Breaking News :

Thursday, November 21
.

திருப்பதி ஏழுமலையானை அலங்கரிக்கும் ஆபரணங்கள்?


பெருமாளின் திருமேனி தாங்கி நிற்கும் பெரும் பாக்கியமடைந்த ஆபரணங்களைப் பற்றிய பதிவு இது. நிமிட நேரமே தரிசனம் என்றாலும் கண்கள், மனம் நிறைந்த அற்புத தரிசனத்தில் நாம் சில நேரம் கவனிக்கத் தவறிய ஆபரணங்கள் குறித்தும் இந்தப் பதிவில் அறிந்துகொள்ளலாம்.

தங்க பத்ம பீடம் (திருவடியின் கீழ் இருக்கும்)
தங்கத்திலான திருப்பாதங்கள்
சிறு கஜ்ஜினுபுராலு : திருப்பாதங்கள் மேலே அணியும் ஆபரணம்.
பாகடாலு : கால்களில் அணியும் ஆபரணம்.
காஞ்சி குணம்: அரைஞாண் கயிறு
நாகா வேஸ்பண உதரபந்தம் - மத்தியாபரணம்
சிறுகண்டல தசாவதார ரசனா - தசாவதாரம் , ஸ்ரீ பூ தேவி தாயார் , எம்பெருமான், 18 மூர்த்திகள் சேர்ந்த அரைஞாண்கயிறு.
சிறிய கழுத்து மாலை
பெரிய கழுத்து மாலை - எம்பெருமான் வக்ஷஸ் தலம் வரை அணிவிக்கப்படும் மாலை.
தங்க புலி நக மாலை - திருமார்பில் அணியப்படும்.

ஐந்து வரிசை கோபு ஹாரம் - தொப்புள் கொடி பகுதியில் அணியப்படும்.
தங்க யக்னோ பவீதம்- பூ நூல் - ஆறு வரிசை கொண்ட வைரத்தினாலான பூ நூல்.

சாதாரண பூணூல்.

துளசி இதழ் மாலை- கடிஹஸ்த மாலை . 108 இலைகள் கொண்ட மாலை.
சதுர்புஜ லட்சுமி மாலை.(108 லட்சுமி அச்சு கொண்ட மாலை)
108 அஷ்டோத்தர சத நாம மாலை.

சஹஸ்ர நாம மாலை - 1000 காசுகளுடைய ஐந்து வடம் மாலை.
சூர்ய கடாரி - தங்க வாள் இடுப்பு பகுதியில் அணியும் ஆபரணம்.
வைகுண்ட ஹஸ்தம்- வலது கை
கடி ஹஸ்தம் - இடது கை
கடியாலம்- கங்கணம் (வளையல்)
நாகாபரணம்
பூஜ கீர்த்திகள்
கர்ணபத்திரம்- (காதுகளில் அணியும் ஆபரணம்)
சங்கு சக்ரம் - பின்னிரு கைகளில்
கிரீடம் (தலைக்கு)

ஓம் நமோ வெங்கடேசாய நமஹ

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.