திருவோணம் நோன்பு என்பது, திருவோ ண நட்சத்திரத்தோடு கூடிய நன்னாளில் நோற்கும் விரதம். இந்த விரதம் பெருமா ளுக்கு உகந்த அற்புதமான நாள்.திருவோ ண விரதம் மேற்கொள்பவர்களின் வாழ் வில், கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும். வீட்டின் தரித்திரம் விலகும். ஐஸ்வர்யம் பெருகும். மனக்குறைகளும் கிலேசங்க ளும் காணாமல் போகும்.
மிக முக்கியமாக, இந்த நாளில் திருவோ ண விரதநாளில், பெண்கள் திருமாலை தரிசித்து வேண்டிக் கொண்டால், அவர்க ளின் கண்ணீரையும் கஷ்டத்தையும் துடைத்தருள் வார் திருமால். அவர்கள் விரும்பியதெல்லாம் தந்தருள்வார்!
திருமணம் தாமதமாகிக் கொண்டிருக்கிற தே எனும் நிலை முற்றிலுமாக மாறும். கல்யாண மாலை தோள் சேரும். அதே போல், நீண்ட காலம் குழந்தை இல்லையே என ஏங்கித் தவித்தவர் களுக்கு, குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
திருவோண விரதம் இருக்கும் பக்தர்கள், மகா விஷ்ணுவை வணங்கி அவரின் திருநாமங்களைச் சொல்லிக்கொண்டே இருங்கள். விஷ்ணு புராணங்களைப் பாராயணம் செய்யலாம்.
சுவாமிக்கு நிவேதித்தப் பொருட்களை எல்லோருக்கும் விநியோகித்து மகிழலா ம்.விரதம் இருக்க முடியாதவர்கள் அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபட வேண்டும்.
இன்றைய நாளில், வீட்டில் நெய் விளக்கே ற்றி வழிபடுங்கள். சகல தோஷங்களும் விலகும். சந்தோஷம் மட்டும் வீட்டில் நிறைந்திருக்கும் என்பது உறுதி.
திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், சந்திர திசை நடப்பவர்கள் பெருமாளை குலதெய்வமாகக் கொண்டவர்கள், சுக்கிர யோகம் தடைப்பட்டிருப்பவர்கள், பெருமா ளை தரிசித்து துளசி மாலை சார்த்தி பிரா ர்த்தனை செய்து கொள்ளுங்கள். கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். கஷ்டங்களும் நஷ்டங்களும் காணாமல் போகும்
திருவோணம் நட்சத்திரம்
சிரவணம் என்னும் திருவோணம் விரதம் இருப்பவர்கள் இருக்கலாம். ஶ்ரீ மகா விஷ் ணுவின் நட்சத்திரம் திருவோணம். திரும லை வெங்கடாஜலபதி பெருமாளுக்கு வேண்டி கொண்டதை ஒப்பிலியப்பன் பெருமாளுக்கு செய்யலாம் என்பார்கள்.
இன்று ஒருவெள்ளை துணியில் தண்ணீர் மஞ்சள் கலந்து அதை உலர்த்தி பின்னர் அதில் ஒன்றே கால் ரூபாய் முடிந்து வைக் க சொல்வார்கள் பெரியவர்கள். இப்பொ ழுது கால் ரூபாய் இல்லாத காரணத்தால் ஒரு ரூபாய் நாணயம் இத்துடன் கொஞ்சம் துளசி சேர்த்துஉங்கள் பிரார்த்தனைகளை பெருமாளிடம் சொல்லி அந்த மஞ்சள் துணியில் வைத்து முடித்து போட்டு பூஜை அறையில் வையுங்கள்.
உங்கள் பிரார்த்தனைகளை சீக்கிரம் நிறை வேற்றி கொடுப்பார் பெருமாள். பிரார்த்தனை நிறைவேறியதும் அந்த முடிந்து வைத்த மஞ்சள் துணியை அப்படி யே எடுத்து கொண்டு கும்பகோணம் ஒப்பிலியப்பன் கோவில் போய் அதை உண்டியலில் சேர்க்கலாம்.
அங்கு போக இயலாதவர்கள் அந்தந்த ஊரில் இருக்கும் பெருமாள் கோவிலில் குறிப்பாக ஒப்பிலியப்பன் கோவில் ஆக இருந்தால் உத்தமம். கூகிள் பார்த்து உங்கள் ஊரில் இருக்கும் ஒப்பிலியப்பன் பெருமாள் கோவிலில் சேர்ப்பது நன்று.
திருவோணம் நட்சத்திரத்தில் ஏகாதசி போ ல விரதம் இருப்பவர்கள் உண்டு. அப்படி இருக்க முடியாதவர்கள் ஒரு வேளையாவ து உப்புபோடாமல் உண்ணலாம். அனைவ ரது பிரார்த்தனை நல்லபடியாக நடக்கும்.
திருவோண நட்சத்திர விரதம் எப்படி மேற்கொள்வது?
திருவோண விரதத்தை மேற்கொள்பவர் கள் முதல் நாள் இரவே உணவு உண்ணக் கூடாது. திருவோண விரத தினத்தில் காலையில் எழுந்து குளித்து பெருமாள் ஆலயத்து சென்று துளசி மாலை சாத்தி தரிசித்து வர வேண்டும்.
காலையில் துளசி தீர்த்தம் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். பெருமாள் பாடல்களை பாராயணம் செய்தல் வேண் டும்.மதிய உணவில் உப்பு சேர்க்காமல் சாப்பிட வேண்டும்.
மாலையில் சந்திரனை தரிசிக்க வேண்டு ம். இப்படி செய்தால் சந்திரனின் முழு அருள் கிடைப்பதோடு, சந்திர தோஷம் இருந்தால் நிவர்த்தி ஆகும். நல்ல இனிமையான வாழ்க்கை அமையும்.
திருவோண விரதம் இருப்பதால் கல்விச் செல்வம், மற்றும் பொருட்செல்வம் அனை த்தும் பெருகும். திருவோண விரதத்தன்று நாம் இறைவனுக்கு நெய்வேதனம் செய்வது வழக்கம். சுண்டல் பிரசாதமாக பெருமாளுக்கு படைத்தால் நன்மைகள் நடக்கும்.
திருவோண நட்சத்திரரத்தன்று விரதம் இருந்தால் சந்திரதோஷம் விலகுவதுடன், சந்தோஷ மான வாழ்வு அமையும். 12 திரு வோணம் நாட்களில் விரதம் இருந்தால் வாழ்வில் செழிப்பின் உச்சத்துக்கே போய் விடுவீர்கள். இது பலரும் அனுபவப்பூர்வ மாக கண்ட உண்மை. திருப்பங்களை தரும் திருவோண நட்சத்திர விரதம் இருந்து பெருமாலின் அருள் பெருங்கள்.
பெருமாளின் திருநட்சத்திரமான திருவோ ண நட்சத்திரமான இன்று திருவோண விரதம் மேற்கொள்ளுங்கள். திருமாலை ஆலயம் சென்று தரிசியுங்கள். வாழ்வில் எல்லா சந்தோஷங்களை தந்தருள்வார் பெருமாள்.