பங்குனி உத்திர நல்ல நாளில் கூடுதலாக தவறாது வர மளிக்கும் ஆற்றல் சிவசக்தி க்கு உண்டு என்று பாரணங்கள் சொல்கி ன்றன. பங்குனி உத்திரம் பற்றிய சிறப்பா ன 35 தகவல்களை விரிவாக பார்க்கலாம்.
ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு நட்ச த்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத் து விழாக்கள் நடத்துவது வழக்கம். அதில் பங்குனி உத்திர நட்சத்திரத்துக்கு அதிக மகத்துவம் உண்டு. இந்தத் திருநாளில் தான் அதிகமான தெய்வத்திருமணங்கள் நடைபெற்றுள்ளதாகப் புராணங்கள் கூறுகின்றன.
12-வது மாதமான பங்குனியும், 12-வது நட்சத்திரமான உத்திரமும் இணையும் புனித நாள் பங்குனி உத்திரம்
இந்த விரதத்தை கல்யாண விரதம், திருமண விரதம் என்றும் கூறுவார்கள்.
சிவபெருமான் அன்னை பார்வதியோடு மணக்கோலத்தில் சுந்தரமூர்த்தி நாயனா ருக்கு மதுரையில் காட்சி தந்தருளிய திரு நாள் இதுதான். அன்னை மீனாட்சியைத் திருமணம் செய்து மீனாட்சி சுந்தரேஸ்வர ராகக் காட்சி தந்ததும் இந்நாளில்தான். ஆண்டு தோறும் மதுரையில் இத்திருமண விழாவை பங்குனி உத்திரத்தன்று சிறப்பாக நடத்துகின்றனர்.
சிவனின் தவத்தைக் கலைத்தால் இறை வனின் நெற்றிக் கண்ணால் மன்மதன் எரிக்கப்பட்டான். ரதியின் வேண்டுதலால் மீண்டும் மன்மதன் உயிர் பெற்ற நாளும் இதுதான்.
முருகன் தெய்வானையை இந்த நாளில் தான் திருமணம் புரிந்து கொண்டார். அத்துடன் வள்ளியின் அவதார தினமும் இதுதான்
பர்வத ராஜன் தவத்தால் பத்மத்தில் அவதரித்த பார்வதியை சிவபெருமான் கரம் பிடித்த நாளும் இதுவே.
ஸ்ரீரங்க மன்னார்- ஆண்டாள் திருக்கல் யாண வைபவம் நடந்த நாளும் இதுதான். மகாலட்சுமி பங்குனி உத்திர விரதத்தை அனுசரித்துதான் ஸ்ரீமகா விஷ்ணுவின் மார்பில் உறையும் பாக்கியம் பெற்றாள்.
மகாலட்சுமியின் அவதார நாளும் பங்குனி உத்திர நாள்தான்.
இந்நாளில் வைணவ ஆலயங்களில் மணக்கோலத்தில் தாயாரும் திருமாலும் காட்சி தருவார்கள். அன்று காஞ்சி வரதரா ஜர் ஆலயத்தில் ஸ்ரீபெருந்தேவித் தாயார் சந்நிதியில் ஸ்ரீதேவி பூதேவி, மலையாள நாச்சியார் ஆண்டாள் மற்றும் பெருந்தேவி த் தாயார் சகிதமாக ஸ்ரீவரதராஜர் காட்சி தருவார்.
பங்குனி உத்திர நல்ல நாளில் கூடுத லாக தவறாது வர மளிக்கும் ஆற்றல் சிவசக்திக்கு உண்டு என்று பாரணங்கள் சொல்கின்றன.
சுந்தரமூர்த்தி நாயனாருக்கு ஸ்ரீபரமே ஸ்வரர் மணக்கோலத்தில் திருக்காட்சி தந்த தினமும் பங்குனி உத்திரத்தன்று தான்.
கொள்ளிடத்தில் அமைந்துள்ள ஸ்ரீ புலீஸ்வரி அம்மன் ஆலயத்திலுள்ள தல விருட்ச மலர்கள் பங்குனி உத்திரத்தன்று தான் பூக்கும்.
திருவையாறு அருகிலுள்ள திங்களூர் சிவாலயத்தில், பங்குனி உத்திரத் திருநா ளில் மட்டும், லிங்கத் திருமேனியை சந்திரன் தனது கிரணங்களால் தழுவி வழிபடுவதைக் காணலாம்.
பௌர்ணமியுடன் சேர்ந்த பங்குனி உத்திரம். அற்புதமான இந்தநாளில்,
பங்குனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திர நாளின் ,பங்குனி மாத சிறப்புக்கள் !
திருப்பரங்குன்றம்
அருள்மிகு #பரங்கிரிநாதர் - #திருக்கல்யாணம்
அருள்மிகு #சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்- பங்குனி உத்திர பெருவிழா 2024
Celestial wedding
ஸ்ரீராமன் - சீதாதேவி, லட்சுமணன் - ஊர்மினை, பரதன் - மாண்டலி, சத்ருகனன் - சுருதகீர்த்தி கல்யாணங்கள் நடந்த தினமே பங்குனி உத்திரம்.
ஸ்ரீ பார்வதி சிவபெருமான் ஸ்ரீரங்க மன்னார் ஆண்டாள் கல்யாணம் பங்குனி உத்திர நாளின் பல சிறப்புக்களை கொண்ட தெய்வங்களின் பிறந்த நாள், திருமணநாள் என பங்குனி உத்திரம் நாள் மகிழ்ச்சியை ஊட்டக்கூடியது. இந்த நாளில் தான் சிவ விஷ்ணுவின் புதல்வராகக் தர்மசாஸ்தா அவதரித்தார். தென் மாவட்டங்களில் மக்கள் தங்கள் குடும்பத்துடன் காடுகளில் உள்ள சாஸ்தா கோவில்களுக்குச் செல்வர். சாஸ்தாவின் அவதார தினமான பங்குனி உத்திரநாளில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் விசேஷ பூஜை உண்டு.
இந்நாளில் தான் லட்சுமிதாயார் பார்க்கவ மகரிஷியின் மகளாக பூமியில் பார்கவி என்னும் பெயரில் அவரித்தரித்தாள். கைலாயத்தில் சிவபார்வதி திருமணம் பங்குனி உத்திர நாளில் தான் நடந்தது. இந்த திருமணக் கோவலத்தைத் தான் சித்திரை விசுவன்று பொதிகையில் அகத்தியருக்கு தரிசனமாக்கினர்.
ராமன் சீதாதேவியையும், லட்சுமணன் ஊர்மிளாவையும், பரதன் மாண்டவியையும், சத்ருக்கனன் சுருதகீர்த்தியையும் கைப்பிடித்த நாளும் இது தான். முருகப்பெருமான் தெய்வானையை மணம் செய்த நாளும் இதுவே.
பங்குனி உத்திரம்... தெய்வத் திருமணங்கள்!
பங்குனி மாதம் என்பது வழிபாட்டுக்கு உரிய மாதம். பங்குனி மாதம் என்பது வணங்குவதற்கும் பூஜைக்கும் உரிய மாதம். பங்குனி மாதம் என்பது வைபவங்களுக்கான மாதம். அற்புதமான பங்குனி மாதத்தை தெய்வ மாதம் என்றே போற்றுகின்றனர்.
ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு நட்சத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து விழாக்கள் நடத்துவதும் விரதம் இருப்பதும் வழக்கம். ஆனால், பங்குனி உத்திர நட்சத்திரத்துக்கு மற்ற நட்சத்திரங்களைவிட அதிக மகத்துவம் உண்டு. தெய்வத் திருமணங்கள் அதிகம் நடைபெற்ற மாதம் பங்குனி என்று புராணங்கள் சொல்கின்றன.
மாதங்களில் 12வது மாதம் பங்குனி. நட்சத்திரங்களில் 12வது நட்சத்திரம் உத்திரம். 12-வது மாதமான பங்குனியும் 12-வது நட்சத்திரமான உத்திரமும் இணையும் புனித நாள் பங்குனி உத்திரம் என்று கொண்டாடப்படுகிறது. எனவே பங்குனி மாத உத்திரத்தின் சிறப்புகள் அதிகம்.
ஸ்ரீராமபிரான்- சீதாதேவி, பரதன்- மாண்டவி, லட்சுமணன்- ஊர்மிளை, சத்ருக்னன்- ச்ருத கீர்த்தி ஆகியோருக்கு திருமணம் நடந்த நன்னாள் பங்குனி உத்திரம் என புராணங்கள் விவரிக்கின்றன.
முருகப் பெருமான் தெய்வானையை திருமணம் செய்து கொண்டதும் பங்குனி உத்திர நன்னாளில்தான். அதேபோல், ஸ்ரீவள்ளி அவதரித்த நாளும் பங்குனி உத்திரம் என்கிறது புராணம்.
தேவர்களின் தலைவன் என்று போற்றப்படுகிற தேவேந்திரன் இந்திராணியைத் திருமணம் நடைபெற்றதும் பங்குனி உத்திர நன்னாளில்தான். நவக்கிரகங்களில் ஒருவரான சந்திர பகவான், அழகும் திறனும் கொண்ட 27 நட்சத்திரக் கன்னியரை மணம் புரிந்தது இதே பங்குனி உத்திர நாளில்தான் என்கிறது புராணம்.
பங்குனி உத்திர நாளில் ஸ்ரீமகாலக்ஷ்மி, மகாவிஷ்ணுவை நோக்கி கடும் தவம் மேற்கொண்டார். இதில் மகிழ்ந்த திருமால், தன் திருமார்பில் மகாலக்ஷ்மிக்கு வீற்றிருக்கும் வரத்தைத் தந்தருளினார் என்கிறது விஷ்ணு புராணம்.
படைப்புக்கடவுளான பிரம்மா, தன்னுடைய நாவில் ஸ்ரீசரஸ்வதி தேவியை வைத்துக் கொண்டது பங்குனி உத்திர நாளில்தான்! ஐயப்ப அவதாரம் நிகழ்ந்ததும் பங்குனி உத்திர நன்னாளில்தான் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
பங்குனி உத்திர நாளில் அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். கிராமக் கோயில்களில், அக்கினிச்சட்டி ஏந்தும் பூஜைகள் விமரிசையாக நடைபெறும்.
எண்ணற்ற ஆலயங்களில், சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் நடைபெறும். பங்குனி உத்திரப் பெருந்திருவிழா நடைபெறும். பத்துநாள் விழாவாக கோலாகலமாக நடைபெறும்.
பங்குனி உத்திரம். இந்த நன்னாளில், அருகில் உள்ள ஆலயங்களுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்வோம். திருக்கல்யாணம் நடைபெறும் ஆலயத்துக்குச் சென்று, திருக்கல்யாண வைபவத்தைத் தரிசிப்போம். தடைப்பட்ட திருமணம் விரைவில் நடந்தேறும்.
முடிந்தால், அன்றைய தினம் விசேஷ பூஜைக்கு அபிஷேகப் பொருட்கள் வழங்குவோம். முருகப்பெருமானுக்கு செவ்வரளியும் மகாலக்ஷ்மி தாயாருக்கு வெண்மை நிற மலர்களும் சிவனாருக்கு வில்வமும் வழங்கி வேண்டிக்கொள்வோம்.
பழனியில் உத்திரம்
பங்குனி மாதம் விவசாயிகளுக்கு வேலை குறைந்த மாதம். பெரும்பாலான வயல்களில் சாகுபடி வேலைகள் முடிந்து விடும். இதனால் விவசாயிகள் கோடை காலத்தை தெய்வ வழிபாட்டில் கழிக்க வாய்ப்பான மாதமாகும். முருகனுக்கு இது திருமண மாதம். ஐப்பசியில் சூரனை வதைத்து மறுநாள் திருப்பரங்குன்றத் தில் தெய்வானையை மணம் முடிக்கிறார். பங்குனியில் வள்ளியை திருமணம் செய்கிறார். இதன் காரணமாகவே பங்குனி உத்திரம் பழனியில் கொண்டாடப்படுகிறது.
சாஸ்தா பெயர் விளக்கம்
பங்குனி உத்திரம் சாஸ்தா கோவில்களில் தான் பெரும்பாலும் கொண்டாடப்படும். கோவில் ஊருக்கு ஒதுக்குப்புறமான காட்டுப் பகுதிகளில் காணப்படும். எனவே, தனித்து செல்லாமல் கூட்டமாகச் சென்று வழிபடுவார்கள். ‘சாத்து’ என்ற சொல்லுக்கு ‘கூட்டம்’ எனப்பெயர் வந்தது. கூட்டமாக வந்து வழிபடுவதால் இவர் சாஸ்தா எனப்பட்டார்.
திருச்செந்தூரில் தீர்த்தமாடுங்கள்
உத்திர நட்சத்திரத்தில் பிறந்த திருமணம் ஆகாத பெண்களும், திருமணத்துக்குப் பிறகு பொருளாதார அல்லது மனரீதியாகத் துயரப்படும் பெண்களும் பங்குனி உத்திரம் தினத்தன்று திருச்செந்தூர் சென்று நாழிக்கிணற்றில் நீராடி அதன் பிறகு கடலில் குளிக்க வேண்டும். பிறகு முருகனுக்கு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். இந்த பரிகாரத்தை செய்தால் தீராத இன்னல்களும் தீரும்.
வெறும் வயிற்றுடன் வணங்காதீர்
பங்குனி உத்திரம் நாளன்று காலையில் வழக்கமான உணவை சாப்பிட வேண்டும். ஏனெனில் சாஸ்தாவை வெறும் வயிற்றுடன் வணங்கக்கூடாது என்பது மரபு. அரை வயிறுக்கு சாப்பிட்டு விட்டு, காடுகளில் இருக்கும் சாஸ்தாவை வணங்க செல்ல வேண்டும். மதிய வேளைக்குள் சாஸ்தாவுக்கு பாயாசம் படைக்க வேண்டும். அதை மதிய உணவாகக் கொள்ளலாம். இரவில் மட்டும் சாப்பிடக்கூடாது.
உத்திரத்தின் சிறப்பு
வைகாசி விசாகம், ஆடிப்பூரம், ஆவணி அவிட்டம், கார்த்திகையில் வரும் கார்த்திகை, தைப்பூசம் ஆகிய சிறப்பு நட்சத்திரங்களின் வரிசையில் வருவது பங்குனி உத்திரம் ஆகும். இந்த நாளில்தான் சிவ-பார்வதி திருமணம். முருகன்- வள்ளி திருமணம், சாஸ்தாவின் பிறப்பு ஆகியவை இந்த நட்சத்திர தினத்தில்தான் நடந்தது.
செவ்வாய் தோஷமா?
முருகப்பெருமான் பங்குனி உத்திரத்தில் திருமணம் செய்தவர் என்பதால், திருமணத்திற்கு காத்திருக்கும் பெண்கள், ஜாதக ரீதியாக செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், காரணமின்றி திருமணம் தடைபடுபவர்கள் வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள முத்துக்குமாரசுவாமியை (முருகன்) வணங்கிவர நிச்சயமாக உரிய பலன்கள் கிடைக்கும்.
சபரிமலையில் விசேஷ பூஜை
சபரிமலையில் சாஸ்தாவின் ஜென்ம நட்சத்திரத்தை ஒட்டி பங்குனி உத்திரத்திற்கு முதல் நாள் நடை திறக்கப்படும். உத்திரத்தன்று 4.30 மணிக்கு நடை திறப்பார்கள். அன்று முழுவதும் சிறப்பு பூஜை செய்யப்படும். பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்காது என்பதால் அய்யப்பனை நிம்மதியாகத் தரிசிக்கலாம்.
உத்திர நட்சத்திரம் மாதந்தோறும் வந்தாலும், பங்குனி மாதத்தில் வரும் உத்திரத்திற்கே அதிக மகிமைகள் உண்டு. தமிழ் மாதங்களில் 12வது மாதமான பங்குனியும், 12வது நட்சத்திரமான உத்திரமும் இணையும் புனித நாள் தான் பங்குனி உத்திரம். விரதங்களில் முக்கியத்துவம் வாய்ந்தது பங்குனி உத்திர விரதமும் ஒன்று. இந்த விரதத்தை கல்யாண விரதம், திருமண விரதம் என்றும் கூறுவார்கள். உத்திர நட்சத்திர நாயகன் அதாவது அதிபதி சூரியன். அதே நாளில் நிறை நிலவும் பொருந்தும்போது சூரியன், சந்திரனால் இரட்டைச் சிறப்புகள் கிடைக்கின்றன.
சிவபெருமானை கல்யாண சுந்தரமூர்த்தியாக பாவித்து அனுஷ்டிக்கும் விரதம் இது. சிவபெருமான், பார்வதியோடு மணக்கோலத்தில் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மதுரையில் காட்சி தந்தருளிய திருநாள் இதுதான். மீனாட்சியைத் திருமணம் செய்துக் கொண்டு மீனாட்சி சுந்தரேஸ்வரராகக் காட்சி தந்ததும் இந்நாளில்தான். சிவனின் தவத்தைக் கலைத்ததால் இறைவனின் நெற்றிக் கண்ணால் மன்மதன் எரிக்கப்பட்டான். ரதியின் வேண்டுதலால் மீண்டும் மன்மதன் உயிர் பெற்ற நாளும் இதுதான்.
பர்வதராஜன் தவத்தால் பத்மத்தில் அவதரித்த பார்வதியை சிவபெருமான் கரம் பிடித்த நாளும் இதுவே.ஸ்ரீரங்க மன்னார் ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் நடந்த நாளும் இதுதான். மகாலட்சுமியின் அவதார நாளும் பங்குனி உத்திர நாள்தான். மகாலட்சுமி பங்குனி உத்திர விரதத்தை அனுசரித்துதான் ஸ்ரீமகா விஷ்ணுவின் மார்பில் உறையும் பாக்கியம் பெற்றாள்.
வள்ளியின் அவதாரமும், ஸ்ரீ ஐயப்பனின் அவதாரமும், அர்ஜுனன் தோன்றியதும் பங்குனி உத்திர நந்நாளில் தான். திருமாலின் புதல்விகளான அமிர்தவல்லியும் சுந்தரவல்லியும் தெய்வானை, வள்ளியாகப் பிறவி எடுத்து முருகனையும் மணந்து கொண்டனர். தசரத மைந்தர்கள் ஸ்ரீ ராமன் - சீதை, லட்சுமணன் - ஊர்மிளை, பரதன் - மாண்டவி, சத்ருக்னன் - ஸ்ருதகீர்த்தி திருமணங்களும் பங்குனி உத்திரத்தன்றுதான் ஒரே மேடையில் மிதிலையில் நடைபெற்றது.
அழகுமிகு 27 கன்னியர்களை சந்திரன் மனைவிகளாக ஏற்றுக் கொண்ட தினமும் இதுதான். பங்குனித் திருநாளில்தான் வடநாட்டில் ஹோலிப் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர். திருமழப்பாடியில் நந்தி கல்யாணம் கண்டால் முந்திக் கல்யாணம்தான். பங்குனி மாதத்தில் ஏற்றிய தீபத்தில் சிவனும் பார்வதியும் ஐக்கிய சொரூபமாகக் காட்சி தருகின்றனர். அதனால் அன்று திருவிளக்குப் பூஜை செய்து பாவங்களை விலக்கி, பகை அகற்றி புண்ணியம் பெறலாம்.
காரைக்கால் அம்மையார் முக்தியடைந்த தினமும் பங்குனி உத்திரம்தான். லோபமுத்திரை அகத்திய முனிவரை மணந்து கொண்டதும் இன்று தான். பூரணா, பூஷ்கலா சாஸ்தாவையும், ரதி மன்மதனையும் கல்யாணம் செய்து கொண்டனர் என்று கந்தபுராணம் கூறுகிறது. தேவேந்திரன் இந்திராணி, நான்முகன் கலைவாணி ஆகியோரின் திருமணங்களும் பங்குனி உத்திரத்தன்றுதான் நடைபெற்றன.பிரம்மா தன் நாவில் சரஸ்வதி இருக்கும் வாய்ப்பை பெற்றதும் இந்த நாளில் தான். இமவான் தன் மகள் பார்வதியை சிவனுக்கு திருமணம் செய்ய தேர்ந்தெடுத்தது.
காஞ்சியில் காமாட்சி அம்மன் ஆற்று மணலை சிவலிங்கமாக பிடித்து வழிபட்டு சிவனின் அருளைப் பெற்றது. இடும்பன் மூலம் காவடி தூக்கும் பழக்கம் ஆரம்பித்தது. மார்க்கண்டேயனுக்காக சிவன் காலனை தன் காலால் உதைத்த நாள். மலையரசன் இமயவானின் மகளாக பிறந்து பார்வதி என்ற பெயரில் சிவனை வேண்டி கடும் தவம் இருந்த நாள். இந்த நந்நாளில் கோயில்களில் நடக்கும் சிறப்பு நிகழ்ச்சிகள் :
பழனியில் காவடி உற்சவம். மயிலாப்பூரில் அறுபத்து மூவர் உற்சவம். சுவாமி மலையிலும், திருச்செந்தூரிலும் வள்ளி கல்யாணம். காஞ்சிபுரத்தில் கல்யாண உற்சவம். மதுரையில் மீனாட்சி திருமணம். இவ்வளவு சிறப்புகள் ஒன்றாகப் பொருந்திய பங்குனி உத்திர நாளில் ஆலயம் சென்று வழிபடுவோம். பக்தர்கள், எளியோருக்கு அன்னதானம் செய்து தெய்வங்களின் ஆசியைப் பெறுவோம்.
சிவன் – பார்வதி, முருகன் – தெய்வயானை, ராமர் – சீதை, ஆண்டாள் – ரங்கமன்னார் போன்ற தெய்வங்களின் திருமணங்கள் நடைபெற்றதாக புராணங்கள் கூறுகின்றன.
மேலும் சாஸ்தா, மகாலட்சுமி, அர்ஜூனன் போன்றோர்களின் அவதார தினமாகவும் இந்நாள் கருதப்படுகிறது.
பங்குனி மாத சிறப்புகள்!!
ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து விழாக்கள் நடத்துவதும், விரதம் இருப்பதும் வழக்கம். அதில் பங்குனி உத்திர நட்சத்திரத்துக்கு அதிக மகத்துவம் உண்டு. இந்தத் திருநாளில்தான் மிக அதிகமான தெய்வத் திருமணங்கள் நடைபெற்றுள்ளதாகப் புராணங்கள் கூறுகின் றன. 12-வது மாதமான பங்குனியும், 12-ஆவது நட்சத்திரமான உத்திரமும் இணையும் புனித நாள் தான் பங்குனி உத்திரம். எண்ணிக்கையற்ற பலன்களைத் தரும் விரதங்களுள் பங்குனி உத்திர விரதமும் ஒன்று. இந்த விரதத்தை கல்யாண விரதம், திருமண விரதம் என்றும் கூறுவார்கள். உத்திர நட்சத்திர நாயகன்- அதாவது அதிபதி சூரியன்.
அதே நாளில் நிறை நிலவும் பொருந்தும்போது சூரியன், சந்திரனால் இரட்டைச் சிறப்புகள் கிடைக்கின்றன. சிவபெருமானை கல்யாண சுந்தரமூர்த்தியாக பாவித்து அனுஷ்டிக்கும் விரதம் இது.
சிவபெருமான் அன்னை பார்வதியோடு மணக்கோலத்தில் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மதுரையில் காட்சி தந்தருளிய திருநாள் இதுதான். அன்னை மீனாட்சியைத் திருமணம் செய்து மீனாட்சி சுந்தரேஸ்வரராகக் காட்சி தந்ததும் இந்நாளில்தான். ஆண்டு தோறும் மதுரையில் இத்திருமண விழாவை பங்குனி உத்திரத்தன்று சிறப் பாக நடத்துகின்றனர். சிவனின் தவத்தைக் கலைத்ததால் இறைவனின் நெற்றிக் கண்ணால் மன்மதன் எரிக்கப்பட்டான். ரதியின் வேண்டுதலால் மீண்டும் மன்மதன் உயிர் பெற்ற நாளும் இதுதான். முருகக் கடவுள் தெய்வானையை இந்த நாளில் தான் மணம் புரிந்துகொண்டார்.
அத்துடன் வள்ளியின் அவதார தினமும் இதுதான். பர்வத ராஜன் தவத்தால் பத்மத்தில் அவதரித்த பார்வதியை சிவபெருமான் கரம் பிடித்த நாளும் இதுவே.
ஸ்ரீரங்க மன்னார்- ஆண்டாள் திருக் கல்யாண வைபவம் நடந்த நாளும் இதுதான். மகாலட்சுமி பங்குனி உத்திர விரதத்தை அனுசரித்துதான் ஸ்ரீமகா விஷ்ணுவின் மார்பில் உறையும் பாக்கி யம் பெற்றாள். அத்துடன் மகாலட்சுமியின் அவதார நாளும் பங்குனி உத்திர நாள்தான்.
இந்நாளில் வைணவ ஆலயங்களில் மணக்கோலத்தில் தாயாரும் திருமாலும் காட்சி தருவார்கள். அன்று காஞ்சி வரதராஜர் ஆலயத்தில் ஸ்ரீபெருந்தேவித் தாயார் சந்நிதியில் ஸ்ரீதேவி, பூதேவி, மலையாள நாச்சியார், ஆண்டாள் மற்றும் பெருந்தேவித் தாயார் சகிதமாக ஸ்ரீவரதராஜர் காட்சி தருவார்.
காஞ்சியில் காமாட்சி- ஏகாம்பரரேஸ்வரர் திருமண விழா நடைபெறும் போது, அதே மண்டபத்தில் ஏராளமானோர் திருமணம் செய்து கொள்வார்கள் மதுரையைப்போலவே.
தேவேந்திரன்- இந்திராணி, நான் முகன்- கலைவாணி ஆகியோரின் திருமணங்களும் பங்குனி உத்திரத்தன்றுதான் நடைபெற்றன. தசரத மைந்தர்கள் ஸ்ரீராமன்- சீதை, லட்சுமணன்- ஊர்மிளை, பரதன்- மாண்டவி, சத்ருக்னன்- ஸ்ருதகீர்த்தி திருமணங்களும் பங்குனி உத்திரத்தன்றுதான் ஒரே மேடையில் மிதிலையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அழகுமிகு 27 கன்னியர்களை சந்திரன் மனைவிகளாக ஏற்றுக் கொண்ட தினமும் இதுதான். இதே பங்குனித் திருநாளில்தான் வடநாட்டில் ஹோலிப் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர்.
பங்குனி உத்திரத்தன்று சில கோவில்களில் தீர்த்தவாரியும் நடைபெறும். அப்போது அந்த தலங்களில் உள்ள கடல், ஏரி, ஆறு, குளம், கிணறு போன்றவற்றில் புனித நீராடினால் புண்ணியம் கிடைக்கும். பங்குனி உத்திரத்தன்று கன்னிப் பெண்கள் கல்யாண விரதம் கடைப்பிடித்து, அருகே உள்ள ஆலயங்களில் திருமணக்கோல தெய்வங்களைத் தரிசித்தால் அவர்களுக்கும் கல்யாண வைபோகம் தான். அதுபோல திருமழப்பாடியில் நந்திக் கல்யாணம் கண்டால் முந்திக் கல்யாணம்தான்.
பங்குனி மாதத்தில் ஏற்றிய தீபத்தில் சிவனும் பார்வதியும் ஐக்கிய சொரூபமாகக் காட்சி தருகின்றனர். அதனால் அன்று திருவிளக்குப் பூஜை செய்து பாவங்களை விலக்கி, பகை அகற்றி புண்ணியம் பெறலாம்.
சபரிமலை ஐயப்பன் அவதார தினம் இது. காரைக்கால் அம்மையார் முக்தியடைந்த தினமும் பங்குனி உத்திரம்தான். அன்று தண்ணீர்ப் பந்தல் வைத்து நீர்மோர் தானம் தருவது மிகவும் புண்ணியம். 48 ஆண்டுகள் பங்குனி உத்திர விரதம் இருந்தவர்களின் மறுபிறவி தெய்வப் பிறவியாக அமையும்.
இந்தத் திருநாளில் லோபமுத்திரை அகத்திய முனிவரையும்; திருமாலின் புதல்விகளான அமிர்தவல்லியும் சுந்தரவல்லியும் தேவயானை, வள்ளியாகப் பிறவி எடுத்து முருகனையும் மணந்து கொண்டனர். பூரணா, பூஷ்கலா ஐயப்பனையும்; ரதி மன்மதனையும் கல்யாணம் செய்து கொண்டனர் என்று கந்தபுராணம் கூறுகிறது.
பங்குனி உத்திர நாளில் தெய்வீக திருமணங்கள் - இந்த மாசத்துல இத்தனை சிறப்பு இருக்கா
தமிழகத்தை பொருத்த வரையில் மற்ற மாதங்களில் எல்லாம், ஒவ்வொரு தெய்வத்திற்கு என தனியாக திருவிழா கொண்டாடுவார்கள். ஆனால் பங்குனி மாதத்தில் மட்டும் தான், நகரம், கிராமம் என பாரபட்சமில்லாமல் அனைத்து தெய்வங்களுக்கும் ஒன்று சேர்த்து திருவிழா கொண்டாடுகிறார்கள். இதற்காக ஆறு, குளம், கிணறு, கடல் என அனைத்து நீர்நிலைகளிலும் மக்கள் தீர்த்தவாரி நிகழ்ச்சியை கொண்டாடுவதுண்டு.
தமிழ் மாதங்களில் மற்ற பதினோறு மாதங்களுக்கும் இல்லாத ஒரு சிறப்பு பங்குனி மாதத்திற்கு மட்டுமே உண்டு. மற்ற மாதங்களில் எல்லாம், அந்தந்த நட்சத்திரத்தோடு பவுர்ணமி திதி ஒன்றாக இணையும் நாள் அந்த நட்சத்திரத்தோடு சேர்த்து பவுர்ணமி என்று அழைக்கப்படும். ஒரு சில மாதங்களில் மட்டும் வேறுபடும். இதன் காரணமாகவே அந்த நட்சத்திரத்தோடு இணைத்து தான் அந்த மாதத்தின் பெயரும் இருக்கும். அப்படித்தான் நம்முடைய முன்னோர்கள் தமிழ் மாதத்திற்கு உரிய பெயரையும் பொருத்தி வைத்துள்ளனர்.
குரு அருள் நிறைந்த மாதம்
பங்குனி மாதம் குருவின் அருள் நிறைந்த மாதம். குருவின் வீடான மீனம் ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதம். அரசன் முதல் ஆண்டி வரை நாம் அனைவரும் செய்யும் தவறுகளைத் திருத்திக் கொள்ளும் மாதமாக குரு பகவானின் ஆதிக்கம் நிறைந்த இந்த பங்குனி மாதம் விளங்குகிறது. நவகிரகங்களின் தலைவனான சூரியன், ஆசிரியராகிய குருவின் வீட்டில் அதாவது, மீனத்தில் சஞ்சரிக்கும் மாதம் இது.
பார்வதி - பரமேஸ்வரன், மீனாட்சி - சுந்தரேஸ்வரர், ஆண்டாள் - ரங்கமன்னார், தெய்வானை - முருகன் என தெய்வத் திருமணங்கள் அனைத்தும் பங்குனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திர நாளில் நடந்ததாக புராணங்கள் கூறுகின்றன. அன்னை காமாக்ஷி ஊசி முனையில் தவம் இருந்து ஏகாம்பரேஸ்வரரோடு ஐக்கியமானதும் இந்தப் பங்குனி மாதத்தில்தான். சாமானிய மனிதர்களாகிய நமக்கு மட்டுமல்ல, சிவனேசச் செல்வர்களான அறுபத்து மூன்று நாயன்மார்களுக்கும் இறைவன் காட்சியளித்து மெய்ஞ்ஞானத்தைப் போதிப்பதும் இந்தப் பங்குனி மாதத்தில்தான்.
பங்குனி உத்திரம்
தமிழ் மாதங்களில் ஆண்டின் இறுதி மாதமான பங்குனி மாதத்தில் வரும் பவுர்ணமி திதியும், உத்திர நட்சததிரமும் இணையும் நாளுக்கு ஒரு சிறப்பு உண்டு. காரணம், உத்திரம் நட்சத்திரம் தான். ஒவ்வொரு மாதமும் உத்திர நட்சத்திரம் சுழற்சி முறையில் வந்தாலும் கூட, பங்குனி மாதத்தில் வருவது தான் இந்த மாதத்திற்கும் உத்திர நட்சத்திரத்திற்கும் வெகு சிறப்பாகும்.
உத்திரத்தின் சிறப்பு
ஜோதிட சாஸ்திரப்படி மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இதில் பனிரெண்டாவது நட்சத்திரமாக வருவது, உத்திர நட்சத்திரமாகும். தமிழ் மாதங்களில் பனிரெண்டாவது மாதமாக வருவதும் பங்குனி மாதம் தான். இதனால் தான் பங்குனி மாதமும் உத்திர நட்சத்திரமும் அதிக சிறப்பு பெறுகிறது.
மிகப்பெரிய பவுர்ணமி
பூமிக்கும் சூரியனுக்கும் நடுவில் சந்திரன் வரும்போது சூரிய பகவானின் பார்வை முழுவதும் சந்திரன் மீது படுவதால் பிரகாசமாக ஜொலிக்கிறது. அதோடு, உத்திரம் நட்சத்திரத்தின் அதிபதி சூரிய பகவான் ஆவார். அதே நாளில் பவுர்ணமியும் உத்திர நட்சத்திரமும் ஒன்றாக இணைவதால், மற்ற மாத பவுர்ணமியைக் காட்டிலும் பங்குனி மாத பவுர்ணமி பெரிய அளவில் பிரகாசமாக ஜொலிக்கிறது. இதனால் தான் தெய்வங்களுக்கு மிகவும் பிடித்தமான மாதமாக பங்குனி மாதம் கருதப்படுகிறது.