Breaking News :

Thursday, November 21
.

பகளாமுகி தேவி எப்படி தோன்றினாள்?


பகளாமுகி தேவி கோயில், திருநெல்வேலி, தெற்கு பாப்பாங்குளம்

உலகம் படைக்கப்பட்டப் பின்னர் சத்யுகத்தில் ஒரு முறை பெரும் கடல் சீற்றத்துடன் கூடிய பிரளயம் ஏற்பட்டு உலகமே அழிந்து விடும் நிலைக்குச் சென்று விட்டது.

அதன் கோர தாண்டவத்தைத் தன்னால் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது என மனம் பதறிய காக்கும் கடவுளாக படைக்கப்பட்ட விஷ்ணு பகவான், சௌராஷ்டிராவில் இருந்த ஒரு தனிமையான இடத்தில் சென்று இந்த பிரபஞ்சம் அழிவில் இருந்து காக்கப்பட வேண்டும் என வேண்டிக் கொண்டு தவத்தில் அமர்ந்து கொண்டார்.

கடுமையான தவத்தின் விளைவாக அவருடைய நாபியில் இருந்து வெளிவந்த ஜோதியும் ஆகாயத்தில் இருந்த நட்சத்திரங்களின் ஒளியும் ஒன்று சேர அந்த ஒளி வெள்ளத்தில் மஞ்சள் நிற ஆடை உடுத்திய ஒரு பெண் உருவில் தோன்றினாள் பகளாமுகி தேவி.
இப்படியாகத் தோன்றிய பகுளாமுகி தேவி உடனடியாக விஷ்ணுவிடம் சென்று இந்த உலகை அழிவில் இருந்து காப்பற்ற பார்வதி தேவி தன்னை தோற்றுவித்து அனுப்பி இருக்கின்றாள் என்றும் ஆகவே கவலைப்பட வேண்டாம் என்று கூறி விட்டு இயற்கையின் சீற்றங்களை நொடிப் பொழுதில் அடக்கி, அவற்றை தன்னுள் கிரகித்துக் கொண்டு விட்டாள்.

தவத்தை முடித்துக் கொண்ட விஷ்ணு பகவானுக்கு தெய்வீகத்தையும் ஆன்மீக சிந்தனைகளையும் அழித்துக் கொண்டு உலகில் கேடு விளைவித்துக் கொண்டு இருந்த தீய சக்திகளை அடக்க பார்வதி தேவியானவள் பகளாமுகி தேவியை தன்னுள் இருந்து படைத்து அனுப்பி இருக்கின்றாள் என்ற உண்மை புரிந்தது. இப்படியான நிலையில் அவதரித்தவளே பகளாமுகி தேவி ஆவாள்.

இந்த ஆலயம் நல்கேடாவில் எழுந்த புராணக் கதையும் கிராமத்தினரால் கூறப்படுகின்றது. புராணச் செய்திகளின் அடிப்படையில் மகாபாரதப் காலத்தில் பாண்டவர்கள் தாம் இழந்த நாட்டை பிடிக்க நடைபெறும் யுத்தத்தில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பல்வேறு இடங்களிலும் இருந்த சக்தி வாய்ந்த தாந்த்ரீக மந்திர ஆலயங்களில் வழிபாடு செய்து வந்தார்கள்.
அதனால் கிருஷ்ண பகவானின் ஆலோசனைப்படி தர்மர் தமது சகோதரர்களுடன் பகுளாமுகி தேவியை இந்த இடத்தில் வந்து வழிபட்டார் எனக் கூறுகின்றனர். பாண்டவர்கள் இங்கு வந்தபோது எந்த ஒரு ஆலயமும் காணப்படவில்லை. ஆனால் ஸ்வயம்புவாக தோன்றி இருந்த பகளாமுகி தேவியின் சிலை தற்போது காணப்படும் அதே சிலையாக ஒரு மரத்தடியில் இருந்தது.
உலகில் தீய சக்திகளை அடக்கி தர்மத்தை நிலைநாட்ட வந்ததாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டு தனக்கு சௌராஷ்ரத்தில் காட்சி கொடுத்த பகளாமுகி தேவி அங்கு வந்து பூமிக்குள் தங்கி இருக்கின்றாள் என்பது விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒரு அவதாரமான கிருஷ்ணருக்கும் தெரியும் என்பதினால் கிருஷ்ணர் உருவில் இருந்த மகாவிஷ்ணு பாண்டவ சகோதரர்களை இந்த இடத்துக்கு வந்து யுத்தத்தில் வெற்றி கிடைக்க பகளாமுகி தேவியை வழிபடுமாறு கூறி இருந்தார். அதனால்தான் மகாபாரத யுத்தத்தின் முன்பாக பாண்டவர்கள் இங்கு வந்து பகளாமுகி தேவியை வேண்டி வணங்கி, அவளிடம் இருந்து அதீத சக்திகளைப் பெற்றுக் கொண்டார்கள்.

யுத்தத்தில் வெற்றி பெறுவதற்கு அருள் தந்து சக்தி கொடுத்த இந்த தேவிக்கு ஒரு ஆலயம் அமைக்குமாறு கிருஷ்ண பகவான் கூறியதினால் பாண்டவ சகோதரர்கள் இந்த பகளாமுகி தேவியை இங்கு பிரதிஷ்டை செய்து சிறிய வழிபாட்டுத் தலம் அமைத்ததான கதை உள்ளது.

இப்படியாக பாண்டவ சகோதரர்கள் அமைத்த தற்காலிகமான சிறிய வழிபாட்டுத் தலம் கால ஓ ட்டத்தில் பல்வேறு நிலைகளில் உருமாறி இன்றைய காட்ச்சியில் உள்ள ஆலயமாக எழுந்தாலும், அதில் உள்ள பகளாமுகி தேவியின் சிலை எந்த மாற்றத்தையோ அல்லது சேதத்தையோ அடையவில்லை என்பது இந்த ஆலயத்தின் மகிமையாகும்.

பகளாமுகி தேவியின் தோற்ற அமைப்பையும், உருவத்தையும் குறித்த செய்தி சில புராணங்களில் காண முடிகின்றது. ஆலயத்தில் காணப்படும் பகளாமுகி தேவிக்கு மூன்று கண்கள் உள்ளன. மந்திர தந்திர சக்திகளின் தெய்வமான அவள் மேனி பொன்னிரமானது. அவளுக்கு பிடித்த வண்ணம் மஞ்சள் நிறம்.
கடல் நடுவில் மஞ்சள் நிற சம்பகா பூக்கள் நுரைப் போல மிதந்து கொண்டு இருக்க அதன் நடுவே தனது தலையில் உள்ள கிரீடத்தில் சந்திரனை பிறை வடிவில் வைத்துக் கொண்டு தங்க ஆசனத்தில் அமர்ந்து இருக்கின்றாள் என்றும், பகளாமுகி தேவி ஒரு அரக்கனின் நாக்கை பிடித்து இழுத்துக் கொண்டு இருந்தவாறு காட்சி தருகிறாள் எனவும் அவளுடைய ரூபத்தை வர்ணிக்கின்றனர்.
இங்குள்ள ஆலயத்தில் உள்ள பகளாமுகி தேவி மூன்று கண்களை மட்டும் அல்ல மூன்று முகங்களையும் கொண்ட பகுளாமுகி தேவியாக காட்சி தருகின்றாள். பகளாமுகி தேவி மூன்று தேவிகள் உள்ளடங்கிய தெய்வம், அதாவது பகளாமுகி தேவி, தேவி மகாலஷ்மி மற்றும் தேவி சாமுண்டா என்றும் அப்படிப்பட்ட தேவியை தன்னுள் இருந்து பார்வதி தேவியே படைத்து அனுப்பி உள்ளதாகவும் கூறுகிறார்கள்.

வேறு சிலரோ உலகில் சத்யுகத்தில் விளங்கிய தீமைகளை அழிக்க பகளாமுகி தேவிக்கு பரமசிவனின் மூன்று கண்களின் அபார சக்தியை தந்து அனுப்பியதாகவும் அதை வெளிப்படுத்தும் விதமாகவ பகளாமுகி தேவிே மூன்று கண்கள் மற்றும் மூன்று முகங்களைக் கொண்டு அங்கு காட்சி தருகின்றாள்.    

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.