பிரதோஷ நேரத்தில் நரசிம்மரை வணங்கி விருதமிருந்தால் நினைத்த காரியம் கைகூடும், எதிரிபயம் தீரும், தீவினைகள் விலகும், கடன்கள் தீரும், குடும்பத்தில் அமைதி நிலவும் என்பது ஐதிகம்.
எனவே துயரத்தின் பிடியில் சிக்கிய மனிதர்கள் சிவனயும் ஸ்ரீ நரசிம்மரையும் வழிபடுவதற்கான காலம்தான் பிரதோஷம் காலம்.
சிவனுக்கு மட்டுமல்ல. ஸ்ரீ மஹா விஷ்னுவிற்கும் உகந்த காலம்தான்.
பிரஹலாதனின் பக்தியை மெய்பிக்கவும் ஹிரன்ய கசிபுவை வதம் செய்து உலகை காக்கவும் தூணிலிருந்து நர நாராயண ரூபமாய் உக்ர நரசிம்ம மூர்த்தியாக வெளிவந்த காலம் பிரதோஷ காலம்தான்.
நரசிம்மருக்கு பிரதோஷங்கள் மிகவும் விசேஷமானவை.
பிரதோஷம் என்பது நரசிம்மரை வழிபடுவதற்கான அற்புதமான நாள். எனவே பிரதோஷ நாளில், நரசிங்க பெருமாளை வழிபடுவது மிகுந்த பலன்களைக் கொடுக்கவல்லது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
நரசிம்மர் அவதாரம் நிகழ்ந்தது ஒரு பிரதோஷ காலத்தில்தான் என்கிறது நரசிம்ம புராணம். எனவே நரசிம்மரையும் பிரதோஷ காலத்தில் தரிசிப்பது ரொம்பவே விசேஷமானது ,
பிரதோஷம். தினத்தில், அருகிலுள்ள நரசிம்மர் குடிகொண்டிருக்கும் ஆலயத்துக்குச் சென்று நரசிங்க பெருமாளை வழிபடுங்கள். குறிப்பாக, பிரதோஷ காலமான மாலை 4.30 முதல் 6 மணிக்குள் நரசிங்க பெருமாளை தரிசியுங்கள்.
மனதார வேண்டிக்கொள்ளுங்கள். முடிந்தால், பானக நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு வழங்குங்கள். நம் பாவங்களையெல்லாம் போக்கி அருளுவார் நரசிங்க பெருமாள்.
மேலும் துயரத்தின் பிடியில் இருப்பவர்க்கு ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் அருள் இருந்தால்தான் துயரத்தின் தன்மை குறையும். பிரதோஷ காலம் என்பது கோதூளி லக்ன காலம் என்பதால் சிவனையும் விஷ்ணுவையும் வணங்குபவர்களுக்கு ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் அருள் இலவசமாகவே கிடைத்திடும்.ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மருக்கு பாணக நிவேதனம் செய்வித்தாலும் கடன் விரைவில் அடையும்.