Breaking News :

Thursday, November 21
.

சந்திர பகவானின் மகனான புதன் கிரக பகவான் வரலாறு


நவகிரகங்களில் வித்தைக்கும் 
புத்திக்கும் அதிபதியான , சந்திர பகவானின் மகனான
 
புதன்_பகவான் வரலாறு :

🌲ஜோதிடத்தில் புதனை `வித்தைக்காரகன்', `வித்யாகாரகன்' என்று சொல்வார்கள். `மாதுளக்காரகன்' என்று ஜாதகரின் தாய்மாமனுக்குரிய யோகங்களைக் கூறுபவரும் புதன்தான்.

🌲பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று சொல்வார்கள். அதாவது, இந்த இடத்தில் பொன் என்பது செல்வத்துக்கான அதிபதி குருவை குறிக்கும். ஜாதகத்தில் குருவின் பலம் இருப்பதைவிட புதன் பலமாக இருக்க வேண்டும் என்பதையே சூசகமாக குறிப்பிட்டுள்ளனர்.

🌲கல்வி, கலை, வித்தைகளுக்கு அதிபதி புதன் கிரகம். எந்த ஒரு விஷயத்தையும் கண்ணால் பார்த்தவுடன் அதை கையால் செய்வதற்கு புதன் அனுக்ரகம் வேண்டும். கற்றவர்களுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. நன்கு படித்தவர்கள் கைநிறைய சம்பளம் வாங்குவதை கண்கூடாக பார்க்கிறோம். நம் வாழ்க்கைக்கு அடிப்படையான கல்விச் செல்வத்தை வழங்குபவர் புதன்.

🌲 நவகிரகங்களில் செவ்வாய்க்கு அடுத்தபடியாக வருபவர் புதன் பகவான். மனிதனாக பிறந்து மனோதிடம் மற்றும் உடல் வலிமையுடன் இருப்பது மட்டும் போதாது. மனிதர்களுக்கு வரமாக இருக்கும் இவற்றைஇ அவர்கள் பயன்படுத்தி தன் இனத்தின் முன்னேற்றத்திற்கும்இ மற்ற இனத்தின் அழிவில் இருந்தும் அவைகளை காப்பாற்ற வேண்டும்.

🌲 அதற்கு அவர்கள் மதிநுட்பத்துடன் செயல்பட வேண்டும். மதிநுட்பம் பெருக வேண்டுமாயின் பல கலைகளை கற்று தேர்ச்சி பெற வேண்டும். சில கலைகளை குருவில்லாமலும்இ பல கலைகளை குருவிடம் இருந்து மட்டுமே கற்றுக்கொள்ள முடியும்.

🌲 எந்த குருவினுடைய உதவி இல்லாமலும் இறைவனின் அருளால் பல கலைகளை கற்றுஇ இன்று கலைக்கு அதிபதியாக உள்ள புதன் பகவானைப் பற்றி காண்போம்.

புதன் ஒரு விசித்திரமான கிரகம். செவ்வாயைப் போலவே புதனும் இரு ஆதிபத்திய கிரகமாகும். ஜோதிட ஆச்சர்யமாக மிதுனத்தில் ஆட்சி பெறும் புதன், ஆட்சி வீடான கன்னியில் உச்சம் பெறுகிறார். மீனத்தில் நீசமடைகிறார். அறிவு, ஞானம் இரண்டுக்கும் இவரே அதிபதியாகி படிப்பறிவு, பட்டறிவு இரண்டையும் மனிதனுக்கு உணர்த்துகிறார். விஞ்ஞானம், மெஞ்ஞானம் இரண்டுக்கும் காரணமாகிறார்.

🌲 புதனுக்குரிய மலர் - வெண் காந்தள்

🌲 புதனுக்குரிய நிறம் - பச்சை

🌲புதனுக்குரிய உலோகம் - பித்தளை
🌲 புதனின் நவரத்தினம் - மரகதப்பச்சை

🌲புதனின் வடிவம் - அம்புக்குறி வடிவம் 
🌲 புதனின் வாகனம் - குதிரை

🌲புதனின் ஆதிக்க எண் - 5

புதன் பகவானின் இயல்புகள் :

🌲புதன் சுய ஒளி அற்றவர்.

🌲பச்சை நிறம் கொண்டவர்.

புதன் மதி நுட்பத்திற்கு காரணமானவர்.

உறவு முறைகளில் தாய்மாமன் மற்றும் பங்காளிகள் உறவுகளை குறிப்பவர்.

புதனின் காயத்ரி மந்திரம் :

ஓம் கஜத்வஜாய வித்மஹே
சுக அஸ்தாய தீமஹி
தன்னோ புத பிரசோதயாத்

புராணமும் புதனும் :
அடுத்த பதிவில் தொடரும் 

*ஜோதிடத்தில் நிறைய வழிகள் உள்ளன அவரவர் ஜாதகத்தில் ஸ்தானங்களூக்கு ஏற்ப பலன்கள் மாறுபடும் பரிகாரங்கள் நிறையவே உள்ளன பயன்படுத்தி வெற்றி பெறுங்கள்*

*நம்புங்கள் நல்லதே நடக்கும்*

*மேலும் அவரவர்கள் சுய ஜாதகத்தை ஆராய்ந்து குருவின் அருளால் எல்லா வகையான தோஷங்களையும் நீக்கி  ஆனந்தமாக வாழுங்கள்*

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.