Breaking News :

Thursday, November 21
.

பாவங்கள் போக்கும் மோகினி ஏகாதசி விரதம் ஏன்?


ஞாயிற்றுக்கிழமை 19.05.2024 அன்று வளர்பிறை ஏகாதசி விரதம்,  வைகாசி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசிக்கு 'மோகினி ஏகாதசி' என்று பெயர்.

விஷ்ணு பகவான் வைகாசி மாத வளர்பிறை ஏகாதசியின்போதுதான் மோகினி அவதாரம் எடுத்தார் என்று புராணங்கள் சொல்கின்றன. அதனால்தான் இதற்கு 'மோகினி ஏகாதசி' என்ற பெயர் வந்தது.

ஏகாதசி என்பது விஷ்ணு பக்தர்கள் ஒவ்வொ ருவருக்கும் ஏகாந்த தினமாகவே இருக்கும். பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த நாளாகக் கருதப்படும் ஏகாதசி திதி, ஒவ்வொன்றும் தனிச்சிறப்பு வாய்ந்தது. வைகாசி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசிக்கு `மோகினி ஏகாதசி' என்று பெயர்.

விஷ்ணு பகவான் வைகாசி மாத வளர்பிறை ஏகாதசியின்போதுதான் மோகினி அவதாரம் எடுத்தார் என்று புராணங்கள் சொல்கின்றன. அதனால்தான் இதற்கு `மோகினி ஏகாதசி' என்ற பெயர் வந்தது. இந்த நல்ல நாளில், விரதமிருந்து பெருமாளை வழிபட்டால் இந்தப் பிறவியின் வினைகள் மட்டும் அல்லாமல் முந்தைய பிறவியின் வினைகளும் சேர்ந்து அழியும் என்பது ஐதிகம்.

சீதைப் பிராட்டியைப் பிரிந்து வாடிய ராமச்சந் திரமூர்த்தி, தன் துன்பம் தீர்க்கும் வழியைத் தனக்கு உபதேசம் செய்யுமாறு, வசிஷ்ட முனி வரிடம் கேட்டார். பரம்பொருளான ராமரின் திருவுளம் அறிந்துகொண்டார் வசிஷ்டர்.

இந்த உலகிற்கு மோகினி ஏகாதசியின் சிறப்பை உணர்த்தவே, ராமபிரான் இவ்வாறு கேட்பதை உணர்ந்த வசிஷ்டர், குருவின் ஸ்தானத்தில் இருந்து ராமருக்கு மோகினி ஏகாதசியின் மகிமையை எடுத்துச் சொல்லி ராமபிரானை ஏகாதசி விரதம் அநுஷ்டிக்க உபதேசித்தார்.
கிருஷ்ணாவதாரத்தில், இந்த நிகழ்வினை தர்ம புத்திரருக்கு எடுத்துக்கூறும் பகவான் கிருஷ்ணர், மோகினி ஏகாதசியின் மகிமைக ளையும் எடுத்துரைத்தார்.

முன்னொரு காலத்தில், சரஸ்வதி நதிக் கரை யில் பத்ராவதி எனும் நகரத்தை `த்யுதிமன்' என்பவன் ஆண்டு வந்தான். அவனுடைய அரசில் தனபாலன் என்ற வணிகன் ஒருவன் இருந்தான்.

தனபாலன் மிக சிறந்த திருமால் பக்தன். அவனுக்கு ஐந்து மகன்கள் இருந்தனர். அவர்களுள் இளையவனான `திரிஷ்தபுத்தி' மிகவும் கீழ்த்தரமான செய்கைகளைக் கொண்டவன். திருடனாகவும், பெரியவர்களை மதிக்காமல், கடவுள்களை நிந்திப்பவனாகவும் இருந்தான்.

அவனது தீய நடவடிக்கைகளைப் பொறுக்க முடியாத தனபாலன், அவனை வீட்டை விட்டு வெளியேற்றினான். திரிஷ்தபுத்தி ஒரு திருட னாக மாறி கொள்ளையடிப்பதில் ஈடுபட்டான். காவலர்களால் பிடிபட்டு, பல முறை தண்டிக்க ப்பட்டான். கடைசியில் அவன் நாடுகடத்தப் பட்டான். காட்டில் வாழ்ந்தபோது அவன் நோய் வாய்ப்பட்டு, அன்றாட வாழ்க்கையை வாழவே சிரமப்பட்டான்.

ஒவ்வொரு நாளையும் நரகமாகக் கழித்துக் கொண்டிருந்தவன், ஒருநாள் காட்டில் கௌண் டின்ய முனிவரின் குடிலை கண்டான். முனிவர் கங்கையில் நீராடிவிட்டு குடிலுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது, அவருடைய ஈர ஆடையிலிருந்து சிதறிய நீர்த்துளிகள் சில திரிஷ்தபுத்தியின் மேல் விழுந்தன.

உடனே, அவன் மனதில் ஒரு மாற்றம் நிகழ்ந்தது. அவன், தான் செய்த தவறுகள் அனைத்துக்கும் பிராயச்சித்தம் தேட நினைத்து முனிவர் காலடியில் விழுந்தான்.
திரிஷ்தபுத்தியின் கதையைக் கேட்ட முனிவர், "பாவங்கள் செய்யப் பல வழிகள் இருப்பது போல, அவற்றிலிருந்து விடுதலை பெறவும் பல வழிகள் இருக்கின்றன. அவற்றுள் தலை சிறந்தது மோகினி ஏகாதசி விரதம். அன்றைய நாளில் விரதமிருந்து மனம், மொழி, மெய் ஆகியவற்றால் பெருமாளை வழிபாடு செய்தால் உனக்கு, உன் பாவங்களில் இருந்து விடுதலை கிடைக்கும்” என்றார்.

திரிஷ்தபுத்தியும் தன் உயிர் பிரியும் நாள் வரை, ஒவ்வொரு வருடமும் மோகினி ஏகாதசி நாளில் முனிவர் சொன்ன வண்ணமே விரதம் இருந்தான். இறுதியில் ஆயுள் முடியும்போது பாவங்கள் நீங்கி கருட வாகனமேறி, வைகு ண்ட பதம் அடைந்தான். மோகினி ஏகாதசியி ன் பெருமையை உணர்த்தும் இந்தக் கதை  ஏகாதசி மகாத்மியத்தில் உள்ளது.

பொதுவாகவே, ஏகாதசி விரதம் பல புண்ணிய பலன்களை அருள வல்லது. பாவங்கள் போக்கி, நல்லருள் தருவது. அதிலும் மோகினி ஏகாதசி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப் படுகிறது. பகவான் விஷ்ணு மோகினி அவதா ரம் எடுத்து, தேவர்களுக்கு அமிர்தம் வழங்கி யது போல், இந்த விரதத்தை மேற்கொள்ளும் அனைவருக்கும் இறைவன் நன்மையை வாரி வழங்குவார் என்பது ஐதிகம்.

கருத்துவேறுபாடு  காரணமாகப் பிரிந்து வாழும் கணவன், மனைவி இந்த விரதத்தை  அனுஷ்டித்தால், கருத்துவேறுபாடு நீங்கி, சேர்ந்து வாழ்வார்கள் என்று ஞானநூல்கள் கூறுகின்றன.

இந்த நாளில் விரதமிருந்து, துளசித் தீர்த்தம் மட்டுமே அருந்தி எட்டெழுத்து மந்திரத்தை உபதேசித்து, நாளை துவாதசி திதியன்று பாரணை செய்து விரதம் முடிக்க வேண்டும். இந்த விரதத்தை வாழ்நாள் முழுவதும் செய்துவர, பிறவிப் பிணி நீங்கி இறைவனின் திருவடிகளைச் சேரலாம்.

நன்றி: விஜயராகவன்

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.