Breaking News :

Saturday, April 12
.

சர்வரோக நிவாரண மந்திரம்


சர்வரோக நாமத்ரய_என்னும் மகாசக்தி வாய்ந்த அஸ்திரம்.

ஒன்றே தெய்வம், ஒருவனே தேவன் என்று இருந்தால் ஸ்லோகமும் ஒன்று இருக்க வாய்ப்பு உள்ளது.
அல்லது ஒருவர் ஒரு கடவுளை மட்டும் தொழுது வந்தால் ஒரு மந்திரம் போதும்.

ஆனால் இந்து மதத்தில் முப்பத்து முக்கோடி இருப்பதால்
ஒரு பொதுவான கடவுள் வாழ்த்து சாத்தியமில்லை.ஒவ்வொரு மந்திரமும் ஒவ்வொரு பலன்களை கொடுக்கக் கூடியதாக அமைந்து இருக்கிறது என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.

இப்படி எல்லா வகையான மந்திரங்களையும் கற்றுணர்ந்த வேத வியாசர் இந்த மந்திரத்தை சர்வரோக நிவாரண மந்திரம் என்று கூறுகிறார்.

மூன்று வரியில் அமைந்திருக்கும் இறைவனின் இந்த திருநாமங்கள் எவர் ஒருவர் தினமும் சொல்கிறார்களோ! அவர்களுக்கு எத்தகைய நோய்களும் அண்டுவதில்லை. அப்படியான மந்திரம் என்ன?

ஒருமுறை அன்னை லலிதா திரிபுரசுந்தரிக்கும், பண்டாசுரன் என்பவனுக்கும் பலமான போர் ஒன்று நடந்தது.
இப்போரில் எதிரெதிர் திசையில் நின்று கொண்டு மஹா அஸ்திரங்களை வீசி ஒருவருக்கு ஒருவர் யுத்தம் செய்து கொண்டிருந்தார்கள்.

அன்னைசக்தியின்சேனையின்மீதுபலதரப்பட்டஅஸ்திரங்களை தொடுத்து போர் புரிந்து கொண்டிருந்தான் பண்டாசுரன்.
அதற்கு எதிர்வினை அஸ்திரங்களையும் அன்னையின் சேனை தொடுத்து வெற்றி கொண்டார்கள்.

இப்படியே போர் தொடரும் பொழுது திடீரென பண்டாசுரன் மஹா ரோகாஸ்திரம் என்னும் அஸ்திரத்தை அன்னை சேனையின் மீது தொடுக்க பலவிதமான நோய்கள் வந்து தாக்கி சக்திகள் அனைவரும் பரிதவித்து நின்றனர்.

 அப்பொழுது லலிதா திரிபுரசுந்தரி ஆகிய அன்னை பராசக்தி
சர்வரோக நாமத்ரய என்னும் மகா சக்தி வாய்ந்த அஸ்திரம் ஒன்றை பண்டாசுரனை நோக்கி தொடுத்து எல்லா நோய்களையும் விரட்டி அடித்து வெற்றி கொண்டார்.

இந்த மந்திரத்தை சொல்வதற்கு தனியாக யாரிடமும் தீட்சை பெற வேண்டிய அவசியமில்லை.
யார் வேண்டுமானாலும்,

எப்பொழுதுவேண்டுமானாலும்,எந்தநேரத்தில்வேண்டுமானாலும் இந்த மந்திரத்தை நாம் உச்சரிப்பதன் மூலம் நம்மிடம் இருக்கும் நோய் நொடிகள் யாவும் நீங்கும்.

 நமக்குநேரம்கிடைக்கும்பொழுதெல்லாம் இந்த மந்திரத்தை ஜபமாக ஜபித்து வந்தால் நம் உடலில் இருக்கும் சக்திகள் தூண்டப்பட்டு நோய்களை எதிர்த்துப் போராடும்.

சாதாரணமாக ஒரு நாளைக்கு 108 முறை இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் அல்லது 108 முறை எழுத்து வடிவமாக எழுதினாலும் பெறற்கரிய பலன்கள் கிடைக்கும்.
நாமத்ரய மஹா மந்திரம்:
ஓம் .அச்சுதாய நமஹ!
          ஓம் அனந்தாய நமஹ
                    ஓம் கோவிந்தாய நமஹ!!
ஆரோக்கியம் இருந்தால் போதும் ஐஸ்வர்யமும் வரும். அந்த இரண்டும் சகல சம்பத்தையும் தரும்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.