Breaking News :

Thursday, November 21
.

மாசி மாதம் சிறப்புகள்


மாசி மாதத்தில்தான் சகல வரங்களையும் அருளும் மகா சிவராத்திரி, சிவபாலன் முருகனை வழிபட உகந்த மாசிமகம், முன்னோர்களின் ஆசிகளைப் பெற்றுத்தரும் மாசி அமாவாசை ஆகிய புண்ணிய தினங்களும் வருகின்றன.

ஓம் நமசிவாய  ஓம் நமசிவாய 

ஓம் நமசிவாய 

அலகில் சோதியனே போற்றி

அர்த்த நாரிசனே போற்றி

அருணாசலனே போற்றி

அம்பலவாணனே போற்றி

ஆலவாய் அழகனே போற்றி

ஆடிய பாதமே போற்றி

ஆனந்த்க்கூத்தனே போற்றி

இடபவாகனனே போற்றி

இடர்தனைத்தீர்ப்பவனே போற்றி

ஈசனே போற்றி                                                     10

 

மாதங்களில் மாசிக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. மாசி மாதம் புனித நீராட உகந்த மாதமாகவும் அதே நேரம் சுப நிகழ்ச்சிகள் செய்ய உகந்த மாதமாகவும் போற்றப்படுகிறது. இந்த மாதத்தில்தான் சகல வரங்களையும் அருளும் மகா சிவராத்திரி, சிவபாலன் முருகனை வழிபட உகந்த மாசிமகம், முன்னோர்களின் ஆசிகளைப் பெற்றுத்தரும் மாசி அமாவாசை ஆகிய புண்ணிய தினங்களும் வருகின்றன. இதோ மாசி மாதத்தில் வரும் விழாக்கள் மற்றும் விசேஷங்கள் சிலவற்றை தற்போது காணலாம்.

 

ராமகிருஷ்ண பரமஹம்சர் பிறந்த தினம்

மகத்துவம் நிறைந்த மாசி மாதம்... கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய விழாக்கள், விசேஷங்கள்! 

அந்நியர் ஆட்சியில் அடிமைப்பட்டுக்கிடந்த இந்த பாரத தேசத்தில் நம் சனாதன தர்மத்தின் சிறப்புகளை உயர்த்திப் பிடிக்கவும் காலத்துக்கேற்ற உயரிய ஆன்மிகநெறியைப் போதிக்கவும் தோன்றியவர் ராமகிருஷ்ண பரமஹம்சர். பெண்கள் அனைவரும் தேவியின் ஸ்வரூபம் ஆவர். அவர்கள் அனைவரையும் தாயைப்போலக் கருத வேண்டும் என்று உரைத்த பரமஹம்சர் தன் சீடரான விவேகானந்தருக்கு உபதேசம் செய்தபோது,

 

"உனக்கு தெய்வ அனுக்கிரகம் கிடைக்க வேண்டுமென்றால், தேவியைப் பற்றிக்கொள். ஆக்கல், காத்தல், அழித்தல் போன்ற மூன்று காரியங்களைச் சிறப்பாகச் செயல்புரிகின்றாள். ஒவ்வொரு பெண்ணும் அவள் உருவம் கொண்டவள்" என்று வழிநடத்திய அற்புதர். அத்தகைய மகான் பரமஹம்சரின் பிறந்த தினம் இன்று. இந்த நாளில் அவரையும் அன்னை சாரதா தேவியையும் தியானித்து குருவருளையும் திருவருளையும் பெறலாம்.

 

விஜயா ஏகாதசி

மகத்துவம் நிறைந்த மாசி மாதம்... கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய விழாக்கள், விசேஷங்கள்! 

மாதம்தோறும் வளர்பிறை மற்றும் தேய்பிறை காலங்களில் வரும் ஏகாதசி திதிகள் பெருமாள் வழிபாட்டுக்கு உகந்தவை. ஒவ்வொரு ஏகாதசியும் தனித்துவமான பெயரும் சிறப்பும் உடையது. விஜயா என்றால் வெற்றி என்று பொருள். இந்த ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடித்தால் கடல் கடந்தும் சென்று வெற்றியை நிலைநாட்டுவர் என்று நம்பிக்கை. ராமபிரானே இந்த விரதத்தை அனுசரித்துக் கடல் கடந்து இலங்கை சென்று வெற்றியும் பெற்று நமக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தார். இந்த நாளில் 7 தானியங்களை ஒன்றன்மீது ஒன்றாகப் பரப்பி அதில் கலசம் வைத்துப் பெருமாளை ஆவாஹனம் செய்து வழிபட சகல காரியங்களும் ஸித்திக்கும் என்பது நம்பிக்கை.

 

பிரதோஷம்

மகத்துவம் நிறைந்த மாசி மாதம்... கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய விழாக்கள், விசேஷங்கள்! 

ஒவ்வொரு மாதமும் வரும் திரயோதசி திதியே பிரதோஷ தினமாகக் கொண்டாடப்படுகிறது. பிரதோஷம் சிவ வழிபாட்டுக்கும் நந்தி வழிபாட்டுக்கும் உரியது. நந்திதேவருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட வரங்கள் கிடைக்கும். சிவராத்திரிக்கு முன்பு வரும் பிரதோஷத்தை மகாபிரதோஷம் என்று சொல்லும் வழக்கம் உண்டு. இந்த பிரதோஷ தினத்தன்று சிவபெருமானை வணங்கி வழிபட்டு நம் துயர்கள் தீர்வோம்.பிரதோஷ தினங்களில் சனிக்கிழமை வரும் பிரதோஷம் சனி மகாபிரதோஷம் என்று போற்றப்படுகிறது. இறைவன் ஆலகால விஷத்தை உண்டு திருநடனம் புரிந்தது சனிப் பிரதோஷ வேளையில்தான். எனவேதான் இதை மகாபிரதோஷம் என்கிறோம். இந்த நாளில் சிவபெருமானை பிரதோஷ வேளையில் வழிபாடு செய்ய அனைத்து நன்மைகளும் கிடைக்கும்.

 

மகாசிவராத்திரி

மகத்துவம் நிறைந்த மாசி மாதம்... கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய விழாக்கள், விசேஷங்கள்! 

மாதம்தோறும் சிவராத்திரி வந்தபோதும் மாசி மாதம் வரும் சிவராத்திரி மிகவும் விசேஷமானது. ஆண்டில் பிற சிவராத்திரியின்போது விழித்திருந்து இறைவனை வழிபடாதவர்கள் இந்த நாளில் வழிபாடு செய்தால் ஆண்டுதோறும் சிவராத்திரி வழிபாடு செய்த பலன்கள் கிடைக்கும். சிவராத்திரி அன்று நான்கு கால பூஜைகளையும் கண்டு சிவ வழிபாடு செய்ய சகல செல்வங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

 

மாசி அமாவாசை

மகத்துவம் நிறைந்த மாசி மாதம்... கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய விழாக்கள், விசேஷங்கள்! 

 

பொதுவாகவே, அமாவாசை முன்னோர்கள் வழிபாட்டுக்கு உரியது. அதுவும் மாசி மாதம் வரும் அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தது. குறிப்பாக, அவிட்ட நட்சத்திர தினத்தில் வரும் அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்குச் செய்ய வேண்டிய நீர்க்கடன் செலுத்தி மனதார வழிபட அனைத்து நலன்களும் சூழும் என்பது நம்பிக்கை.

சஷ்டி விரதம்

மகத்துவம் நிறைந்த மாசி மாதம்... கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய விழாக்கள், விசேஷங்கள்! 

முருகப் பெருமானை வழிபட உகந்த திதி சஷ்டி. இந்த நாள் முழுவதும் விரதமிருந்து முருகப் பெருமானை வழிபடுவது சிறந்த பலன்களைத் தரும். குறிப்பாகக் குழந்தை வரம் வேண்டுபவர்கள் மேற்கொள்ள வேண்டிய விரதம் சஷ்டி விரதம். இந்த நாளில் தவறாமல் ஆலயம் சென்று முருக வழிபாடு செய்வது அவசியம்.

 

ஆமலகி ஏகாதசி

மகத்துவம் நிறைந்த மாசி மாதம்... கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய விழாக்கள், விசேஷங்கள்! 

ஆம்லா என்றால் நெல்லிக்கனி என்று பொருள். மகாலட்சுமி தேவியின் அருள் நிறைந்தவற்றுள் நெல்லிக்கனியும் ஒன்று. இந்த ஏகாதசி தினத்தில் நெல்லி மரத்தடியில் பகவானை வழிபடுவது வழக்கம். இவ்வாறு பெருமாளை வழிபாடு செய்ய, மகாலட்சுமி தேவியின் அருள்கிடைக்கும் என்பது நம்பிக்கை

 

மாசி மகம்

மகத்துவம் நிறைந்த மாசி மாதம்... கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய விழாக்கள், விசேஷங்கள்! 

 

மகாபிரளய காலத்தில் கும்பத்திலிருந்து அமிர்தம் பரவி உலகம் மீண்டும் உருக்கொண்ட தினம் மாசி மகம். வருணதேவன் தன்னைப் பீடித்த பிரம்மஹத்தி தோஷம் நீங்க சிவபெருமானை வழிபட்டு அருள்பெற்ற தினம் மாசி மகம். அம்பிகை ஒரு சங்காக அவதரித்து தாட்சாயணியாக மாறியதும் மாசி மகத்தில்தான். முருகனுக்குரிய வழிபாட்டு தினங்களில் மாசி மகம் மிகவும் முக்கியமானது. இந்த நாளில் தவறாமல் சிவாலயம் சென்று வழிபடுவதன் மூலம் இன்னல்கள் நீங்கப்பெறலாம் என்பது நம்பிக்கை.

 

மாசி பௌர்ணமி / ஹோலிப் பண்டிகை

மகத்துவம் நிறைந்த மாசி மாதம்... கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய விழாக்கள், விசேஷங்கள்! 

 

பொதுவாக பௌர்ணமி வழிபாடு அம்பிகைக்கு உரியது. மாசி மாதப் பௌர்ணமி தினம் சிவ வழிபாட்டுக்கும் முன்னோர் வழிபாட்டுக்கும் உரியது. அண்ணாமலையாரே வள்ளாலன் என்ற தன் பக்தனுக்கு திதி கொடுத்து வழிபாடு செய்தது மாசி மாதப் பௌர்ணமி தினத்தில்தான். எனவேதான் வழக்கமாக அமாவாசைகளில் செய்யும் சிரார்த்த காரியங்களை இன்று செய்வது விசேஷம் என்று சொல்லப்படுகிறது. இந்த நாளில்தான் ஹோலிப் பண்டிகை வருகிறது. கிருஷ்ணன், ராதையுடன் வண்ணப்பொடிகள் தூவி விளையாடிய தினம் இது என்பதால் இந்தப் பண்டிகை மிகவும் முக்கியமானதாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தவறாது இறைவழிபாடு செய்து நன்மைகளைப் பெறலாம்.

 

சங்கடஹர சதுர்த்தி

மகத்துவம் நிறைந்த மாசி மாதம்... கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய விழாக்கள், விசேஷங்கள்! 

வாழ்வில் துயர்கள் தீர நமக்கு வாய்த்திருக்கும் திதிகளில் சங்கடஹர சதுர்த்தியும் ஒன்று. தேய்பிறை சதுர்த்தியே சங்கடஹர சதுர்த்தி என்று போற்றப்படுகிறது. இந்த நாளில் சந்திர உதய நேரத்தில் முதலில் விநாயகரை வணங்கி, பின் சந்திர தரிசனம் செய்வதன் மூலம் நம் துயர்கள் நீங்கப்பெறலாம் என்பது ஐதிகம்.

 

ஈங்கோய்மலை நாதனே போற்றி

உயிரே போற்றி

உடலே போற்றி

உலகநாதனே போற்றி

உமையாள்பாகனே போற்றி

ஊர்த்துவத் தாண்டவனே போற்றி

ஊனைப்படைத்தோனுக்கும் அருள்பவனே போற்றி

எந்தையே போற்றி

எமபயம் தீர்ப்பவனே போற்றி

ஏகாந்தமானவனே போற்றி                                 20

 

எகாம்பரநாதனே போற்றி

ஐங்கரன் தந்தையே போற்றி

ஐந்தொழில் புரிபவனே போற்றி

ஒளியே போற்றி

ஒலியே போற்றி

ஓம் சக்தி நாதனே போற்றி

ஓங்கார நாதனே போற்றி

ஔடதமே போற்றி

ஔவைக்கருள் செய்தவளே போற்றி

கலையே போற்றி                                                30

 

கடலே போற்றி

கருவே போற்றி

கனலே போற்றி

கங்காதரனே போற்றி

கைலாசநாதனே போற்றி

காலகண்டனே போற்றி

காமாட்சிப்ரியனே போற்றி

குருவே போற்றி

குவலயமே போற்றி

குஞ்சிதபாதனே போற்றி                                      40

 

சடைமுடியோனே போற்றி

சட்டநாதனே போற்றி

சரபமாய்த்தோன்றியவனே போற்றி

சண்முகன் தந்தையே போற்றி

சச்சிதானந்தனே போற்றி

சத்குருவே போற்றி

சங்கரனே போற்றி

சிவனே போற்றி

சீலமே போற்றி

சோதியே போற்றி                                                  50

 

சுடரே போற்றி

சைலநாதனே போற்றி

சேய்தனைக்காப்பவனே போற்றி

சிதம்பரனாதனே போற்றி

சிவகாமி மணாளனே போற்றி

தருவே போற்றி

தகவே போற்றி

தண்ணொளியே போற்றி

தயாபரனே போற்றி

தாண்டவமூர்த்தியே போற்றி                               60

 

தாட்சாயணி நாதனே போற்றி

திங்களைத்தரித்தவனே போற்றி

திரிபுரம் எரித்தவனே போற்றி

நிதியே போற்றி

நிமலனே போற்றி

நீலகண்டனே போற்றி

நீலாயதாட்சி நாதனே போற்றி

நீல்விழியாள் நாதனே போற்றி

நீங்காத நினைவே போற்றி

நீர்மலிவேணியனே போற்றி                                 70

 

நீள்சடையோனே போற்றி

நெற்றிக்கண்ணனே போற்றி

நேசமாய்த்திகழ்பவனே போற்றி

பசுபதியே போற்றி

பனிமலையே போற்றி

பரம்பொருளே போற்றி

பருப்பொருளே போற்றி

பார்வதி நாதனே போற்றி

புலித்தோல் அணிந்தவனே போற்றி

பிட்டுக்கு மண் சுமந்தவனே போற்றி                  80

 

பிணியைத்தீர்ப்பவனே போற்றி

மஞ்சு நாதனே போற்றி

மணிகண்டன் தந்தையே போற்றி

மலைமகள் நாயகனே போற்றி

மன்மதனை எரித்தவனே போற்றி

மால்மருகன் தந்தையே போற்றி

மல்லிகார்ஜுனனே போற்றி

முதலே போற்றி

முடிவே போற்றி

முக்கண்ணனே போற்றி                                        90

 

முடியடி காணா முதல்வனே போற்றி

மேருவே போற்றி

மேகநாதனே போற்றி

மோனமே போற்றி

மோட்சமளிப்பவனே போற்றி

வளர்பிறை அணிந்தவனே போற்றி

வன்மீகனாதனே போற்றி

வாஞ்சினாதனே போற்றி

விடமுண்ட கண்டனே போற்றி

விஸ்வநாதனே போற்றி                                     100

 

வைத்யனாதனே போற்றி

வீரமே போற்றி

வெற்றியே போற்றி

வெண்மதி தரித்தவனே போற்றி

வேதமே போற்றி

வேள்வியே போற்றி

வேல்முருகன் தந்தையே போற்றி

வேண்டும் வரம் அருள்பவனே போற்றி           108

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.