முனீஸ்வரர் வழிபாடு என்பது காலம் காலமாக கிராம மக்கள் மட்டுமல்லாது நகரத்து மக்களும் பயபக்தியுடன் வணங்கக்கூடிய தெய்வ வழிபாடாகும்.
சுருட்டு முனீஸ்வரருக்கு பிடித்த படையல். முன்பு சரக்கும் படையலாக படைக்கப்பட்டதுண்டு. இப்போது சுருட்டே அதிகளவில் படைக்கப்படுகிறது.
ஈஸ்வரப்பட்டம் என்பது சனீஸ்வரர் மற்றும் முனீஸ்வரர் இருவருக்கும் மட்டுமே உரியது.
பிரபஞ்சத்திலேயே சிவபெருமானுடைய மற்றொரு நாமமான ஈஸ்வர பட்டத்தை பெற்றிருப்பது இவர்கள் இருவரும் மட்டும்தான்.
சிவபெருமானின் அந்தரங்க காவலர்களில் ஒருவரே முனீஸ்வரன்.
முனீஸ்வரர் நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு மேல் 5 மணிக்குள் மட்டுமே நகர்வலம் வருவதாக கிராமங்களில் நம்பிக்கை நிலவுகிறது.
பெரும்பாலும் முனீஸ்வரர் கோவிலில் மேல்விதானம் இருக்காது. தமிழ்நாட்டில் சில கோவில்களில் வித்தியாசமாக காட்சி தருகிறார்.
பூஜை வழிபாட்டு பொருட்கள்:
மஞ்சள், குங்குமம், சந்தனம், திருநீர்
புஷ்பம்-கர்பூரம்-ஊதுவத்தி-சாம்ராணி
பசு-கோமியம், பால், தயிர்,
நெய், தேன், பன்னீர்,
கதம்ப பொடி-வஸ்த்ரம்-நூல்-உருண்டை
பொரி-கடலை-அவல்-நாட்டுசர்க்கரை
சர்க்கரை- கற்கண்டு-வெல்லம்
பழ வகைகள், பண், பொறை, பிஸ்கட், சுருட்டு-5.
வெண்-பூசனிக்காய்-1, எலுமிச்சைபழம்-5, தேங்காய்-3
முனீஸ்வரர் படையல்
சர்கரை பொங்கல் (முந்திரி, ஏலக்காய் சேர்த்து), வெண் பொங்கல்-தயிர்,
பழ வகைகள், பண், பொறை, பிஸ்கட், சுருட்டு.
பொரி-கடலை-அவல்-நாட்டு சர்க்கரை
வெண்-பூசனிக்காய்-1, எலுமிச்சை பழம்-5, தேங்காய்-3..
பேன்றைவையாகும்.