புரட்டாசி மாதம் கடைசி அமாவாசைக்கு முன்னோர்களை வணங்கி, அவரவர் குலதெய்வத்தையும் வழிபாட்டால் கூடுதல் பலன்கள் கிடைக்கிறது.
அமாவாசையன்று நல்ல விஷயங்களையும் செய்ய மாட்டார்கள். ஏனென்றால் அமாவாசையன்று வெப்பம் மற்றும் காற்று ஏற்ற இறக்கமாக இருக்குமாம். பிரபஞ்சத்தின் சக்திகள் சரிவர செயல்படாமல் போகுமாம். இந்த நாட்களில் தேவர்கள் முதல் பித்ருக்கள் வரை மேலோகத்தில் இருந்து பூமிக்கு வருவார்கள் என்று சொல்லப்படுகிறது.
ஆகவே இந்த நாளில் குலதெய்வ வழிபாடும், பித்ருக்களின் வழிபாடும் செய்தால் அதிக நன்மைகள் கிடைக்கும். மேலும் உங்களுக்கு இருக்கும் அனைத்து கஷ்டங்களும் நீக்கி வாழ்க்கையில் முன்னேற வழிவகுக்கும்.
இந்த நாளில் பகவானிடமிருந்து உங்களுக்கு கிடைக்கும் ஆசியை காட்டிலும், குலதெய்வத்தின் ஆசிர்வாதமும், பித்ருக்களின் ஆசியும் கண்டிப்பாக கிடைக்க வேண்டும். இவ்விரண்டு ஆசிகளும் கிடைத்தால் பகவானின் ஆசீர்வாதம் பரிபூரணமாக இயல்பாகவே கிடைத்துவிடும் என்பதால் அமாவாசை மிகவும் சிறப்பு.
இதே நாளில் முன்னோர்களுக்கு பிடித்தமானவற்றை படைத்து பூஜை செய்து, பின்னர் எள்ளும், தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.
இப்படி செய்வதால் உங்கள் வீட்டு வாசலின் வெளியே நிற்கும் உங்களுடைய முன்னோர்கள் சந்தோஷம் கொள்வதாக ஐதீகம் கூறுகிறது. அப்படி நீங்கள் வணங்கத் தவறினால் முன்னோர்களது மனம் புண்பட்டு விடுமாம். முன்னோர்களுக்கு படைக்கும் படையலில் புடலங்காய் இருப்பது சிறப்பானது. புடலங்காயில் மூலிகை கொடி உள்ளதால் உங்கள் காரியங்கள் வெற்றி பெறும்.
பசுக்களுக்கு அகத்திக்கீரை, பச்சரிசி கலந்து வெல்லமும் கொடுத்தால் மிகவும் நல்லது. அமாவாசை தினத்தில் செய்யும் அன்னதானம் உங்கள் வாழ்க்கை நல்ல நிலைக்கு வரும் என்பதில் ஐயமில்லை. இந்த நாளில் நைவேத்யம், சர்க்கரைப் பொங்கல் படைத்தால் உங்களது தோஷங்கள் நீங்கும்.