Breaking News :

Friday, April 04
.

கஷ்டங்கள் விலக முருகன் தேங்காய் பரிகாரம்!


தேங்காய் எந்த அளவுக்கு கடினமாக இருக்கிறது, அதைவிட கடினமான அளவுக்கு, பலமான பிரச்சனைகள் சில மனிதர்களுக்கு இருக்கும். உங்களுடைய வாழ்விலும், கஷ்டமான கடினமான கரடு முரடான பாதைகள் இருந்தால், அந்த பிரச்சனைகளிலிருந்து விடுபட முருகனை நினைத்து இந்த தேங்காய் பரிகாரத்தை செய்து பாருங்கள்.

குடும்பத்தில் பெரிய பிரச்சனை பூகம்பம் போல வெடிக்கிறது. சமாளிப்பதற்கு யார் துணையும் இல்லை என்றால், முருகனை துணையாக கூப்பிடுங்கள்.  இந்த பரிகாரத்தை செய்தால், நிச்சயம் உங்கள் கடினமான பிரச்சனைகளை கூட, முருகப்பெருமான் சுலபமாக சரி செய்து வைப்பான்.   இந்த பிரச்சனைக்குத்தான், இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும் என்ற எந்த கட்டாயமும் கிடையாது.

வெளியில் சொன்னாலும், இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காது. யாரிடம் போய் நான் என்னுடைய கஷ்டத்தை சொல்லுவேன் என்றால் முருகனிடம் இந்த விளக்கை ஏற்றி வைத்துவிட்டு, உங்கள் கஷ்டத்தை சொல்லுங்கள். முருகன் தேங்காய் பரிகாரம் மூன்று தேங்காய்களை இரண்டாக உடைத்தால், 6 மூடி தேங்காய் கிடைக்கும்.

அதில் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி முருகப் பெருமான் சன்னிதானத்தில் விளக்கு ஏற்ற வேண்டும்.  ஒரு வாழை இலையில் பச்சரிசி பரப்பி, அதற்கு மேலே இந்த தேங்காய் மூடி களை அடுக்கி, எண்ணெய் ஊற்றி சாதாரண பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றி அந்த கோவிலில் சிறிது நேரம் அமர்ந்து உங்களுடைய தீர்க்க முடியாத பிரச்சனையை முருகப்பெருமானிடம் சொன்னால் போதும்.

உண்மையான பக்தியோடு முழு நம்பிக்கையோடு இந்த விளக்கை ஏற்றி வைத்துவிட்டு வேண்டுதலை வைத்துவிட்டு வீடு திரும்புங்கள்.
அந்த தேங்காயில் இருக்கும் எண்ணெய் முழுவதும் தீபச்சுடராக எரிந்து முடிவதற்குள்ளாகவே உங்களுடைய கஷ்டங்கள் தீர்ந்து போனாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அவ்வளவு சக்தி வாய்ந்த தீபம்.

தேங்காய் தீபம் என்றால் அது வாராஹிக்கு தானே ஏற்றுவார்கள், இல்லை பிள்ளையாருக்கு ஏற்றுவார்கள்.
முருகனுக்கு இதை ஏற்றலாமா என்ற சந்தேகம் வருகிறதா. முருகனுக்கும் தேங்காய் தீபம் ஏற்றலாம். கடினமான தேங்காய் இரண்டாக எப்படி உடைக்கப்படுகிறது, அதேபோல உங்கள் கடினமான கஷ்டங்களும் தீர்க்கப்படும்.

வாரம் தோறும் வரும் செவ்வாய்க்கிழமைகளில் 6 செவ்வாய்க்கிழமை இந்த பரிகாரத்தை செய்தால் நல்ல பலன் இருக்கும்.
எனக்கு செவ்வாய்க்கிழமை வரும் வரை காத்திருக்க முடியாது. 6 செவ்வாய் கிழமையும் காத்திருக்க முடியாது என்றால், தொடர்ந்து மூன்று நாட்கள் முருகப்பெருமானை நினைத்து முருகன் கோவிலுக்கு சென்று இந்த தீபத்தை ஏற்றுங்கள்.

காலநேரம் நாள் கிழமைக்காக நம்முடைய கஷ்டங்கள் காத்துக் கொண்டிருக்காது. எந்த நேரத்தில் கூப்பிட்டாலும் முருகன் வருவான். எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் முருகனை வழிபாடு செய்யலாம். கஷ்டம் வரும்போது முருகன் காலை பிடிக்க காலம் நேரம் கிழமை பார்த்துக் கொண்டிருக்க முடியுமா என்ன.  இந்த எளிமையான ஆன்மீகம் சொல்லும் பரிகாரம் உங்களுக்கு நம்பிக்கையை அளித்தால், தேவைப்படுபவர்கள் இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறவும்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.