திருவண்ணாமலை கிரிவலம் வழிபாடு எப்போது தோன்றியது? கிரிவலம் மேற்கொள்ளும் அனைத்து பக்தர்களும் இதைத் தெரிந்து கொள்ள வேண்டும். இதன் புராண வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
பக்தர்களை பொறிவைத்து பிடித்து ஞானமும் முக்தியும், அருளும் திருவண்ணாமலை தலத்தில், கைமேல் பலன் தரும் வழிபாடாக கிரிவல வழிபாடு திகழ்கிறது.இந்த கிரிவலம் எப்போது தோன்றியது? கிரிவலம் மேற்கொ ள்ளும் அனைத்து பக்தர்களும் இதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஜோதியாக தோன்றி பின்மலையாக அமர்ந்த அண்ணாமலையாரே இங்கு கிரிவலத்தை தொடங்கி வைத்தார். அவர் நடத்திய ஒரு திருவிளையாடல் தான் கிரிவலம் தோன்ற காரணமாக அமைந்தது. அந்த திருவிளையாடலால் திருவண்ணாமலையில் முதன் முதலில் கிரிவலம் சென்றது பார்வதிதேவி ஆவார்.
ஒரு தடவை கைலாயத்தில் சிவபெருமானின் இரு கண்களையும் பார்வதி தேவி மூடியதால் உலகம் இருண்டு உயிரினங் கள் அனைத்தும் தவிக்க நேரிட்டது. இதனால் பார்வதிதேவிக்கு தோஷம் ஏற்பட்ட து. அந்த தோஷத்திற்கு பரிகாரம் தேட வேண்டிய நிலை ஏற்பட்டதால் பார்வதி தேவி திருவண்ணாமலைக்கு வந்து தவம் இருந்தார்.
அவர் தவத்தை கண்டு மனம் இறங்கிய சிவ பெருமான் அவருக்கு காட்சி கொடுத்தார். வேண்டிய வரம் கேள் என்றார். அதற்கு பார்வதி தேவி உங்களை என்றென்று ம் பிரியாது இருக்கும்படி உங்கள் உடலில் பாதியை தந்து அருள வேண்டும் என்றார்.
உடனே சிவபெருமான் அப்படியானால் நீ என்னை சுற்றி வர வேண்டும் என்று கூறினார் அதை ஏற்றுக் கொண்ட பார்வதி தேவி திருவண்ணாமலையில் ஈசனே மலை யாக வீற்றிரு ப்பதால் அந்த மலையை சுற்ற தொடங்கினார் மலையை வலம் வருதல் என்பது சிவபெருமானையே சுற்றி வருவதற்கு சமமாகும் என்பதை உணர்ந்ததால் தன் தலை மீது கை கூப்பியபடி வலம் வந்தார்.
அவருக்கு சிவபெருமான் கிரிவல பாதையில் நேர் அண்ணாமலை அருகே ரிஷபவாகனத்திலும், ஈசான்ய பகுதியில் ஒளி ரூபத்திலும் இரண்டு இடங்களில் காட்சி கொடுத்து ஆசீர் வதித்தார். பின்பு தனதுஉடலின் இடபாகத்தை வழங்கி தன்னோடு ஐக்கியமாக்கி கொண்டு அர்த்தநாரீஸ்வரராக காட்சி கொடுத்தார்.
அப்போது பார்வதிதேவி, “நான் தங்களை சுற்றி வந்ததால் என்னை ஆசீர்வதித்ததை போல திருவண்ணாமலை மலையை கிரிவல வரும் ஒவ்வொரு பக்தனுக்கும் அருள் வழங்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். அதற்கு சிவபெருமான் சம்ம தித்தார். இந்த முறையில்தான் திருவண் ணாமலையில் கிரிவலம் நடைமுறை பழக்கத்துக்கு வந்தது.
பார்வதி தேவியை தொடர்ந்து இதர கடவு ள்கள், தேவர்கள், ரிஷிகள், சித்தர்கள், மகான்கள் என அனைத்து தரப்பினரும் திருவண்ணாமலையில் கிரிவலம்வந்து ஈசனாகிய அண்ணாமலையாரின் அருளை பெற்றனர். இதைத் தொடர்ந்து சித்தர்களின் வழிகாட்டுதலின் பேரில் சாதாரண மனிதர்களும் திருவண்ணா மலையில் கிரிவலம் செல்லும் நடைமுறை பழக்கத்துக்கு வந்தது...
ஓம் சிவாய நம. சர்வம் சிவமயம்..
அகிலம் எங்கும் சிவநாமம் ஒலிக்கட்டும்..