சோழ நாட்டின் துணைக் கோட்டங்களில் ஒன்றான பனையூர் நாட்டின் உட்பகுதியான புரையூர் நாட்டில் புகழ் பெற்ற நகராமாகத் திகழ்ந்தது பரவைபுரம்.
பிற்கால சோழர்கள் காலத்தில் தனி ஊராக விளங்கிய பரவைபுரம் தற்போது பனையபுரம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு அமைந்துள்ள ஸ்ரீ சத்தியாம்பிகை உடனான ஸ்ரீ பனங்காட்டீஸ்வரர் திருக்கோவில்.
இத்திருக்கோவிலிலிருந்து சுமார் இரண்டு கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தொரவி ஸ்ரீ கயிலாசநாதர் திருக்கோவில். சைவத் துறவிகளுக்கு இறையிலியாக அளிக்கப்பட்ட இடம் தான் துறவியூர், அந்த துறவீயூர் தான் தற்போது தொரவி என்று அழைக்கப்படுகிறது. ஏழாம் நூற்றாண்டினைச் சார்ந்த பல்லவ மன்னர்களிள் அரிய சிற்பங்கள் சிறப்பு வாய்ந்தவை.
ஸ்ரீ முருகப் பெருமானின் திருமேனியும், கருவறையில் அருள்பாலிக்கும் சிவபெருமானின் லிங்கத் திருமேனியும் சோழர் காலத்திய அமைப்பாகும். இந்த ஆடிக் கிருத்திகை நாளில் இங்கு அருள்பாலிக்கும் ஸ்ரீ ஆறுமுகப் பெருமானை வணங்கி வாழ்வில் வளம் பெறுவோம்.
திண்டிவனம்-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில், விக்கிரவாண்டி சுங்கச் சாவடியையடுத்த தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பனையபுரத்திலிருந்து புதுச்சேரி செல்லும் வழித் தடத்தில் 2 கி.மீ. தொலைவில அமைந்துள்ளது தொரவி ஸ்ரீ கயிலாசநாதர் திருக்கோவில்.
ஓம் முருகா !