Breaking News :

Thursday, November 21
.

இன்று தைப்பூச திருவிழா...! பல்வேறு முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு


தமிழ்நாட்டில் கொரோனா தொற்றுக்காரணமாக, வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. 

மேலும், கடந்த 14-ந் தேதி பொங்கல் பண்டிகை முதல் தைப்பூசமான இன்று (செவ்வாய்க்கிழமை) வரை பக்தர்கள் கூட்டம் கோவில்களில் அதிகமாக இருக்கும் என்பதால் இன்று வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி கிடையாது.

இருப்பினும், தைப்பூசமான இன்று முருகன் கோயில்களில் ஏராளமான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.

இந்நிலையில், திருச்செந்தூர் கோவிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பின்னர் விசுவரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மற்றகால பூஜைகள் வழக்கம்போல் நடைபெற்று வருகிறது.

தைப்பூச நாளில் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் கோவிலுக்கு பாத யாத்திரையாக காவடி எடுத்தும், வேல்குத்தியும் வந்து சாமி தரிசனம் செய்து தங்களது நேர்த்தி கடனை செலுத்துவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக இன்று பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதேபோல், பழனி முருகன் கோவிலுக்கும் பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்தனர். 

கோவில் வளாகத்திற்குள் பக்தர்கள் யாரும் செல்ல முடியாத அளவுக்கு ஆங்காங்கே தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு போலீசார் மற்றும் கோவில் தனியார் பாதுகாவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 

Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.