முன்னொரு சமயம் பிரம்ம தேவர் தேவர்களு டன் வந்து மகிஷியை பற்றியும், அவள் பெற்ற வரத்தை பற்றியும் எடுத்து ரைத்து, அரக்கியா ல் தேவர்கள் அடையும் இன்னல்களை சிவ பெருமானிடம் எடுத்து ரைத்து இருந்தார்.
பஸ்மாசுரன் முழுவதுமாக அழிந்த பின்பு திருமால் சிவபெருமானை எண்ண, சிவபெ ருமானும் அவ்விடம் தோன்றினார்.
சிவபெருமான் மோகினியாக அவதாரம் கொண்ட திருமாலை கண்டதும் பிரம்ம தேவர் எடுத்துரைத்திருந்த மகிஷி அரக்கியை அழிக் கும் தருணத்திற்காக காத்திரு ந்தது போல் சிவபெருமான் மோகினி அவ தாரத்தை காண இரு சக்திகளின் இணை வால் ஒருமாபெரும் சக்தியானது பல லட்ச சூரிய ஒளியின் வெளிச்சத்தை காட்டிலும் அதிக வெளிச்சம் கொண்ட ஒரு குழந்தை யை உருவாக்கியது.
தேவர்களின் மகிழ்ச்சி :
இரு சக்திகளின் இணைவால் உருவான குழந்தையை காணவும் அரக்கியின் இன்னல் களிலிருந்து தங்களைக் காக்கும் வல்லமை கொண்ட ஐயனைக்காணவும், தேவாதி தேவர் கூட்டம் அனைவரும் அவர் உருவானஇடத்தை வந்தடைந்து அக்குழந்தையைக் கண்டு மனம் மகிழ்ந்தனர்.
அந்த இடத்தை ஆண்டுக்கொண்டிருக்கும் பந்தளராஜன் என்னும் அரசன் மிகுந்த சிவபக்தி கொண்டவன் என்றும், அவனுக்கு பிள்ளை இல்லையே என்றும் ஏங்கிக் கொண்டு உள்ளான். அவன் ஏக்கங்களை நீக்கும் பொருட்டு இக்குழந்தை அவரிடமே வளர்ந்து, தனது அவதார கடமைகளை நிறைவேற்றி கொள்ளட்டும் என்று கூறினார் சிவபெருமான்.
சிவபெருமானும், மோகினியும் பிறந்த குழந்தையின் கண்டத்திலேயே ஒரு மணி யை கட்டி வைத்துவிட்டு மறைந்தனர். அப்போது, வானத்தில் இருந்த வண்ணமே ஒரு மரத்தின் நிழலில் பசும்புல் கொண்ட படுக்கையில் இருந்த குழந்தையை தேவர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருந்தனர்.
பந்தளராஜன் வருகை :
மனதில் இருந்த பலவித குழப்பங்களால் வனத்தில் வேட்டையாடவும் விருப்பமில் லாமல், ஆனால் வேட்டையாட வேண்டும் என்ற எண்ணத்துடனும் வனத்தை நோக்கி சில வீரர்களுடன் பந்தளநாட்டு அரசனான ராஜசேகர பாண்டியன் மிகுந்த சோர்வுடன் வந்து கொண்டிருந்தார்.
ஒரு நிலையில் குழந்தையின் அழுகுரல் கேட்கவே, தனது எண்ணங்களிலிருந்து விடுபட்டு அழுகுரல் வரும் திசையை நோ க்கி தனது குதிரையில் அமர்ந்து, தனது வீரர்களுடன் இணைந்து அவ்விடம் வந்து பார்த்தார்.
அவ்விடத்தில் இருந்த குழந்தையை கண் டு ஆச்சரியமும், வேதனையும் கொண்டார். மிருகங்கள் நடமாட்டம் நிறைந்த வனத்தி ன் நடுவிலே யாருடைய துணையும் இல்லாமல், ஒரு குழந்தையானது தன்னந்தனி யாக இருப்பதை கண்ட மன்னன் யாரும் இல்லாமல் ஒரு குழந்தையானது அவ்விட ம் தனியாக அழுதுக்கொண்டு இருப்பதை கண்டு அதனருகே சென்று, அக்குழந்தை யை எடுத்து தன்னுடன் வைத்து கொண்டு மற்ற வீரர்களை குறிப்பிட்ட தூரத்தில் மனித நடமாட்டம் உள்ளதா? என அறிந்துவர உத்தரவிட்டார்.
வீரர்கள் அனைவரும் மன்னரின் ஆணைக் கிணங்கி குறிப்பிட்ட தூரம் வரை செல்ல கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எந்த ஒரு மனித நடமாட்டமும் இல் லை என்பதை அவர்கள் அறிந்து வந்து தங்களது மன்னனிடம் எடுத்துரைத்தனர்.
வீரர்கள் சென்ற சில நொடிகளிலேயே தன் மார்பின் அருகில் வந்த குழந்தையா னது அழுகையை நிறுத்தி புன்னகைக்க தொடங்கியது.
அக்குழந்தையின் புன்னகையில் இந்நாள் வரை தனது மனதில் இருந்த அனைத்து விதமான கவலைகள் மற்றும் துன்பங்கள் என அனைத்தும் மறைந்து இதுநாள் வரை மன்னனாக இருந்து தனக்கு கிடைக்காத மன மகிழ்ச்சியை, அக்குழந்தையை தனது கரங்களில் ஏந்திய நொடிப்பொழுதில் இருந்து அவர் அனுபவித்தார்.
நன்றி தெரிவித்தல் :
குழந்தையானது பந்தளராஜனின் கரங்க ளில் இருப்பதை கண்ட தேவர்களும் மிகு ந்த மகிழ்ச்சியும் ஆனந்தமும் கொண்டனர்.
வீரர்கள் சொன்ன செய்திகளை கேட்ட பந்தளராஜன் மிகுந்த மகிழ்ச்சியும், ஆனந் தமும் கொண்டார். குழந்தையானது இறை வனால் தன் மனதில் உள்ள கவலைகளை போக்கும் பொருட்டு அளிக்கப்பட்ட வரமா கவே கருதினார் பந்தளராஜன். அவ்விடத்தில் சிவபெருமானுக்கு மனதார மிகவும் பரிசுத்தத்துடன் நன்றி தெரிவித்தார்.