Breaking News :

Sunday, December 22
.

ஸ்ரீராமஜெயம் எழுதினால் கிடைக்கும் பலன்கள்


சிலர் ஸ்ரீராம ஜெயத்தை லட்சம் முறை, கோடி முறை என எழுதுகின்றனர். ராம மந்திரம் எழுதுவோருக்கும், சொல்வோருக்கும் எங்கும் எதிலும் ஜெயம் (வெற்றி)உண்டாகும்.

ராம' என்ற மந்திரத்துக்கு பல பொருள்கள் உண்டு. இதை வால்மீகி "மரா''என்றே முதலில் உச்சரித்தார். "மரா'' என்றாலும், "ராம'' என்றாலும்"பாவங்களைப் போக்கடிப்பது'' என்று பொருள். ராமனுக்குள் சீதைஅடக்கம். அதனால் அவரது பெயரையே தனதாக்கிக் கொண்டாள். "ரமா'என்று அவளுக்கு பெயருண்டு. "ரமா' என்றால் "லட்சுமி'. லட்சுமிகடாட்சத்தை வழங்குவது ராம மந்திரம்.

ராம மந்திரம் எழுதுவோருக்கும், சொல்வோருக்கும் எங்கும் எதிலும் ஜெயம் (வெற்றி)உண்டாகும். ராமன்என்ற சொல்லுக்கும் பொருளைத் தெரிந்து கொள்ளுங்கள். "ரா' என்றால்"இல்லை' "மன்' என்றால் "தலைவன்'. "இதுபோன்ற தலைவன் இதுவரைஇல்லை' என்பது இதன் பொருள்.

வேலை கிடைத்தல், திருமணம், வீடு கட்டுதல் போன்ற உலக இன்பங்கள் கருதிய வேண்டுதல்களுக்காக ஸ்ரீராமஜெயம் எழுதுகின்றனர். உலக இன்பங்கள் மட்டுமின்றி, இந்த மந்திரம் அகப்பகை எனப்படும் நமக்குள்ளேயே இருக்கும் கெட்ட குணங்களையும், புறப்பகை எனப்படும் வெளியில் இருந்து நம்மைத் தாக்கும் குணங்களையும் வெல்லும் சக்தியைத் தரும்...

Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.