில் இருந்து விஷத் தன்மையும், தீய சக்திகளும் வருவதாக நம்பி க்கை இருக்கிறது.

அந்த வேளையில் பூஜை செய்து உலகை காக்க வேண்டுவதே பிரதோஷ பூஜை என்றும். அந்த நேரத்தில் முறைப்படி அதாவது ஆகமவிதிப்படி கட்டப் பட்ட கோவிலில் இருந் தால் அந்த விஷத் தன் மை உள்ள தீயசக்தியி ன் பாதிப்பு ஏற்படாது என்ற கருத்தும் நிலவுகிறது .

எது எப்படியோ எல்லா பாதைகளும் வழிபாடுகளோ, யோகமோ எதுவாயினும் பலன் இறைவனை அடைவதே. என்ன சற்று முன் பின்னாக அமையும். சிவ இரா த்திரி எதனால் என்று புராணக்கதைகள் கேட்டிருக்கிறோம்.

ஒரு வேடன் புலிக்கு பயந்து மரத்துக்கு மேலே ஏறி அமர்ந்திரு ந்ததும், அது வில்வமரம் என்ப தும், தூக் கம் வராமல் இருக்க ஒவ்வொரு இலையா கப் பறித்து கீழே போட்டுக்கொண்டி ருக்க, அது கீழே இருக் கும் சிவலிங்கத்தில் விழுந்ததனால், அவ னுக்கு சிவ தரிசனம் கிடைத்தது, அதுவே சிவராத்திரி என கொ ண் டாடப்படுகிறது என கேள்விப்பட்டு இருக்கிறோம்.

மற்றொரு புராணமும் உண்டு. நான்கு முகம் கொண்ட அயனும், திருமாலும் தங்க ளுக்குள் சொற்போரிட்டுத் தன்னை தேடி ன பொழுது, சிவ பெருமான் திருவுளம் கொண்டு மாசித் திங்கள் பதினான்காம் நாள் திங்கட்கிழமை திருவோணம் கூடிய நல்ல நாள் இராத்திரி பதினான்கு நாழி கையில் மகேஷ்வர மூர்த்த மாக அடியும் முடியும் காட்டாமல் அவ்விருவரு க்கும் காட்சி அளித்து, விசாரிக்கும் போது, பிரம்ம தேவன் சிவனாரின் திருமுடியைக் கண்டதாகப் பொய்யும், திருமாலானவர் திரு அடியைக் காணவில்லை என்று மெய்யும் விளம்பின படியால், நான்முகனுக்கு கோவிலே இல்லாமல் போவது என்ற சாபமும், திருமாலு க்கு காத்தற்சிறப்புரி மை உண்டாகக் கடவது என்று வாழ்த்தும் அருளின தன்றி, அக்காட்சி ஒரு மூன்றேமு க்கால் நாழிகை அளவு விளங்கி மற்ற தேவர்கள் எல்லோரும் கண்டுள்ளமை யால், லிங்கோற்பவ காலமே முகூர்த்தம் என்றும், இராத்திரியில் பரமசிவன் மகே ஷ்வர மூர்த்தமாகத் தோன்றினபடியால் சிவராத்திரி என்றும் பெயர் பெற்றது. வேடனானவன் இதே நாளில் வில்வத்தால் சிவபெருமானை அர்ச்சி த்ததால் சிவதரிச னம் பெற்றான் என்பதே உண்மையாகும்.

ஆனால், இதற்குப்பின்னால் விஞ்ஞான ரீதி யான காரணம் உள்ளது என்பது பலருக்குத் தெரியாது.
பொதுவாக ஒவ்வொரு அமாவாசை, பௌர் ணமி அதற்கு முன் பின் தினங்களில் பூமியி ல் சந்திரனுடைய காந்த சக்தியில் மாற்றம் ஏற்பட்டு சகல விதமான ஜீவராசிகளும் மனநிலைத் தடுமாற்றத்திற்கு ஆளாகி, அந்த நேரத்தில் உதிக்கும் எண் ணங்களினால் செயல்படும் செயல்களின் விளைவாக துன்ப ங்களை அனுபவிக்கி ன்றனர். இது அவர்க ளை அறியாமலேயே ஒவ்வொரு மாதமும் நடந்து கொண்டிருக் கிறது.காரணம் என்ன வென்றால் சந்திர ன் மனோகாரகன். மனதை யும் அதன் எண்ணங்களையும் ஆள்பவன்.
மனநோயாளிகள் அமாவாசையை ஒட்டிய நாட்களில் அதிகத் துன்பத்திற்கு ஆளாவ தும் இதனால்தான். மேற்படி நாட்களில் வியாதியி ன் தாக்கம் அதிகமாக இருக்கும் இது அனுபவ த்தில் நாம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.

சாதாரணமானவ ர்களுக்கு மேற்படி நாட்களி ல் ஞாபகமறதி, ஒவ்வாமை, மன அழுத் தம், ஜீரண சக்திக்குறைபாடு போன்றவைகளால், சோர்வு, தூக்கமின்மை, அதிக உஷணம் போ ன்ற துன்பங்கள் ஏற்படும். இன்றைய நடை முறை வாழ்க்கை சூழலில் இதை உணராமல் நாம் வாழந்து பழகிக்கொண்டோம்.

நம் முன்னோர்கள் இதைப்புரிந்து கொண்ட தால், அமாவாசை மற்றும் பௌர்ணமியை ஒட்டிய நாட்களில் மனவலிமையையும், அறிவின் விழிப்பாற்றலைத் தூண்ட. வும் மன ஒருமை மற்றும் உடல் இயக்கங்களில் நிதான த்தைக் கொண்டுவரவும் விரதம் மற்றும், பூஜைகள், தியானம் போன்றவற்றைக் கடை பிடித்தார்கள்.

ஆன்ம தரிசனம் தேடும் சிவ பித்தர்களுக்கு,
மாலை 6 மணிக்குள் குளித்து விட்டு, உண வு முடித்து விட்டு கோவிலுக்கு செல்லுங்க ள், பணியில் உள்ளவர்கள் பணி முடித்து விட்டு குளித்து விட்டு கோவிலுக்கு சென்று அமைதி யாக அமர்ந்து சிவ சிந்தனை கள் செய்தாலே போதுமானது.

மனதில் சொல்லவேண்டிய மந்திரம்
‘சிவாய நம ஓம்
சிவாய சிவ ஓம்
சிவாய வசி ஓம்
சிவ சிவ சிவ ஓம்’
இப்படி செய்வது ஒரு விதம்,
மற்றது 9 லிங்க தரிசனம் ஒரே இரவில் தரிசிப்பது இன்னொரு விதம்,

சிவ பெருமான் ஆலகால விஷத்தை உட்கொ ண்டதால் அவருடைய உடல் மிக வெப்பமாக மாறி விடுவதாக ஐதீகம். அந்த வெப்பத்தைத் தணிப்பதற்காகவே அவரு க்குப் பல்வேறு வகையான பொருட்களை க் கொண்டு அபி ஷேகம் செய்கிறோம்.
தேன், பால், தயிர், நெய் ஆகியவற்றால் அபி ஷேகம் செய்வது எண்ணற்ற பலன்க ளைக் கொடுக்கக் கூடியது, முடிந்தால் இவைகளை கோவிலுக்கு உபயமாக தரலாம்.

இப்படி சரியாக எதுவும் செய்யாமல் இரவு முழு வதும் தொலைகாட்சி பார்த்து கண் விழிப்பது, நண்பர்களுடன் பொழுது போக் கிற்காக கோவிலை சுற்றி வருவது கோவி லில் உணவு கொடுத்து புண்ணியம் சேர்கி றேன் என்று செய்வது பலன் இல்லை.

சிவராத்திரி என்ற பெயர் வர காரணம் அம்பா ள் தான். பிரளய காலத்தின் போது பிரம்மனு ம், அவரால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்து ஜீவரா சிகளும் அழிந்து விட்ட நிலையில், இரவுப் பொழுதில் அம்பிகை உமாதேவி, பரமேஸ்வரனை நினைத்து பூஜை செய்தாள்.
நான்கு ஜாமங்கள் இரவு முழுவதும் ஆகம விதிப்படி அர்ச்சனை செய்தாள். பூஜையின் முடிவில்அம்பிகை ஈஸ்வரனை வணங்கி, அடியேன் தங்களைப் பூசித்த இந்த இரவை, தேவர்களும், மனிதர்களும் தங்கள் திருநாம த்தாலேயே, அதாவது “சிவராத்திரி” என்றே கொண்டாட வேண்டு ம் என்று வேண்டினாள்.

சிவராத்திரி அன்று, சூரியன் மறைந்தது முதல் மறுநாள் காலை சூரியன் உதயமா கும் வரை, தங்களை(சிவனை)ப் பூஜை செய்பவர் கள் யாராக இருந்தாலும், அவர் களுக்கு எல்லா விதமான பாக்கியங்களை யும் தந்து முடிவில் மோட்சத்தையும் அளிக் க வேண்டும். அருள் புரியுங்கள் என்று அன்னையானவள் வேண்டி கொண்டாள்.

சிவபெருமானும், அப்படியே ஆகட்டும் என்று கூறி அருள் புரிந்தார். அந்த இரவே சிவ ராத்திரி என வழங்கப்பட்டு அனைவராலும் கொண்டாடப்படுகிறது.

பகல் பொழுது பரமேஸ்வரனுக்கும், இரவு ப் பொழுது அம்பிகையான உமாதேவிக்கும் உரியது என்பது நியமம். ஆனால் சிவராத்திரி என்பது அம்பாளின் வேண்டுதலின் படி கொண்டாடப்படுவதால் அது சிவனுக்கு உரியதாயிற்று.

ஓம் நமசிவாய... திருச்சிற்றம்பலம்

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.