திருவாரூர் அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயில் பங்குனி உத்திரப்பெருவிழாவை முன்னிட்டு நேற்று காலை மஹாத்வாஜாரோஹணம் எனும் பெரியகொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவாரூர் என்றால் மிகப்பெரிய தேர்த் திருவிழா தான் அனைவருக்கும் நினைவிற்கு வரும், திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயில் பெரிய கொடிமரம் (பொற்கம்பம்) வரலாற்றினை அறிவோமா...
அபிஷேக கட்டளை மற்றும் அன்னதான கட்டளை வேளாக்குறிச்சி ஆதீனகர்த்தர் 7 ஆவது குருமகாசந்நிதானம் ஶ்ரீலஶ்ரீ மகாதேவ தேசிக சுவாமிகள் காலத்தில் நடைப்பெற்ற திருவாரூா் திருக்கோயில் திருப்பணி மற்றும் மகாகும்பாபிஷேக நிகழ்வின் முன்னதாக தஞ்சை மன்னர் முதலாம் சரபோஜியோல் நூதன பெரிய கொடிமரம் (பொற்கம்பம்) பிரதிஷ்டை செய்யப்பெற்றது.
அதுபொழுது ஶ்ரீலஶ்ரீ குருமகாசந்நிதானம் மீது கொண்ட குருபக்தியால் மகாராஜா பொற்கம்பம் மேடையில் உடைவாளின்றி பஞ்சாட்ச்சர மாலையுடன் மன்னர் குருமகாசந்நிதானம் அருகில் இருப்பது தனிச்சிறப்பு.