நமசிவாய வாழ்க,
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என்சிந்தனையுள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
ஆனந்தம்மே ஆறா அருளியும்
மாதிற் கூறுடை மாப்பெருங் கருணையன்,
நமசிவாய வாழ்க, சிவ சிவாய போற்றியே
நமசிவாய போற்றியே,
சிவனிருக்க பயமேன்.
திருச்சிற்றம்பலம்...
தீயாகி நீராகித் திண்மையாகித்
திசையாகி அத்திசைக்கோர் தெய்வமாகித்
தாயாகித் தந்தையாய்ச் சார்வுமாகித்
தாரகையும் ஞாயிறும் தண்மதியுமாகிக்
காயாகிப் பழமாகிப் பழத்தில் நின்ற இரதங்கள்
நுகர்வானும் தானேயாகி நீயாகி
நானாகி நேர்மையாகி நெடுஞ்சுடராய் நிமிர்ந்தடிகள் நின்றவாறே...
நமசிவாய வாழ்க,
ஒன்று அவன் தானே,இரண்டு அவன் இன் அருள்,
நின்றனன் மூன்றின் உள்,நான்கு உனர்ந்தான்,
ஐந்து வென்றனன்,ஆறு விரிந்தனன்,
ஏழ் உம்பர்ச் சென்றனன்,தான் இருந்தான் உணர்ந்து எட்டே திருச்சிற்றம்பலம்.
" திருவாய் பொலியச் சிவாய நம வென்று நீறணிந்தேன்
தருவாய் சிவகதிநீ பாதிரிப்புலியூரரனே "
- திருநாவுக்கரசர் பெருமான்.
நமசிவாய வாழ்க சிவமே ஜெயம் சிவமே தவம்.