வாரத்தின் ஏழு நாட்களில் மூன்றாவது நாளாக இடம் பிடிப்பது செவ்வாய்க் கிழமை.
பொருளாதார நிறைவை வழங்குவது அங்காரகன்தான்.
செவ்வாய்க்கிழமை மங்களகரமானது, சிறப்புக்குரியது.
செவ்வாய்க்கு மங்களன், பூமிகாரகன் என்று பெயர் உண்டு.
பெயரிலேயே மங்களம் இருப்பதால், அந்நாளில் தொடங்கும் செயல் சுபமாக நிறைவேறும்.
ஒருவர் வீடு கட்ட வேண்டுமென்றால் செவ்வாய் கிரகத்தின் அனுகூலம் இருக்க வேண்டும்.
அந்த அங்காரகனுக்குரிய தெய்வமாக விளங்குவது முருகப்பெருமான்
செவ்வாய் கிழமை அன்று செவ்வாய் ஓரையில் முருகனை வணங்கி துவங்கும் செயல்கள் யாவும் வெற்றியடையும்
செவ்வாய் கிழமை அன்று செவ்வாய் ஓரையில் முருகனை மனம் உருகி வழிபடுவதும் சிறப்பு தரும்.
செண்பகப் பூ உள்ளுணர்வின் தெய்வத்தன்மையை வெளிக் கொணரும் ஆற்றலைப் பெற்றுள்ள மலராகும்.
எல்லோருக்கும் வெற்றியை தேடித்தரும் பூ செண்பகப் பூ.
இந்த செண்பகப்பூ முருகனுக்கு உகந்த மலராகும் ஆறு(6) செண்பகப் பூவின் மலர்களை எடுத்து ஆறுமுகனுக்குரிய செவ்வாய் கிழமை அன்று செவ்வாய் ஓரை நேரத்தில் வைத்து வழிபடும் போது ஆறுமுகனின் 12 பார்வையும் உங்கள் மீது அருள் மழையாகப் பொழியும்!
6 ×12=72
இந்த எண் 72 கேது பலமும் சந்திர பலமும் இணைந்து செவ்வாயின் ஆதிக்கத்தை உணர்த்துகிறது .
இது மிக மிக அதிர்ஷ்டமான எண் .
ஈசுவர அம்சம் கொண்டது .
ஞானகாரகன் கேதுவும் மனோகாரகன் சந்திரனும் இணைந்த இந்த எண்ணை உடையவர்கள்
(பெற்றவர்கள்)
ஞானிகளாக விளங்குகிறார்கள் .
சம்பாதிக்கிற சொத்துக்கள் அடுத்தடுத்து வரும் சந்ததிகள் அனுபவிக்கிற அளவுக்கு வந்துவிடும் .
அபாரமான செல்வநிலையும் மனோதைரியமும் இந்த எண்ணிற்கு உண்டு .
நிலையான ஐசுவரியமும் நிறைந்த சொத்தும் உண்டு .
செல்வம் நீர்வீழ்ச்சிபோல் வந்துகொண்டே இருக்கும் . வற்றாத நீர்வீழ்ச்சியாக இருக்கும்,
பலவிதமான சுகங்களையும் - அரசாங்க ஆதரவையும் இந்த எண் பெற்று தரும்
குபேர தன்மை பெற்ற இந்த எண் கொடுக்கல் வாங்கல் தொழில்களில் முன்னேற்றம் தரும் .
எப்பொழுதும் பணம் புழங்கிக்கொண்டே இருக்கும் . வியாபாரம் வெற்றி தரும் .
வீடு நிலம் வாகன வகை தொழில்களும் உண்டு.
விரோதிகள் சரணடைதல் - தீய சக்திகளை அழித்தல் தியானம் யோகம் இசை வெளிநாட்டு பொருள்கள் மூலம் யோகம் உண்டு.
செவ்வாய் ஹோரை:
ரத்தம் - மருத்துவம் - பூமி - அதிகாரம் போன்ற விஷயங்களுக்கு செவ்வாய் அதிபதியாக திகழ்கிறார்.
இந்த செவ்வாய்க்கு
அதிதேவதையாக முருகன் திகழ்கிறார்
செவ்வாய் ஹோரையில்
நிலம் வாங்குவது, விற்பது, அக்ரிமென்ட் போடுவது, சகோதர/பங்காளி பிரச்சினைகள், சொத்து பிரித்தல், உயில் எழுதுவது, ரத்த தானம், உறுப்பு தானம், மருத்துவ உதவிகள் செய்வது இவற்றையெல்லாம் மேற்கொள்ளலாம்.
இந்த செவ்வாய் ஹோரையில் ஆயுதப் பிரயோகத்தை துவங்கினால் சக்தி வாய்ந்ததாக இருக்கும்.
செவ்வாய் அழிவுக்கு உரிய கிரகம். அதிகாரத்தை பிரயோகம் செய்து ஒன்றை கட்டுக்குள் கொண்டு வரக் கூடியது செவ்வாய்.
பொதுவாக செவ்வாய் ஓரை எந்தவித நல்ல காரியங்களும் செய்ய உகந்த நேரமல்ல.
இருப்பினும் தெய்வீகத் தொடர்பான விஷயங்களையோ,
சண்டை சச்சரவுக்கான விஷயங்களையோ பற்றி இந்த செவ்வாய் ஓரையி்ல் பேசலாம்.
இந்த செவ்வாய் ஓரை நேரத்தில் பொருள்கள் காணாமல் போனால் உடனே முயன்றால் தெற்கு திசையில் கிடைத்துவிடும்.தாமதித்தால் கிடைக்காது.
எல்லோருக்கும் வெற்றியை தேடித்தரும் பூ செண்பகப் பூ.
சிவபெருமானுக்கு எந்த தினத்தில் வேண்டும் என்றாலும் இந்தப் பூவை வைத்து பூஜை செய்யலாம்.
அது நமக்கு நல்ல பலனை தேடித்தரும்.
சிவ பெருமானுக்கு மிகவும் உகந்த இந்த செண்பகப்பூவால் அர்ச்சனை செய்து மனதார உங்களது வேண்டுதல்களை வைத்துப் பாருங்கள்.
11 வாரங்களில் அதற்கான பலனை நீங்கள் நிச்சயம் அடைவீர்கள்.
இதேபோன்று குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த செண்பக பூவினை முருகப்பெருமானுக்கு 11 வாரங்கள் தொடர்ந்து அர்ச்சனை செய்து, குழந்தை வரம் வேண்டி பிரார்த்தனை செய்து கொண்டால், நிச்சயம் குழந்தை பாக்கியம் கிட்டும்
குறிப்பாக குழந்தை வரம் வேண்டி பிரார்த்தனை செய்வதற்கு வெள்ளிக்கிழமைகளில் முருகனுக்கு இந்தப்பூவை அர்ச்சனை செய்வது மிகவும் சிறப்பு.
குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில்
வரும் செவ்வாய் ஓரையில் முருகனுக்கு இந்தப்பூவை கொண்டு அர்ச்சனை செய்வது மிகவும் சிறப்பு.
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மட்டும்தான் இந்த செண்பகப் பூவை, முருகப்பெருமானுக்கு சாத்தி வழிபட வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை.
உங்கள் மனதில் இருக்கும் எந்த வேண்டுதல்களையும் நிறைவேற்ற செண்பக பூவை வைத்து முருகனை வேண்டினாலும் அதற்கான பலன் கட்டாயம் கிட்டும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
எப்படிப்பட்ட தீர்க்கமுடியாத துன்பங்களையும் தீர்த்து வைக்கும் இந்த செண்பகப்பூவை வெள்ளிக்கிழமை அன்று செவ்வாய் ஓரையில் முருகப்பெருமானுக்கு சூட்டி வேண்டினால் விரைவாகவே உங்களது கஷ்டம் தீர்ந்து விடும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.