Breaking News :

Thursday, November 21
.

சாளக்கிராமம் உருவான கதை?


ஒரு மன்னனின் மகள் துளசி, மகாவிஷ்ணுவையே கணவனாக அடைய வேண்டும் என்று தவம் இருந்தாள். தன் போன ஜன்மத்தில் கூட அவள் கிருஷ்ணனுடன் கோபிகையாகக் கூடி இருந்தாள். மகாவிஷ்ணு மாறு வேடத்தில் சென்று துளசியை ஏமாற்றினார்.

என்னை ஏமாற்றிய நீ யாராக இருந்ததாலும் கல்லாகப் போவாயாக என்று சாபமிட்டாள். அந்தக் கல்தான் சாளக்கிராமக் கல், உடனே மஹாவிஷ்ணு அவருக்குக் காட்சி கொடுத்தார்.

பதறிப்போனாள் துளசி புன்னகை புரிந்தார் மஹாவிஷ்ணு. "அஞ்சாதே துளசி, எல்லாம் என் சித்தப்படியே நடக்கிறது. க்ருஷ்ணஅவதாரத்தின் போது கோபிகையாக இருந்ததவள் நீ. என்னை மணம் புரிய வேன்டும் என்று தவம் புரிந்தவளும் நீயே.

பூலோகத்தில் வாழும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கவே இத்தகைய லீலைகளும் நடத்தப்படுகின்றன. என்னைக் கல்லாக மாறுமாறு நீ சபித்ததும் என் விருப்பபடிதான், என்னை தரிசனம் செய்தால் உனது இந்தப் பிறவிக்கு முக்தி கிடைக்கிறது, இப்போது நீ கண்டகி நதியாகவும், துளசிச் செடியாகவும் மாறிவிடுவாய்.

என்னைக் கல்லாக மாறுமாறு சபித்து விட்டதால் நான் சாளக்கிராமக் கற்களாக மாறப்போகிறேன், நீ என்னை மணக்க விரும்பியவள் அல்லவா? அதனால் நீ கண்டகி நதியாக ஓட நான் உன்னில் கிடப்பேன், ஆம், சாளக்கிராமக் கற்களாக, கிடப்பேன். அந்த, கற்களில் சங்கு, சக்கரச் சின்னங்களும் உண்டாகும்.

சாளக்கிராமமாக  நானே இருப்பதால் பக்தர்கள் அந்தக் கற்களை வணங்குவார்கள். நாடெங்கும் எடுத்துச் சென்று தங்கள் வீடுகளில் வைத்து பூஜை செய்வார்கள், கற்கள் கிடக்கும் நதியான நீயும், புனித நதியாக கங்கையை விடச் சிறந்த நதியாகப் போற்றப்படுவாய். உன்னில் நீராடும் பக்தர்களுக்கு அவர்கள் கேட்டதை எல்லாம் நான் தருவேன், இங்கே வர முடியாதவர்கள் துளசியை எனக்கு அர்ச்சித்தால் போதும், துளசி தீர்த்தத்தைப் பருகினாலும் நான் மிகுந்த ஆனந்தம் அடைந்து அருள் பாலிப்பேன்" என்றார்.

"யார் தங்களுடைய வீட்டில் சாலக்கிராம மூர்த்தியை வைத்துக் கொள்கிறரர்களோ அந்த வீட்டில் வைக்கப்பட்டு இருக்கும் சிறு இடத்தையே தன் கோயிலாகக் கொண்டு அங்கே எழுந்தருள்கிறேன். அந்த சாலகிராமத்தில் நான் எப்போதும் வசிக்கிறேன். அது இருக்கும் வீட்டில் தோஷமே கிடையாது. சாலகிரமம் இருக்கும் விடுகளில் உள்ளவர்களுக்கு சந்தோசம், சௌபாக்கியம், முக்தி ஆகிய எல்லாவற்றையும் நான் தருவேன்" என்று மஹாவிஷ்ணு கூறினார்.

சாலகிராமம் எப்படி உருவாகின்றன :

மகாவிஷ்ணு தங்கமயமான ஒளியுடன் திகழும் வஜ்ர கிரீடம் என்னும் பூச்சியின் வடிவம் கொண்டு சாலகிரமக் கல்லைக் குடைந்து அதன் மையத்தை அடைந்து அங்கு உமிழ் நீரால் சங்கு சக்கர வடிவங்களையும் தனது அவதர ரூபங்களையும் பல விதமாக விளையாட்டாக வரைகிறார். இவைதான் சாளகிராம மூர்த்திகள்.

எதுவும் வரையப்படாமல் உருளை வடிவக் கற்களாகவும் இவை கிடைக்கும். அதற்கு ஹிரண்ய கற்பக் கற்கள் என்று பெயர். இவையும் பூஜைக்கு உகந்தவை. இந்த சாளகிராமம் சங்கு, நத்தைக்கூடு, பளிங்கு போன்று பலவித வடிவங்களில், கிடைக்கின்றன.

இவைகள் நேபாளுக்கு அருகே காட்மாண்டு இடத்தில் ஓடும் கண்டகி நதியில் கிடைக்கிறது. எளிதாக எல்லோர்க்கும் கிடைப்பதில்லை.கிடைத்தால் அதிர்ஷ்டம் தான்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.