எல்லா சந்தர்பங்களில் உன்னை அன்போடு அரவணைத்துக் கொண்டு தான் வருகிறேன். என் பிள்ளை உனக்கு செய்ய வேண்டியதை, தக்க சமயத்தில் நன்கு செய்வேன்.
சற்று பொறுமையாக இரு. என் மீது நம்பிக்கையாக இருக்கும் போது உனக்கான நியாயத்தை நான் செய்யாமல் போவேனா?
நீ இழந்த அனைத்தையும் மீண்டும் பெறுவாய். அதற்கு நான் பொறுப்பு. நீ விரும்புவது தாமத மாவது உன் கர்மவினையால்.
உன் சந்தோஷத்திற்காக உன் கர்மாக்களை தட்சணையாக நான் எடுத்துக் கொண்டு, உன க்கு புண்ணியத்தை உண்டாக்கிக் கொண்டு இருக்கிறேன்.
உன் கர்மவினைகளை விரைந்து முடிக்கவே நானும் போராடிக் கொண்டுருக்கிறேன். அது வரை நீ அமைதியாக இரு..
நீ என்னிடம் எதையும் வேண்டினால் தான் நான் செய்வேன் என்று அல்ல. உனக்கு எதை எப்பொழுது எப்படி செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியும்.
உனது ஆசைகள், எண்ணங்கள் அனைத்தும் கூடிய விரைவில் நிறைவேறும். எப்போழுதும் யாரையும் சார்ந்து இருக்காதே.
உனது வாழ்க்கையில் இக்கட்டான நிலையில் எடுக்க வேண்டிய முடிவை நீயே முடிவு செய். உன்னுள் இருக்கும் நான் அதற்கு உதவியும் புரிவேன்.
ஆனால் நீயோ உன் மீது அன்பும் அக்கறையும் இல்லாத உன் சுற்றத்தார்கள் சிலபேரிடம் போய் அறிவுரை கேட்கிறாயே ஏன் ?
எவர் மீதும் கோபம் கொள்ளாதே.அது கொடியது. உதவி புரிபவர்களிடம் மட்டும் அல்லாமல் உதாசீனப்படுத்தியவர்களிடமும் கூட.
ஏன் அனைவரிடமும் அன்பாக பேசு. நீ வருத்த படுவதால் எதுவும் மாறாது. நம்பிக்கையோடு கம்பீரமாக உன் குறிக்கோளை நோக்கி செல்.
நீ அதை அடைய நான் துணை இருப்பேன். இது என் சத்திய வாக்கு. நான் உன் முன்னே தான் சென்று கொண்டு இருக்கிறேன்.
உன் செயல் அனைத்துமாக உன் சாய் அப்பா நான் இருப்பேன். நீ என் பரிபூரண அருளும் ஆசிர்வாதமும் அன்பும் பெற்ற என் பிள்ளை.
ஓம் ஸ்ரீ சாய் ராம்.