அருள்மிகு சிவகாமசுந்தரி அம்மன் உடனுறை திருக்காமேசுவரர் திருக்கோவில், வெள்ளூர், முசிறி வட்டம், திருச்சி மாவட்டம் .
இத்திருக்கோயில் இறைவன் திருக்காமேசுவரர் என்றழைக்கப்
படுகிறார். கிழக்கு நோக்கிக் காட்சியளிக்கும் இக்கோயில் இறைவனுக்கு வில்வாரண்யேசுவரர், ஐஸ்வர்யேசுவரர், லட்சுமிபுரீசுவரர், ஸ்ரீவத்ஸ அனுக்ரஹர் என்ற திருநாமங்களும் உண்டு.
மன்மதன், ரதி, திருமகள், போகர், முசுகுந்த தேவேந்திரன் வழிபட்ட பெருமைக்குரியவர்.
அபய, வரதம் கூடிய திருக்கரங்களோடு, மேலிரு கரங்கள் தாமரை மலர்கொண்டு காட்சி தருகிறார் ஐஸ்வர்ய மகாலட்சுமி. இங்கு லட்சுமிக்கு அபிஷேகம் செய்வதற்கு முன் வில்வமரத்துக்கு முதலில் பூஜை செய்கின்றனர்.
வேறெங்கும் காண இயலாத வகையில், தட்சிண பாகம் என்று கூறப்படும் வடமேற்குப் பகுதியில் மகாலட்சுமி இருக்க வேண்டிய இடத்தில் வில்வமரத்தையும், அதன் நிழலில் ஐஸ்வர்ய மகுடம் தரித்த மகாலட்சுமியையும் இக்கோயிலில் தரிசிக்கலாம்.