உத்திராண்ய காலத்தின் ஆரம்ப மாதமான தை மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமையில் அம்மன் வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. அன்றைய தினங்களில் அபிராமி அந்தாதி, சௌந்தர்ய லஹரி உள்ளிட்ட அம்மன் குறித்த பாடல்களைப் பாடி வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.
தை மாத வெள்ளிக்கிழமை அம்பாளுக்கு உரிய நன்னாள். இந்த நாளில், அம்பாள் குடிகொண்டிருக்கும் ஆலயங்களில், சிறப்பு வழிபாடுகள், விசேஷ பூஜைகள் நடைபெறும். தை மாத வெள்ளிக்கிழமையில், அம்மன் கோவிலுக்கு சென்று அம்மனை வணங்கினால், நம்மையும் நம் குடும்பத்தையும் தழைக்கச் செய்வார்.
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பார்கள். அதேபோல ஒவ்வொரு மாதமும் செவ்வாய்க்கிழமையும், வெள்ளிக்கிழமையும் அம்பிகைக்கு உரிய அற்புதமான நாட்கள் ஆகும். அதனால்தான், செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில், மகாசக்தி குடிகொண்டிருக்கும் தலங்களில் பெண்கள் முதலான பக்தர்கள் பலரும் வணங்கி வழிபடுகிறார்கள்.
அந்த வகையில் தை மாத வெள்ளிக்கிழமைகள், அம்பாளுக்கு ரொம்பவே விசேஷமானவை ஆகும். தை மாத வெள்ளிக்கிழமையான, இன்று அருகில் உள்ள கோவிலுக்குச் சென்று, அம்பாளை தரிசனம் செய்தால் நன்மையாவும் கிடைக்கும். முடிந்தால், செந்நிற மலர்கள் சூட்டி வழிபடலாம். செவ்வரளி மாலை சார்த்தி வணங்குவது சிறப்பு.
வெள்ளிக்கிழமை ராகுகால வேளையில் அம்மன் கோவிலுக்கு சென்று அல்லது அருகில் உள்ள சிவாலயத்துக்குச் சென்று அங்கே உள்ள துர்க்கை சந்நிதியில் விளக்கேற்றி வழிபடுவது, சகல தோஷங்களும், கண் திருஷ்டியும் நீங்கும்.
எனவே, தை வெள்ளிக்கிழமை நாளில், அம்பாளுக்கு செவ்வரளி மாலை சார்த்தி வேண்டிக் கொள்ளுங்கள். துர்க்கை சந்நிதியில் நெய் தீபம் அல்லது எள் தீபமேற்றி வழிபடுங்கள். வீட்டில் உள்ள திருஷ்டி முதலானவை நீங்கும். வீட்டில் மங்கள காரியங்கள் விரைவில் நடக்கும்.
தை வெள்ளியில் அம்மனை தரிசனம் செய்வது கூடுதல் பலனைத் தரும். மேலும், சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதம், வெண்பொங்கல், கேசரி என ஒவ்வொரு வாரமும் ஏதேனும் பிரசாதத்தை வழங்கி அம்மனை வழிபட்டு வந்தால் தனம் தானியம் பெருகி நிறைவான வாழ செய்யுங்கள்.
திருவக்கரையில் குடி கொண்டு இருக்கும் வக்கிரகாளியம்மனின் கவசம் (Vakrakaliamman kavasam) கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் எத்தனையோ, பழமையான காளி கோவில்கள் இருந்தாலும் அவற்றுள் திருவக்கரை வக்கிரகாளி அம்மன் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. ஒருவரின் ஜாதகத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகங்கள் வக்கிர நிலை அடைந்து இருந்தால், திருவக்கரை வக்கிர காளியம்மனை வேண்டுதல் மிகவும் நன்மை பயக்கும். துன்பங்கள் நீங்க திருவக்கரை வக்கிரகாளியம்மன் கவசம் துதித்து தேவியை வழிபடுவோம்.
வக்கிரகாளியம்மன் கவசம் |
ஓம் திருவக்கரை வாழும் செல்வியே போற்றி
ஓம் வக்கிரகாளி அம்மையே போற்றி
ஓம் நற்பவி மந்திர நாயகியே போற்றி
ஓம் திருவேற்காடுதுறை காளி மாரி தாயே போற்றி
ஓம் மாங்காட்டில் வாழும் காமாட்சி யன்னையே போன்றி
ஓம் மூன்றாம் கட்டளையமர்ந்த மூகாம்பிகை தாயே போற்றி
ஓம் பெரிய கருப்பூரில் ஆளும் சாமுண்டிக் காளியே போற்றி
ஓம் நாட்டரசன் கோட்டை வாழும் கண்ணுடைய நாயகியே போற்றி
ஓம் ராகுகால பூஜை ஏற்கும் துர்க்கையே போற்றி
போற்றி போற்றி ஜெகத்ரஷியே போற்றி
போற்றி போற்றி மகிஷாசுர மர்த்தினியே போற்றி
போற்றி போற்றி நற்பவி மந்திர நாயகியே போற்றி
போற்றி போற்றி வக்ர பத்ரகாளியே போற்றி
சிம்ம வாகினியே சிரசைக் காக்க
நெடுமால் சோதரி நெற்றியைக் காக்க
கஜமுகன் தாயே கண்களைக் காக்க
காளி மாதாவே காதினைக் காக்க
கால ராத்ரீயே கரங்களைக் காக்க
மகேஸ்வரியே மார்பினைக் காக்க
ஈசுவரித் தாயே இதயத்தைக் காக்க
வஜ்ரேஸ்வரியே வயிற்றினைக் காக்க
முண்டமாலினியே முதுகைக் காக்க
கோரரூபினியே குதத்தைக் காக்க
துர்க்கா தேவியே தொடையினைக் காக்க
கால கண்டிகையே காலினைக் காக்க
காக்க காக்க காளியே வருவாய்
கண்ணில் ஒளியைக் கண்ணமை தருவாள்
நாவல் நிறத்தை நாரணி தருவாள்
வாக்கினில் உண்மையை வக்கிரகாளி தருவாள்
மனதில் திடத்தை மாகேந்தரி தருவாள்.