சபரிமலையில் வாசம் செய்கிறார் சுவாமி ஐயப்பன். அவரை தரிசனம் செய்ய உலகெங் கிலுமிருந்து பக்தர்கள் ஒரு மண்டலம் (48 நாள்கள்) விரதம் இருந்து அவரின் சந்நிதிக்கு வருகிறார்கள்.
நீண்ட தொலைவிலிருந்து பயணம் செய்து வரும் பக்தர்கள் வரும் வழிகளில் உள்ள ஐயனின் ஆலயங்களையும் தரிசிப்பதன் மூலம் உன்னதமான ஆன்மிக அனுபவத்தை அடையமுடியும்.
ஒவ்வொரு தலமும் தனிச் சிறப்புகள் வாய்ந்தது. எனவே, சபரிமலைப் பயணத்தில் சாமிமார்கள் தரிசி க்க உகந்த ஐயப்பனின் வாழ்வுடன் தொடர்பு டைய 10 திருத்தலங்கள் உங்களின் பார்வைக்காக...
கல்வி வரம் அருளும் குளத்துப்புழை பால சாஸ்தா
செங்கோட்டையிலிருந்து 45 கி.மீ தொலைவி ல் உள்ளது குளத்துப்புழை. ஐயப்பன், பால சாஸ்தாவாய் கோயில்கொண்டிருக்கும் தலம் இது. பால சாஸ்தா குழந்தைகளுக்குக் கல்வி மேன்மையளிப்பவர். இங்கு வந்து `வித்யார ம்பம்' செய்வதன் மூலம் குழந்தைகள் படிப்பி ல் சிறந்துவிளங்குவர் என்பது நம்பிக்கை.
திருமணத் தடைகள் நீக்கும் அச்சன்கோயில் கல்யாண சாஸ்தா
செங்கோட்டையிலிருந்து 30 கி.மீ தொலைவி ல் உள்ளது இந்தத் திருதலம். பரசுராமர் பிரதி ஷ்டை செய்த ஐந்து கோயில்களில் இதுவும் ஒன்று. இங்கு சாஸ்தா கல்யாண சாஸ்தாவா கக் காட்சிகொடுக்கிறார்.
திருமண வரம் வேண்டுபவர்கள் இங்குவந்து வேண்டிக்கொள்ள விரைவில் தடைகள் நீங்கி திருமண பாக்கியம் கிடைக்கும் என்கின்றனர் பக்தர்கள்.
ஆபத்துகள் நீக்கும் ஆர்யங்காவு ஐயப்பன் கோயில்
பரசுராமர் பிரதிஷ்டை செய்த கோயில்களில் ஒன்றாகக் கருதப்படுவது ஆர்யங்காவு ஐயப்பன் ஆலயம்.
சபரிமலைக் கோயிலை போன்றே வழிபாட்டு ச் சடங்குகளை கொண்ட இந்த ஆலயத்திலும் 10 வயதுமுதல் 50 வயது வரை உள்ள பெண்க ள் அனுமதிக்கப் படுவதில்லை.
ஐயப்பனின் காவல் தெய்வமான கருப்பசாமி யும் கருப்பாயியும் கோயில் கொண்டிருக்கும் இந்தத் தலத்தில் வழிபாடு செய்தால் வரும் ஆபத்துகள் எல்லாம் விலகி ஓடும்.
தீராத வினைதீர்க்கும் எரிமேலி ஐயப்பன்
தன் தாயின் நோய் தீர்க்கப் புலிப்பால் கொண்டுவர வில் அம்போடு வேடுவரின் ரூபம் கொண்டு புறப்பட்ட கோலத்தில் ஐயன் காட்சி கொடுக்கும் இடம் எரிமேலி.
இங்குதான் ஐயப்பனின் தோழரான வாவர் சாமியின் மசூதி உள்ளது. மாலையணிந்த சாமிகள் இங்கு நடைபெறும் பேட்டை துள்ளலி ல் கலந்துகொள்ள தீராத வினைகள் தீரும் என்பது நம்பிக்கை.
பயம்போக்கும் ஐயனின் வாள் இருக்கும் புத்தன் வீடு
எரிமேலி பேட்டை சாஸ்தா கோயிலிலிருந்து பேட்டை துள்ளிவரும்பாதையில் இடதுகைப் பக்கம் செல்லும் சிறு பாதையில் சென்றால் `புத்தன் வீடு' என்னும் இடத்தை அடையலாம்.
வீடு போல இருக்கும் அந்தத் தலத்தில் ஐயன் ஒருநாள் தங்கியதாக ஐதிகம். எனவே அங்கு ஒரு வாளினையும் சுவாமி படத்தையும் வைத் து வழிபாடு செய்து வருகின்றனர். இங்கு சென்று ஐயனை வேண்டிக்கொள்ள பயம் அகலும் என்பது நம்பிக்கை.
அடியவர்க்கு அருள் செய்யும் அம்பாடத்து மாளிகை
ஆதிசங்கரர் அவதரித்த காலடிக்கு மிக அருகி ல் உள்ள தலம் அம்பாடத்து மாளிகை.
ஆலங்காடு பேட்டை சங்கத்தினுடைய பெரி யோனுக்கு 150 ஆண்டுகளுக்கு முன்பாக ஐயப்பன் அனுகிரகம் செய்துகொடுத்த முத்தி ரைப் பிரம் பும் விபூதிப் பையும் இருக்கக் கூடிய மாளிகை ஆலயத்தில் உள்ளது.
இங்கு நடைபெறும் மண்டல பூஜையில் கலந்துகொண்டால் சகல துன்பங்களும் நீங்கி நன்மைகள் பெருகும் என்பது ஐதிகம்.
வீரம் அருளும் முக்கால்வட்டம் ஐயப்பன் கோயில்
கேரளாவில் உள்ள சேர்த்தலா என்னும் மாவட் டத்தில் உள்ளது முக்கால்வட்டம் என்னும் ஊர். இங்குதான் ஐயன் சிறுவனாய் இருந்தபோது `களரி' பயின்றதாகச் சொல்லப்படுகிறது.
ஐயன், களரி பயின்றபோது பயன்படுத்திய வாள் இங்கு வைக்கப்பட்டுள்ளது. இங்கு வந்து ஐயனை வேண்டிக்கொள்ள மனத்தில் வீரமும் உடலில் வலிமையும் உண்டாகும் என்கின்ற னர் பக்தர்கள்.
செல்வ வளம் சேர்க்கும் பந்தள ராஜ ஐயப்பன்
ஐயப்பன் மணிகண்டனாக வாழ்ந்த பந்தளம் அரண்மனை இங்குதான் உள்ளது. எனவே, இங்கு ஐயப்பன் ராஜ ஐயப்பனாகக் காட்சி கொடுக்கிறார்.
இங்குள்ள அரண்மனையில் இருந்துதான் திருவாபரணங்கள் மகரவிளக்கு பூஜையின் போது கொண்டு செல்லப்படும். ராஜனாகக் காட்சி தரும் ஐயப்பனை தரிசனம் செய்ய சகல செல்வங்களும் சேரும் என்பது ஐதிகம்.
குருவருள் சேர்க்கும் குருநாதர் முகடி ஐயப்பன்
பந்தள அரண்மனைக்கு அருகிலேயே உள்ளது இந்தத் தலம்.
மணிகண்டன் மாணவராய்க் குருகுலம் பயின்ற தலம் இது. இங்கு கல்வி பயின்ற போதே, வாய்பேச இயலாத தன் குருவின் குமாரனைப் பேசவைத்து ஐயன் அற்புதம் செய்தார்.
எனவே, இங்கு வந்து வேண்டிக்கொள்ள கல்வியின் மேன்மையும் குருவருளும் திருவருளும் சேரும் என்பது ஐதிகம்.
சகலமும் அருளும் சபரிமலை தர்மசாஸ்தா
48 நாள்கள் விரதமிருந்து ஐயப்பன்மார்கள் இருமுடிகட்டி வந்து தரிசனம் செய்ய விரும்பு கிறதலம் இது. இங்குள்ள தர்ம சாஸ்தா யோக நிலையில் அமர்ந்து சின் முத்திரையுடன், தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு அருள் செய்யும் தலம்.
இந்தச் சந்நிதியின் வாயிலில் `தத்வமஸி' என்னும் உயரிய சத்திய வாசகம் பொறிக்கப் பட்டுள்ளது. விரதமிருந்து தன்னை நோக்கி வரும் அனைவரின் உள்ளத்துள்ளும் ஐயன் ஒளி மயமாய்க் குடியேறிவிட்டான் என்பதை உணர்த்தும் வாசகம்.
இந்த ஐயனை தரிசிக்க ஒவ்வோர் ஆண்டும் கோடிக்கணக்கான பக்தர்கள் குவிகிறார்கள். பதினெட்டுப் படியேறி வந்தவர்களை வாழ்வி ல் மேன்மேலும் மேலேற்றிவிடுகிறவன் சபரிமலை ஐயப்பன் என்பது பக்தர்களின் காலங் காலமான நம்பிக்கை.