Breaking News :

Wednesday, May 14
.

சண்முகநாதர் திருக்கோயில், பச்சை மலை, ஈரோடு


திருவிழா கந்த சஷ்டி, தைப்பூசம், காவடி எடுத்தல், பங்குனி உத்திரப் பெருவிழா, திருக்கல்யாண வைபவம், முத்துப்பல்லக்கில் பவனி வருதலும் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன. தல சிறப்பு இங்குள்ள மூலவர் மேற்கு நோக்கி அமைந்திருப்பது தலத்தின் சிறப்பு.

இங்கு, மரகதவல்லி சமேத மரகதீஸ்வரர், வள்ளி தெய்வானையுடன் கல்யாண சுப்ரமணியர், ஸ்ரீதேவி-பூதேவி சமேத மரகத வேங்கடேச பெருமாள், வித்யா கணபதி, தட்சிணாமூர்த்தி, பைரவர், மனைவியர் சமேதராக நவக்கிரகங்கள் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளன.

கல்வி - கேள்விகளில் சிறந்து விளங்கவும், பிள்ளை பாக்கியம் கிடைக்கவும், கடன் தொல்லையிலிருந்து விடுபடவும், வீட்டில் சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கப் பெறவும் பக்தர்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்தால் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

வேண்டுதல்கள் நிறைவேறிய பக்தர்கள் இங்குள்ள முருகப்பெருமானுக்கு அருகம்புல் மாலை சார்த்தியும், ருத்ராபிஷேகம் செய்தும், பன்னீரால் அபிஷேகம் செய்தும், பச்சை நிற வஸ்திரம் சார்த்தியும், சிறப்பு அர்ச்சனை செய்தும் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.

பழநி திருத்தலத்தைப் போன்று, இங்கும் மேற்கு நோக்கி அருள்கிறார் சண்முகக் கடவுள். இங்கேயுள்ள வித்யா கணபதியும் விசேஷமானவர். இவருக்கு அருகம்புல் மாலை சார்த்தி, தோப்புக்கரணமிட்டு வணங்கினால் கல்வி கேள்விகளில் சிறக்கலாம்.

மூலவரின் திருநாமம் சண்முகநாத ஸ்வாமி. வள்ளி - தெய்வானை சமேத கல்யாண சுப்ரமணியரும் தனிச்சன்னதியில் அருள்கிறார். இவருக்கு வஸ்திரம் சார்த்தி வணங்கினால், விரைவில் திருமண வரம் கைகூடும் என்கின்றனர் பக்தர்கள்.

கந்த சஷ்டி, தைப்பூசம் ஆகிய நாட்களில் பல ஊர்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், காவடி எடுத்தும் பால் குடம் ஏந்தியும் வந்து தரிசித்துச் செல்வார்கள். குறிப்பாக, பத்து நாள் விழாவாக நடைபெறுகிறது பங்குனி உத்திரப் பெருவிழா.

இந்த நாளில், முருகப்பெருமானுக்கு ருத்ராபிஷேகம் செய்தால் பிள்ளை பாக்கியம் கிடைக்கும். கடன் தொல்லை நீங்கி, வீடு, மனை வாங்கும் யோகம் கிட்டும் எனச் சொல்லி பூரிக்கின்றனர் பக்தர்கள்! திருக்கல்யாண வைபவம், முத்துப்பல்லக்கில் பவனி வருதலும் கோலாகலமாக நடைபெறுகின்றன.
சண்முகக் கடவுளுக்கு, பன்னீரால் அபிஷேகம் செய்து, பச்சை நிற வஸ்திரம் சார்த்தி சிறப்பு அர்ச்சனை செய்தால் வீட்டில் சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கப் பெறலாம்.


துர்வாச முனிவர் இந்தப் பகுதியில் இருந்து தவமிருந்தபோது, இங்கேயுள்ள மலையில் பாலகுமாரனாக சுப்ரமணியரைப் பிரதிஷ்டை செய்து வழிபடு! என அருளிச் சென்றாராம் சிவபெருமான். அதன்படி, அங்கே முருகன் விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்து துர்வாசர் வழிபட்டார் என்கிறது ஸ்தல புராணம்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.